18 வயதில் தொடங்கிய காதல்.. ஆனால் இப்போ..! காதலர் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் உருக்கம்
சென்னை: தொகுப்பாளராக அறிமுகமான பிரியா பவானி சங்கர் அதைத் தொடர்ந்து சின்னத்திரையில் கதாநாயகியாக மாறி இப்போது வெள்ளி திரையில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய காதலர் குறித்து உருக்கமான ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரியா பவானி சங்கர் திரை உலகில் முன்னணி நடிகையாக மாறி இருக்கும் நேரத்தில் பல வருடங்களாகவே தான் ஒரு நபரை காதலித்து வருவதாக கூறி அவரோடு அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று தன்னுடைய காதலரின் பிறந்த நாளை குறித்து அவரைப் பற்றி பெரிய கேப்ஷன் கொடுத்து பதிவு வெளியிட்டு இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஒரு செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் இருந்து வந்த பவானி சங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்று சீரியலில் நடித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்துவிட்டார். இந்த சீரியலில் பிரியா கேரக்டரில் நடித்து இளைஞர்களையும் கவர்ந்து விட்டார்.
சீரியல்கள் பார்க்காதவர்கள் கூட பிரியாவிற்காக கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் தொடர்ந்து பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகவே இவருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகளும் குவிய தொடங்கியது. அதனாலேயே இந்த சீரியலில் இருந்து பாதியிலே விலகி திரைப்படங்களில் பிரியா பவானி சங்கர் கமிட் ஆகி இருந்தார். அதைத் தொடர்ந்து சன் டிவி கயல் சீரியல் நடிகையான சைத்ரா ரெட்டி இவருக்கு பதில் நடித்து வந்தார். தற்போது கூட அந்த சீரியல் விக்ரம் வேதா (காதலும் மோதலும் ) என்ற பெயரில் மீண்டும் புதிய சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது.
மேயாத மான் என்ற திரைப்படத்தில் தொடங்கி, இப்போது மான்ஸ்டர், மாபியா, யானை, திருச்சிற்றம்பலம், அகிலன், பத்து தல, ருத்ரன் போன்ற பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களோடு அவர்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படத்திலும் இணைந்திருக்கிறார்.

இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் தான் நடிகையாக ஆவதற்கு முன்பே ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறாராம். அதுவும் 18 வயதில் தொடங்கிய இவர்களுடைய காதல் இப்போது வரைக்கும் தொடங்கி வருகிறது. முன்னணி நடிகையாக இருக்கும் பிரியா பவானி சங்கர் அடிக்கடி தன்னுடைய காதலரோடு வெளியே சென்று அங்கு புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி கொண்டிருக்கிறார்.
அந்த மாதிரி தான் இன்று கூட தன்னுடைய காதலரோடு எடுத்த ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில் தன்னுடைய மனதில் இருக்கும் காதலை கொட்டி இருக்கிறார். அதில், இந்த பையன் இருக்கிறாரே இவர்தான் என்னுடைய சிறந்த நண்பர். நாங்கள் எப்போதும் ஒன்றாகவே சிரிக்கிறோம், சண்டை இடுகிறோம், அழுகிறோம். அடிக்கடி மேக்கப்பும் செய்து கொள்கிறோம்.
அவர் சத்தமாகவும் நம்பிக்கையுடனும் பல தவறான பாடல் வரிகளை பாடிக்கொண்டிருக்கிறார். நாங்கள் இருவருமே A &Z வேறு வேறு தான். ஆனாலும் என்னை அவர் எப்போதுமே திருப்திப்படுத்திக் கொண்டிருக்கிறார். நாங்கள் இருவரும் வித்தியாசமாக இருந்தாலும் அவரோடு நான் அன்பாகவும் ஜாலியாகவும் இருக்கிறேன். அதுபோல அவரோடு தான் நான் நிம்மதியாக உணர்கிறேன். அவரும் என்னோடு இருக்கும்போது சந்தோசமாக இருக்கிறார்.

அவரோடு நான் அமைதியாக உட்கார்ந்து ஒரு அழகான சூரிய அஸ்தமனத்தை பார்த்து என்னுடைய மனதில் இருக்கும் கஷ்டங்களை எல்லாம் பேச முடிகிறது. அதுவே எனக்கு போதும்... இந்த வாழ்க்கையை நான் ஆனந்தமாக கடக்க கோடி மடங்கு போதும்.. என்னுடைய ராஜ்வேல்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும், இருவர் வானம் வேறென்றாலும்... என்ற வார்த்தைகளோடு பிரியா பவானி சங்கர் அந்த பதிவை முடித்து இருக்கிறார். தன்னுடைய காதலரின் பிறந்தநாளுக்கு பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படங்களும் பதிவும் இப்போது இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications