கவுண்டமணி எப்படிப்பட்டவர்னு தெரியுமா? என்னை பற்றி “அந்த” வார்த்தை சொன்னாரு! நடிகை பசி சத்யா எமோஷனல்
சென்னை: வெள்ளி திரையில் முக்கிய கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை பசி சத்யா சின்ன திரையிலும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் கவுண்டமணி குறித்து வெளிப்படையாக பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் கவுண்டமணி முன்னணி நடிகராக இருக்கும் போது நான் அவருக்கு ஜோடியாக நடிக்க கூடாது என்று தகராறு செய்திருந்தார் என்று பசி சத்யா பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நக்கல் மன்னனாக வாழ்ந்தவர் என்றால் அது கவுண்டமணி தான். தன்னுடைய திரைப்படங்களின் காமெடி காட்சிகளில் அதிகமாக நக்கல் நையாண்டித்தனம் செய்து கதாநாயகர்களை கூட இவர் கிண்டல் செய்வதை பார்க்க முடியும். இப்படியான நிலையில் கவுண்டமணி குறித்து பசி சத்யா பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆரம்ப காலகட்டத்தில் நாடகங்களில் நடித்து பெயர் வாங்கிய கவுண்டமணிக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் திரைப்படங்களில் அறிமுகமாகும் போது காமெடியனாக அறிமுகமான கவுண்டமணி தன்னுடைய தனித்துவத்தால் தன்னுடைய கால் சீட்டுக்காக கதாநாயகர்கள் காத்திருக்கும் நிலை வரைக்கும் உயர்ந்திருந்தார்.
அதுபோல காமெடியன்களில் லட்சத்தில் சம்பளம் வாங்கிய முதல் நடிகரும் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலகட்டத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் உடைய காம்பினேஷன் மக்கள் மத்தியில் அதிகமாக பிடித்து போக பிறகு கவுண்டமணியோடு நடிப்பதற்காக பல நடிகர்கள் காத்திருந்தார். அதுபோல சினிமாவில் அனைவரையும் தன்னுடைய வசனத்தால் வெளுத்து வாங்கிய நடிகர் கவுண்டமணி அரசியலையும் தன் வசனங்கள் மூலமாக அடிக்கடி தாக்கி இருப்பார்.
இப்படியான நிலையில் முன்பு மாதிரி இப்போது கவுண்டமணி அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகை பசி சத்யா சமீபத்தில் ஒரு பேட்டியில் கவுண்டமணி குறித்து பேசி இருக்கிறார். அதில் நானும் கவுண்டமணியும் ஆரம்பத்தில் நாடகங்களில் ஒன்றாக ஜோடியாக நடித்திருக்கிறோம். அந்த நாடகங்களில் கவுண்டமணி ஹீரோவாக இருப்பார்.
நான் அவருக்கு ஜோடியாக இருந்திருக்கிறேன். அதுவும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்திருந்தது. ஆனால் மலையாளத்தில் பேபி என்ற இயக்குனர் இயக்கிய திரைப்படமான சங்கு புஷ்பம் என்ற திரைப்படம் தமிழில் ரீமேக் எடுத்தார்கள். அந்த திரைப்படத்தை இயக்குனர் விஜயன் தான் இயக்கியிருந்தார். அந்த திரைப்படத்தில் ஒரு அம்மா தான் கணவனின் கொடுமையால் வயிற்றில் இருக்கும் குழந்தையை இழந்து விடுவார்.
அதனால் அந்த தாய் பித்து பிடித்தவள் போல ஆகிவிடுவார். இந்த கதையில் பசி சத்யா மற்றும் அவருக்கு ஜோடியாக கவுண்டமணியை நடிக்க வைப்பதாக முதலில் இருந்தார்களாம். ஆனால் பசி சத்யா தான் தனக்கு ஜோடி என்பதை தெரிந்ததும் கவுண்டமணி தயாரிப்பாளரிடம் இவளை எல்லாம் எதுக்கு போடுறீங்க? வேற யாரையாவது நடிக்க வைக்கலாமே என்று கேட்டாராம்.

அதற்கு விஜயன் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி விடுங்கள் என்று சொல்லிவிட்டார் என்று பசி சத்தியா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். பிறகு கவுண்டமணி நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடிகர் அனுமந்த் நடித்தார் என்று அந்த பேட்டியில் பேசிய பசி சத்தியா கூறியிருக்கிறார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications