திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆன "பாவனி”.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. கையில் "அதை” கவனிச்சீங்களா?
சென்னை: விஜய் டிவியில் சின்னத்தம்பி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை பாவனி ரெட்டி தற்சமயம் உடல்நிலை குறைபாட்டால் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
பாவனி ரெட்டிக்கு சின்னதம்பி சீரியலுக்குப் பிறகு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் பாவனி மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பது ரசிகர்களின் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய் டிவியில் சின்னதம்பி சீரியல் "நந்தினி" கேரக்டரில் அதிகமான ரசிகர்களை நடிகை பாவனி ரெட்டி கவர்ந்திருந்தாலும் இவருக்கு இணையத்தில் ஒரு மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். இணையத்தில் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி நடிகை ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்கும் விதமாக அதிகமான ரசிகர்களை கவர்ந்து கொண்டு இருந்தார்.
சின்னதம்பி சீரியலுக்கு பிறகு ஒரு சில சீரியல்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் அதுவெல்லாம் சீக்கிரமாக முடிவுக்கு வந்துவிட்டது. அந்த நேரத்தில்தான் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்து கொள்வதற்கு பாவனிக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பாவனி வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட்டது. ஏற்கனவே பாவனி நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்திருந்தார். ஆனால் அவர் திடீரென தற்கொலை செய்து விட்டதால் பாவனி தனியாகத்தான் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரோடு ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட டான்ஸ் மாஸ்டர் அமீருக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது அதை பற்றி வெளியே சொல்லாமல் இருந்த பாவனி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக அமீரோடு டான்ஸ் ஆடி அதில் டைட்டில் வெற்றி பெற்றதும் தன்னுடைய காதலை இணையத்தில் அனைவருக்கும் தெரிவித்திருந்தார்.

தங்கள் காதலை பாவனியும் அமீரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு இவர்கள் இருவரும் எங்கே சென்றாலும் ஒன்றாக தான் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக நடிகர் அஜித் குமார் நடித்த திரைப்படத்திலும் இவர்கள் இருவரும் ஜோடியாகவே நடித்திருந்தனர். இந்த நிலையில் புதியதாக வீடு வாங்கி இருக்கும் பாவனி மற்றும் அமீர் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
இந்த நிலையில் பாவனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பது போல, ஹாஸ்பிடலில் கையில் போடப்பட்ட டிரிப்ஸ் பாண்டேஜ் உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் என்ன ஆச்சு..? என்று தொடர்ச்சியாக கேட்டு வருகின்றனர். அதே நேரத்தில் என்ன நடந்தது என்பதை பற்றி பாவனி எதுவும் தெரிவிக்கவில்லை. அதுபோல அமீர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
-
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
நான் சின்ன பையன்.. சூர்யாவுக்கு தான் பாதிப்பு! கருப்பு படத்தில் தர்பூசணி காட்சி கட்.. திவாகர் வினோத விளக்கம் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications