தேவயானி செஞ்சதை மறக்கவே மாட்டேன்.. ராஜகுமாரனிடம் என்னை பற்றி.. சீரியல் நடிகையின் அம்மா எமோஷனல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தங்கமகள் சீரியலில் நடித்து வரும் நடிகை நீபாவின் அம்மா சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை தேவயானி குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. தேவயானியும் அவருடைய கணவரும் இயக்கி தயாரித்த திரைப்படத்தில் தான் வாய்ப்பு கேட்டபோது தேவயானி செய்த உதவி குறித்து வெளிப்படையாக நீபாவின் அம்மா பேசி இருக்கிறார்.
நடிகை தேவயானி ஆரம்பத்தில் டீச்சராக இருந்து பிறகு நடிகையாக மாறி இப்போது முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் நடித்திருக்கிறார். அதே நேரத்தில் அவரைப்பற்றி வெளியே தெரியாத ஒரு ரகசியத்தை பற்றி சீரியல் நடிகை நீபாவின் அம்மா பகிர்ந்து இருக்கிறார்.

சீரியல் நடிகை நீபா ஆரம்பத்தில் சீரியல்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் காவலன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் ஜோடியாக நடித்திருப்பார். அதுபோல பள்ளிக்கூடம், அம்முவாகிய நான் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தங்கமகள் சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதுபோல நீபா வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் பிரபலமான டான்ஸ் மாஸ்டர்களாக இருந்த மாலினி மற்றும் வாமன் தம்பதியின் மகள் தான்.
மாலினி மற்றும் வாமன் தம்பதி பல வருடங்களாகவே பல திரைப்படங்களில் டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கிறார்கள். அதுபோலவே நீபாவும் சிறந்த டான்ஸராக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். அதிலும் மானாட மயிலாட நிகழ்ச்சி, மஸ்தானா மஸ்தானா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நீபாவின் அம்மா மாலினி தான் டான்ஸ் மாஸ்டராக இருந்த காலகட்டத்தில் தாங்கள் சந்தித்த பிரச்சனைகள் மற்றும் மறக்க முடியாத நினைவுகள் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் குழந்தை பருவத்திலேயே இந்த பில்டில் வந்து விட்டேன். அதற்கு பிறகு என்னுடைய கணவரும் என்னுடைய பீல்ட் என்பதால் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இரண்டு பேருமே ஒருவருக்கு ஒருவர் சப்போர்ட்டாக இருந்து வந்தோம்.

சில நேரங்களில் வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறோம். அதிலும் நான் யாரிடமும் வாய்ப்புக்காக பேசியது கிடையாது. என்னுடைய கணவர் தான் எனக்காக வாய்ப்பு கேட்டு போயிருக்கிறார். அப்படியே எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அவருடைய மறைவுக்குப் பிறகு என்னுடைய வாழ்க்கையே மாறி இருந்தது. அந்த நேரத்தில் தான் நடிகை தேவயானியிடம் நான் அவங்க ப்ரொடியூஸ் பண்ணுன "காதலுடன்" திரைப்படத்தில் வாய்ப்பு கேட்டு போயிருந்தேன்.
அவங்க என்னை பார்த்ததும் உங்க நீங்க எவ்வளவு பெரிய உழைப்பாளி. உங்களுடைய அனுபவம் எங்களுக்கு தேவை என்று சொல்லி அந்த படத்தில் எல்லா பாடல்களுக்கும் என்னை தான் டான்ஸ் மாஸ்டராக பயன்படுத்தினார். என்னை பார்த்ததும் அவருடைய கணவரிடம் இவங்களுக்கு நாம கண்டிப்பா வாய்ப்பு கொடுக்க வேண்டும். யாரையோ வச்சி ட்ரை பண்ணி பாக்குறத விட இவங்களோட அனுபவமும் ஆசியும் நமக்கு வேணும் என்று சொன்னாங்க.
அதனால தேவயானி செஞ்சத நான் மறக்கவே மாட்டேன். அவங்க அந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த பிறகு தான் எனக்கு மீண்டும் வாய்ப்புகள் வரத் தொடங்கியது என்று அந்த பேட்டியில் மாலினி பேசி இருக்கிறார். அதோடு மாலினி "பனிவிழும் இரவு நனைந்தது நிலவு" என்ற பாடல் உட்பட பல பாடல்களில் டான்சராகவும் இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications