என்னுடைய படத்தை என் மகன் பார்ப்பது இல்லை.. காரணம் இதுதான்..!உருக்கமாக பேசிய பூர்ணிமா பாக்யராஜ்
சென்னை: நடிகை பூர்ணிமா பாக்யராஜ் தன்னுடைய திரைப்பட வாழ்க்கை குறித்தும், தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் தன்னுடைய மகன் தன்னுடைய திரைப்படத்தை பார்ப்பது இல்லை என்று கூறியிருக்கிறார்.
எவ்வளவோ திறமைகள் இருந்தாலும் தன்னுடைய மகனுக்கு சரியான வாய்ப்பு அமையவில்லை என்று பல நேரங்களில் ஃபீல் பண்ணியதாக அதில் பூர்ணிமா வருத்தத்தோடு தெரிவித்து இருக்கிறார்.

வெள்ளி திரையில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி பல முன்னணி நடிகர்கள் நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே நடிகர் பாக்யராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய திடீர் திருமணம் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கிறது.
பிறகு சில வருடங்கள் நடிப்பை தள்ளிப்போட்டு தன்னுடைய குழந்தைகளை வளர்ப்பதில் கவனத்தை செலுத்தி வந்த பூர்ணிமா அதற்குப் பிறகு குழந்தைகள் ஓரளவிற்கு செட்டில் ஆனதும் மீண்டும் நடிப்பதற்கு வந்திருக்கிறார். தற்போது ஃபேஷன் டிசைனிங் செய்து கொடுத்து பிரபலமாகவும் இருக்கிறார். நடிகையாக மட்டுமல்லாமல் இவர் பல நடிகைகளுக்கு ஃபேஷன் டிசைனராக இருந்து வருகிறார்.
அதே நேரத்தில் வெள்ளி திரையிலும், சின்னத்திரையிலும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். பல குணச்சித்திர கேரக்டர்களிலும் தொடரும் இவருடைய நடிப்பை அதிகமான ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். ஆனால் அவருடைய சொந்த மகன் நடிகர் சாந்தனு அவர் நடித்த திரைப்படத்தை பார்ப்பதில்லை என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் பூர்ணிமா பாக்யராஜ் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

காரணம் என்னுடைய மகனுக்கு என் மீது அதிகமான பாசம் இருக்கிறது. நான் நடிக்கும் பல திரைப்படங்களில் கடைசியில் இறந்து போய் விடுவது போலவும், அல்லது எனக்கு ஏதாவது பிரச்சனையாகி விடுவது போலவும் இருப்பதால் நான் நடிக்கும் திரைப்படத்தை அவர் பார்க்கவே மாட்டேன் என்று கூறியிருக்கிறார். சமீபத்தில் நான் நடித்த ருத்ரன் திரைப்படத்தில் கூட நான் இறப்பது போன்று தான் இருக்கும் அதுவும் என்னுடைய மகனுக்கு வருத்தம் தான். அதுபோல என்னுடைய மகனுக்கு அதிகமான திறமைகள் இருக்கிறது. ஆனாலும் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறது. அதை நினைத்து பல நேரங்களில் என்னிடம் புலம்பி இருக்கிறான்.
நான் அப்போது அவனுக்கு ஆறுதலாக பல அறிவுரைகளை சொல்லுவேன். எல்லாம் கடந்து போகும், எல்லாம் மாறும் ஒரு நாள் நம்முடைய திறமைக்கு சரியான வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியிருக்கிறேன். சக்கரகட்டி திரைப்படம் அதிகளவில் வெற்றி கிடைத்தது. அந்த நேரத்தில் சாந்தனு நடிப்பை பலரும் பாராட்டினார்கள் ஆனால் அதற்கு பிறகு பெரிய அளவில் சாந்தனுவிற்கு திரைப்படங்கள் கை கொடுக்காமல் இருக்கும் நிலையில் சோர்ந்து போகும்போது எனக்கும் ஒரு அம்மாவாக அதிகமான வருத்தம் இருக்கும் என்று பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் அதிகமானோர் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications