நான் செஞ்ச தப்பால் வந்த வினை! வெளியே சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. பூர்ணிமா பாக்யராஜ் ஓப்பன் அப்
சென்னை: நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் சமீபத்தில் ஒரு இன்டர்வியூவில் தான் செய்த தப்பால் தன்னுடைய உடல்நிலை மோசமானது குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதோடு தன்னை போல யாரும் உடல் நிலையில் அக்கறையில்லாமல் இருக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் பாக்கியராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் அந்த நேரத்தில் அதிகமாக பரபரப்பாக பேசப்பட்டது. திருமணத்திற்கு பிறகு பூர்ணிமாவிற்கு சாந்தனு மற்றும் சரண்யா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த பூர்ணிமா பிறகு நடிக்க தொடங்கிவிட்டார். இப்போது வெள்ளி திரையிலும் சின்னத்திரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் தனக்கு தெரிந்த கலை நயத்தையும் பிசினஸ் ஆக மாற்றி இருக்கிறார். அதாவது ஜுவல்லரி மற்றும் ஆடை வடிவமைப்பு போன்ற தொழில்களை பிசியாக செய்து வரும் பூர்ணிமா சமீபத்தில் பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.
அதில் பூர்ணிமா பேசுகையில், எனக்கு சமைக்கவே தெரியாது. நான் திருமணத்திற்கு பிறகு என்னுடைய பிசினஸில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். அதேநேரம் நடிக்கவும் செய்து கொண்டிருந்ததால் என்னால் இன்ட்ரஸ்ட் ஆக சமையல் செய்ய முடியாமல் ஆகிவிட்டது. அதேபோல நான் என்னுடைய உடல் நிலையை சரியாக கவனிக்காததால் சில வருடங்களுக்கு முன்பு நான் உடல் எடை கூடி விட்டேன்.
பிறகுதான் என்னை நானே புரிந்து கொண்டு யோகா, நடைப்பயிற்சி போன்றவற்றை செய்ய தொடங்கினேன். இப்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறேன். வயது ஆகும் போது நாம் நம்முடைய உடம்பை எவ்வளவு கவனித்துக் கொள்கிறோமோ அவ்வளவு ஆரோக்கியம். நம்முடைய ஆரோக்கியம் நமக்கு மட்டுமல்ல நம்மை சார்ந்தவர்களுக்கும் நல்லது.
நாம் நன்றாக இருந்ததால் தான் நம்மை சார்ந்தவர்களும் தைரியமாக இருப்பார்கள். நாம் அங்கே வலிக்கிறது இங்கே வலிக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தால் கூட இருப்பவர்களின் மனநிலையும் அது பாதிக்கக்கூடும். சாப்பாடு விஷயத்தில் நான் எதை தந்தாலும் சாப்பிட்டு விடுவேன். இதுதான் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிற ஆள் கிடையாது.
ஆனால் சில வருடங்களுக்கு முன்பு நான் சாப்பாட்டில் கவனம் வைக்காதால் தான் என்னுடைய உடல் எடை கூடி இருந்தது. அதை பார்த்து நானே அதிர்ச்சி அடையும் அளவிற்கு மாறிப் போயிருந்தது. அதனால் தான் எல்லோரும் வேலை இருக்கிறது என்று ஓடிக்கொண்டிருந்தாலும் நம்முடைய உடம்பையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்லிக் கொள்கிறேன்.

அதுபோல எனக்கு சமைக்க தெரியாது. வீட்டு வேலை எதையும் எனக்கு செய்ய தெரியாது என்று வெளியே சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்... காரணம் கலை நயத்தில் ஆர்வமாக இருப்பவர்கள் வீட்டையும் அழகாக பார்த்துக் கொள்வார்கள். ஆனால் என்னால் சமையல் செய்ய முடியவில்லை... ஆனால் சமையல் செய்ய தெரியாது என்று நான் பெருமைக்காக பேசவில்லை, வருத்தத்தில் தான் சொல்கிறேன் என்று அந்த பேட்டியில் நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications