நடிகை ராதிகாவை கைநீட்டி அடிச்சது..! இதை மறக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட் ரகசியங்களை பகிர்ந்த நீலிமா
சென்னை: நடிகை நீலிமா தான் வாணி ராணி சீரியலில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அந்த சீரியலில் நீலிமா வில்லியாக நடித்திருந்த நிலையில் நடிகை ராதிகாவை பாடாய்படுத்தி எடுத்த விதம் குறித்து அந்த பேட்டியில் நீலிமா பேசியிருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
ஒரு சில நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி கதாநாயகியாகவும் சினிமாவில் சாதித்திருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் நீலிமா. இவர் தேவர்மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி இருந்தார். அப்போது தொடங்கிய இவருடைய நடிப்பு இப்ப வரைக்கும் தொடர்ந்து வருகிறது. அதிலும் கடந்த வருடத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் புகழ் நடித்த 1947 திரைப்படத்தில் கௌதம் கார்த்திக்கின் அம்மாவாகவும் நடித்திருந்தார்.

அதுபோல நான் மகான் அல்ல திரைப்படத்தில் கார்த்தியின் தோழியாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் இவர் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை அவார்டும் வாங்கி இருந்தார். அதுபோல அமளி துமளி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படத்திலும் நடித்திருந்தார். அதிலும் பண்ணையரும் பத்மினியும் திரைப்படத்தில் இவர் அப்பாவிடம் இருந்து மொத்த சொத்தையும் ஆட்டையை போடும் மகளாக நடித்து இருந்தார்.
அப்பா தன்மீது வைத்திருக்கும் பாசத்தை பயன்படுத்தி கார் வேண்டும், வீடு வேணும், அது வேணும் இது வேணும் என்று வரும்போது எல்லாம் ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போகும் பல மகள்களின் கேரக்டரை அப்படியே தத்ரூபமாக இவர் நடித்திருந்தார். அது பெரிய அளவில் பேசப்பட்டது. அதுபோல பாண்டவர் பூமி, திமிரு, மொழி, தம் போன்ற பல திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் 50க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார். மெட்டி ஒலி சீரியலில் தொடங்கி பல ஹிட்டான சீரியலில் நடித்து இருக்கிறார்.
அந்த வரிசையில் ஒன்றுதான் வாணி ராணி சீரியல். இந்த சீரியலில் டிம்பிள் கேரக்டரில் நீலிமா நடித்திருந்தார். இந்த நிலையில் அந்த சீரியல் அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் நீலிமா பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில், எனக்கு வாணி ராணி சீரியலில் நடித்ததை மறக்கவே முடியாது. அந்த சீரியலில் என்னுடைய கணவராக நடித்த நடிகர் அருண் குமார் தான் என்னுடைய நெருங்கிய நண்பர். இத்தனை வருடங்களாக எங்களுடைய நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அதுபோல ஏழு வருடங்களுக்கு பிறகு நானும் அருண் குமாரும் வானத்தைப்போல சீரியலில் மீண்டும் ஒரே ஜோடியாக என்ட்ரி கொடுத்திருக்கிறோம். வாணி ராணி சீரியலில் நான் பேசுவதற்கு அருண்குமார் எதிர்த்து பேச மாட்டார். ஆனால் வானத்தைப்போல சீரியல் அப்படி இல்ல. அதுபோல வாணி ராணி சீரியல் டிம்பிளாக நான் நடித்ததற்கு பலபேர் என்னை திட்டி இருக்கிறார்கள்.
நான் ராதிகாவை கைநீட்டி அடிச்சதை மறக்க முடியாது. அந்த சீன் நடிப்பதற்குள் நான் பட்ட பாடு இருக்கே... அந்த காட்சி படமாக்குவதற்காக நான் பல டேக் எடுத்து இருந்தேன். ஆனால் ராதிகா மேடம் எல்லா இடத்திலும் கூலாக நாம் நடிக்க திணறும் இடத்தில் நமக்கு ஈஸியாக எப்படி செய்தால் நன்றாக இருக்குமோ அதை சொல்லி தருவார்.
நம்முடைய டிரெஸ்ஸிங்கில் இருந்து நாம் பேசும் டயலாக் வரைக்கும் பல விஷயங்களை நிதானமா ராதிகா மேடம் சொல்லித் தருவாங்க. என்னால வாணி ராணி சூட்டிங் ஸ்பாட்டை அவ்வளவு சீக்கிரமாக மறக்க முடியாது. அந்த சூட்டிங் ஸ்பாட்டில் நாங்கள் எல்லோருமே ஒரு குடும்பம் போல தான் இருந்தோம் என்று நீலிமா தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications