ரத்தத்தில் வந்த கடிதம்..அவசர திருமணத்தால் வந்த பிரச்சனை.. மனம் திறந்த பூர்ணிமா பாக்யராஜ்
சென்னை: பூர்ணிமா பாக்யராஜ் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
முன்னணி கதாநாயகியாக இருந்து வந்த பூர்ணிமா திடீரென்று திருமணம் செய்வதற்கான காரணம் என்னவென்று கூறி இருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் நடிப்பு துறையை விட்டு விலகி இருந்த பூர்ணிமா அதற்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

80ஸ் கிட்ஸ்களில் முன்னணியில் கலக்கிக் கொண்டிருந்த நடிகைகளில் ஒருவர் பூர்ணிமா பாக்யராஜ். இவர் பாக்கியராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார். இவருக்கு தற்போது சரண்யா, சாந்தனு என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தன்னுடைய நடிப்பு வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
நடிகர் பாக்கியராஜ்யும் இவரும் இரண்டு வருடங்களாக காதலித்து இருந்திருக்கிறார்கள். காதலித்துக் கொண்டிருக்கும் போது இன்னும் கொஞ்சம் காலம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று தான் இவர்கள் முடிவு செய்து வைத்திருந்தார்கள். அப்போது பூர்ணிமாவின் வசம் அதிகமான படங்கள் இருந்திருக்கிறது. சூட்டிங் ஆரம்பித்த படங்கள் கிட்டத்தட்ட 35 படங்கள் முடிக்காமல் இருந்த நிலையில் இருந்திருக்கிறது.
அப்போது நடிகர் பாக்கியராஜ் எம்ஜிஆர் இடம் பேசிக் கொண்டிருக்கும்போது தங்களுடைய திருமணத்தை பற்றி கூறியிருக்கிறார். உடனே எம்ஜிஆர் அப்போ இந்த தேதியை வைத்துக் கொள் என்று ஒரு தேதியை குறித்து விட்டாராம். அதற்கு மறுப்பு சொல்ல முடியாத பாக்கியராஜ் அந்த தேதியிலே இவருடைய திருமணத்திற்கு நாள் குறித்து இருக்கிறார். இவர்களுடைய திருமணத்திற்கு குறைந்தது மூன்று மாதங்கள் மட்டும்தான் இருந்திருக்கிறது. அதற்கு பிறகு அவசர அவசரமாக அனைத்து திரைப்படங்களையும் நடித்து முடித்து கொடுத்திருந்தாராம்.

இதனாலையே திருமணத்திற்கு பிறகு நடிப்பு வேண்டாம் என்று இவராக முடிவு எடுத்து இருந்திருக்கிறார். இவர் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு ஒரு ரசிகர் ரத்தத்தில் கடிதம் எழுதி அனுப்பியிருந்தாராம். அதை பார்த்து இவர் மெய்சிலித்து போய்விட்டாராம். அதை தன்னுடைய கணவரான பாக்கியராஜிடம் காட்டி இவர் வியந்து இருக்கிறார். அந்த அளவிற்கு இவருக்கு அதிகமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் திருமண வாழ்க்கைக்கு பிறகு மொத்தமாக திரை வாழ்க்கைக்கு ரெஸ்ட் கொடுத்து இருக்கிறார்.
பல வருடங்கள் கழித்து தன்னுடைய குழந்தைகள் எல்லாம் பெரியவர்களாக ஆன பிறகு சின்னத்திரைகளிலும், வெள்ளி திரைகளிலும், குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர் இத்தனை வருடங்கள் ஆனாலும் அப்படியே இருக்கிறாரே எப்படி? என்று கமெண்ட்களில் சந்தேகங்களை எழுப்புகின்றனர்..
-
"கொலை மிரட்டல்... பாலியல் வன்கொடுமை மிரட்டல்... திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதி பரபரப்பு பேச்சு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications