"கண்ணாத்தாள்” படத்தில் நடித்த நீனாவை ஞாபகம் இருக்கா? குழந்தைகளோடு எப்படி மாறிவிட்டார்!
சென்னை; கண்ணாத்தாள் திரைப்படத்தில் நடித்த நீனா அதற்குப் பிறகு திரைத்துறையை விட்டு விலகி தற்போது குடும்பத்தோடு எடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக நாயகன் திரைப்படத்தில் நடித்த நீனா சில சீரியல்களிலும் நடித்து இருந்தார். இப்போது சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி இருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக எத்தனையோ பேர் நடித்திருந்தாலும் இன்றும் சினிமாவில் ஒரு சிலரைத்தான் அதிகமான ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை நீனா. இவர் கமல்ஹாசனுக்கு மகளாகவும், நடிகர் அஜித்குமாருக்கு தங்கையாகவும், பிரகாஷ்ராஜுக்கு மனைவியாகவும் பல முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார். பொதுவாக ஒரு சில நடிகைகளை பார்க்கும்போது பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கும் அதுபோன்ற ஒரு நபர் தான் நீனா.

குழந்தை நட்சத்திரம்
நடிகை நீனா 1990 இல் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான கேளடி கண்மணி என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார். அதைத் தொடர்ந்து இயக்குனர் செல்வா இயக்கத்தில் நீலா மாலா என்ற நாடகத்திலும் நடித்திருக்கிறார். இப்ப வரைக்கும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடல்களில் ஒன்றாக இருக்கும் "கற்பூர பொம்மை ஒன்று" எனும் அம்மா சென்டிமென்ட் பாடலில் இவர் தான் க்யூட்டாக நடித்திருப்பார்.
நாயகன் கமல் மகள்
அது மட்டுமில்லாமல் நடிகர் கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படத்தில் கமல்ஹாசனின் மகளாக இவர் நடித்திருப்பார். அதிலும் குறிப்பாக அந்த ட்ரெயின் போகும்போது "அப்பா சொல்லு நீதான அம்மாவை கொன்ன" என்று இவர் கேட்கும் கேள்வி அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. அந்த அளவிற்கு குழந்தையிலே தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி இருந்தார்.
நாயகன் திரைப்படத்தில் இவருடைய நடிப்பை பார்த்த இயக்குனர் மணிரத்தினம் தெலுங்கில் இவரை வைத்து "கீதாஞ்சலி" என்னும் திரைப்படத்தை எடுத்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் நாகார்ஜுனாவின் மகளாக நீனா நடித்திருப்பார். இந்த திரைப்படம் தான் தமிழில் "இதயத்தை திருடாதே" எனும் பெயரில் எடுக்கப்பட்டது. அதிலும் இவர்தான் குழந்தை நட்சத்திரம் ஆக நடித்திருப்பார்.

அஜித்துக்கு தங்கை
அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் நடிகர் அஜித் குமார் நடித்த "ராசி" திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருந்தது. இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது அஜித்குமார் கூட இவரை பாராட்டியதாக அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
சில வருடங்களிலே இவருக்கு விடுதலை என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் தான் இவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். வயதான நபரை திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் பெண்ணின் கஷ்டங்கள் அந்த திரைப்படத்தில் தத்ரூபமாக காட்டி இருப்பார். அதைத் தொடர்ந்து இவர் நடித்து பிரபலமானது "கண்ணாத்தாள்" திரைப்படம் தான்.

மிரட்டிய கண்ணாத்தாள்
கண்ணாத்தாள் திரைப்படத்தில் ஒரு குடும்ப தலைவியாகவும், கடவுளாகவும் இவர் அசத்தியிருப்பார். அதற்குப் பிறகு இவர் திரைப்படங்களில் நடிக்காமல் விலகி இருந்தார். அந்த நிலையில் தான் சில வருடங்களுக்கு பிறகு வெளியான சித்தி சீரியலில் காவேரி கேரக்டரில் நடித்திருப்பார். சித்தி சீரியலில் இவருடைய நடிப்பு அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. ஆனால் அந்த சீரியலுக்கு பிறகு இவர் நடிக்கவில்லை.
வெளிநாட்டில் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளோடு செட்டில் ஆகிவிட்ட நீனா சமீபத்தில் தன்னுடைய குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. நீனாவா இது? எப்படி மாறிவிட்டார்? என்று ரசிகர்கள் வியந்து போய் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications