லீக் ஆன வீடியோ.. விஜய், திரிஷாகூட பிளைட்டில் போனது இவரா? "கழுகுப்பார்வை"யில் கவனம் தவெக: பிரபலம் நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டப்பேரரவை தேர்தல் நெருங்க நெருங்க, இன்னும்கூட விமர்சனங்கள் எழும். கழுகுபார்வையோடு பலர் விஜய்யின் அரசியலை குறிபார்த்து அடிக்க காத்திருக்கும்போது, சற்று கவனமாக இருக்க வேண்டும். அப்படி நடந்துகொண்டால், வரும் 2026-ல் சக்தி வாய்ந்த தலைவராக விஜய் உருவெடுக்க வாய்ப்புள்ளது" என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Cheyyaru Balu Official யூடியூப் சேனலில், செய்யாறு பாலு விஜய் பற்றி பேசியிருக்கிறார்.. அதில், "கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துக்கு மட்டும் போக தெரியுது.. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மக்களை நேரில் போய் விஜய் சந்திக்கவில்லையே? பனையூரில் டி.பி.சத்திரத்திலுள்ளவர்களை மட்டும் கூப்பிட்டு நிவாரணம் தந்துள்ளீர்களே?

vijay trisha

அவ்ளோ தூரம் கல்யாணத்துக்கு போயிருக்கும்போது, திரிஷாவை ஏன் கூட்டிட்டு போகணும்? தனிவிமானத்தில் ஏன் போகணும்? " என்றெல்லாம் விஜய் விமர்சனங்கள் எழுந்தபடி உள்ளன. ஆனால், இந்த விமர்சனங்களை ஏற்க முடியவில்லை.

ஜஸ்டிஸ் சங்கீதா: தொடர்ச்சியாகவே விஜய் - திரிஷா மீது விமர்சனங்கள் இருந்து வருகிறது. அதற்குள் "ஜஸ்டிஸ் சங்கீதா" என்று சோஷியல் மீடியாவில் டிரெண்டாக்கிவிடுவதெல்லாம் ரொம்ப ஓவர்... இதனால் விஜய்யின் தனிமனித ஒழுக்கம் பாதிக்கப்படும் என்று சொல்லிவிட முடியாது. திரிஷாவுடன் விஜய்யை இணைத்து பேசுவதால், அவரது அரசியல் பயணத்துக்கு கரும்புள்ளி விழும் என்றெல்லாம் உறுதியாக சொல்லவும் முடியாது.

நடிகர் விஜய்யாக, கீர்த்தி சுரேஷ் கல்யாணத்தில் கலந்துகொள்ளலாம், வாழ்த்தலாம் பரிசு பொருட்களை தரலாம்... தனி விமானத்தில் போகலாம்.. ஆனால், தவெக தலைவராக, ஒரு மாநாடு நடத்தி அதில் 10 லட்சம் பேரை காண்பித்தாகிவிட்டது. அதற்கு பிறகு விஜய் என்ன செய்தாலும், பேசினாலும் அது செய்தியாகிறது. அவரை பின்தொடர்ந்து கூட்டம் ஒன்று வருகிறது.. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவையும் தாண்டி, அன்றைய தினம் விஜய் பேசியதுதான் இன்றுவரை ஹைலைட்டாக உள்ளது. அப்படியிருக்கும்போது, மக்களால் கவனிக்கப்படக்கூடிய தலைவராக இருக்கிறார்.

எப்போதுமே அரசியல் ரீதியாக ஒருவரை எதிர்க்க வேண்டுமானால், அரசியல் ரீதியாக மட்டுமே எதிர்க்க வேண்டும். தனிமனித தாக்குல் என்றால், அனைவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் எடுக்க வேண்டும். அப்படி பார்த்தால் எத்தனையோ அரசியல் தலைவர்கள், நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார்கள்.

நிக்கிதா: ஒரு சம்பவத்தை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்.. சில வருடங்களுக்கு முன்பு நிக்கிதா என்று ஒரு நடிகை, தமிழ் படங்களில் நடித்து வந்தார்.. சரோஜா படத்தில் பாட்டில்தான் நிக்கிதா பிரபலமானார். ஒருமுறை ஓட்டலில் சந்தித்த பிரபல தெலுங்கா தயாரிப்பாளர் ராமநாயுடு, தன்னுடைய படத்தில் நிகிதாவை அறிமுகப்படுத்தினார். இவர்தான் ராணாவின் தாத்தா.. ராமநாயுடுவை சுருக்கிதான் ராணா என்று வைத்திருக்கிறார்.

ஆனால், கன்னட சினிமாவில், நிகிதாவும், தர்ஷனும் டூகெதரில் இருப்பதாக கிசுகிசு பெரிதாக பரவியது.. 3 வருடம் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்க தடையும் போடப்பட்டுவிட்டது. இந்த கிசுகிசுவால் கொந்தளித்துபோன தர்ஷன் மனைவி, போலீசில் நிகிதா, தன்னுடைய கணவர் மீது புகாரும் தந்தார். அதற்கு பிறகு இதுகுறித்த விசாரணையில், லிவிங் டூகெதரில் இவர்கள் வாழவே இலலை என்றும், அத்தனையும் பொய் என்பதும் தெரியவந்தது. இதுமோதிரி எத்தனையோ இன்னும் எத்தனையோ உதாரணங்கள் உள்ளது.

கரும்புள்ளி: எனவே, எந்தவிதமான உண்மையான ஆதாரமும் இல்லாமல் யாரையும் தவறாக பேசக்கூடாது. ஒரே விமானத்தில் பயணித்தது, லிப்ட்டில் ஒன்றாக சென்றது, இதையெல்லாம் சொல்லி ஒருவரது அரசியல் வாழ்க்கைக்கு கரும்புள்ளி பூசுவது தவறு.. ஒன்றரை வருடத்தில் தேர்தல் வரப்போகிறது. இனிமேல் விஜய் உஷாராக இருக்க வேண்டும். பெண்களின் ஓட்டு இருப்பதாக, ஒரு புள்ளி விவரமும் சொல்கிறது. எனவே, விஜய் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற இமேஜ் தாக்குதல்கள் வரத்தான் செய்யும்.

அதுமட்டுமல்ல, தனி விமானத்தில் மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டு விஜய்யை அழைத்து சென்றதே ஒரு பாஜக பிரமுகர் என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர் பாஜகவை சேர்ந்தவர்தான். ஆனால், விஜய்யுடன் சென்றவர் அவரது கார் டிரைவர் ராஜேந்திரன்.. இவர் விஜய்யின் பர்சனல் டிரைவர்.. குடும்ப நண்பரும்கூட..

நெருக்கமானவர்: 40 வருடம் இவர்தான் விஜய்க்கு டிரைவராக உள்ளார்.. தன்னுடைய தந்தையுடன் இருந்தவர்களை எல்லாம் விஜய் உதறி தள்ளி ஓரம்கட்டியபோது, ராஜேந்திரனை மட்டும் தன்னுடன் வைத்து கொண்டுள்ளார். அந்த அளவுக்கு நெருக்கமானவர் ராஜேந்திரன்.. அதனால் என்ன ஏதென்றே தெரியாமல் கண்டபடி யாரும் பேசக்கூடாது. இதை வைத்தெல்லாம் விஜய்யின் இமேஜை காலி செய்யவும் முடியாது.

நாம் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.. ஒரு நடிகராக என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் தவெகா கவனமாக இருக்கவேண்டும். களத்துக்கு நேரடியாக வரவேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். திரையில் பார்த்த விஜய்யை தங்கள் தெருவில், தங்கள் பகுதியில் பார்க்க விரும்புகிறது இந்த சமூகம்.

கழுகுபார்வை: தேர்தல் நெருங்க நெருங்க, இன்னும்கூட விமர்சனங்கள் எழும். கழுகுபார்வையோடு பலர் விஜய்யின் அரசியலை குறிபார்த்து அடிக்க காத்திருக்கும்போது, சற்று கவனமாக இருக்க வேண்டும். அப்படி நடந்துகொண்டால், வரும் 2026-ல் சக்தி வாய்ந்த தலைவராக உருவெடுக்க வாய்ப்புள்ளது" என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+