ராகசுதாவை விட்டுட்டு பிரியா ராமனுடன் ரஞ்சித் சந்தோஷமாக வாழலியா? ஹன்சிகாவும் மனசு மாறலாம்: பிரபலம்
சென்னை: நடிகை ஹன்சிகாவும், அவரது சோஹேலும் காதலித்து திருமணம் செய்த நிலையில், தம்பதிக்குள் தகராறுகள் வெடித்துள்ளன.. தற்போது மன கசப்பு அதிகமாகிவிட்டதால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை உண்மையல்ல என்று சோஹேல் மறுத்தாலும், ஹன்சிகா சட்டப்படி விவாகரத்து செய்வதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன.. இந்நிலையில், சமீப காலமாக அதிகமாகி வரும் விவாகரத்து குறித்து, மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "தன்னுடைய தோழியின் முன்னாள் கணவரையே, திருமணம் செய்து கொண்டார் ஹன்சிகா.. அதற்கு முன்பு 10 வருடங்களாகவே இவர்கள் நட்பிலும் இருந்துள்ளனர்..

பரஸ்பரம் வாழ்க்கை
திருமணமாகி, 2 மாதம் மட்டுமே பரஸ்பரம் ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.. பிறகு ஒரே வீட்டில் ஹன்சிகாவும், கணவரும் பிரிந்து வாழ்ந்து, பிறகு ஆளுக்கொரு பக்கம் தனித்தனியாக அவரவர் பெற்றோரிடம் சென்றுவிட்டார்கள். சட்டப்பூர்வமான விவாகரத்து வேலைகளும் நடந்து வருவதாக தெரிகிறது. மொத்தத்தில் திருமணமாகி 6 மாதத்தில் பிரிந்துவிட்டார் ஹன்சிகா.
பெரும்பாலானோருக்கு, காதலிக்கும்போது, இருக்கும் அன்பானது, கல்யாணம் ஆனதும் போய்விடுகிறது. இதற்கு காரணம், காதலிக்கும்போது அதிக உரிமையை இரு தரப்பிலும் எடுத்து கொள்ள மாட்டார்கள்.. வெறும், பாசமும், நேசமும் இருக்கும்.. திருமணமாகி, உறவுகள் அதிகமாகும்போது, உரிமைகளும் அதிகமாகி, சிக்கலாகிவிடுகிறது.
ஐஸ்வர்யா - அபிஷேக் பச்சன்
அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யாவும் தனித்தனியாக இருக்கிறார்கள்.. அவர்களது குழந்தை இப்போது வளர்ந்துவிட்டாள்.. காதலிக்கும்போது, வெறும் காதலன் - காதலி இருவர் மட்டுமே இருப்பார்கள். ஆனால் திருமணமாகிவிட்டால் வேறு சில உறவுகளும் உள்ளே வந்துவிடுகிறார்கள்.. அந்த உறவுகளுடன் இணைவதில்தான் சிக்கல்கள் வருகின்றன.
இப்போது ஹன்சிகா சட்டப்பூர்வமாக விவாகரத்து கோருகிறார்.. ஆனால், விவாகரத்து என்பதே வெறும் ஆவணம்தான்.. எல்லாருக்குமே மனசு என்று ஒன்று உள்ளது..
தனுஷ் - ஐஸ்வர்யாவை அவரது மகன் லாக் செய்துவிட்டானே? நடிகர் ரஞ்சித்தும், பிரியாராமனை விவாகரத்து செய்துவிட்டு, வேறு திருமணம் செய்து, இப்போது மீண்டும் பிரியாராமனேயே வாழ்ந்து வருகிறார்.. எனவே, ஹன்சிகா என்றில்லை,யார் சட்டப்பூர்வமாக பிரிந்தாலும், அவர்கள் மீண்டும் இணைய வாய்ப்புள்ளது என்பதற்கு உதாரணங்கள்தான் இவையெல்லாம்.
ஆத்மார்த்தமான காதல்
யாராக இருந்தாலும் சரி, ஆத்மார்த்தமான காதலுடன் கணவன் மனைவியாக வாழ்ந்துவிட்டு, ஆவணத்தை காட்டி விவாகரத்து என்றாலும், அந்த தம்பதியால் எளிதாக பிரிந்துவிட முடியாது.. கருத்து வேற்றுமை வந்தாலும்கூட, இந்த தம்பதியால் பிரிய முடியாது..
ஹன்சிகா விவகாரத்தில், தன்னுடைய கணவரை 10 வருடங்களாக காதலித்ததாகவும், அதற்குபிறகு திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்கிறார்... எனவே ஹன்சிகாவினுடையது தற்காலிகமான பிரிவாகவும் இருக்கலாம்.
இரண்டாவது திருமணம் - சிக்கல்கள்
ஆனால், எப்போதுமே ஏற்கனவே திருமணமானவர்களை மீண்டும் தேர்ந்தெடுக்கக்கூடாது.. டைவர்ஸ் ஆகியிருந்தாலும்சரி, 2வது வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது பலருக்கும் தோல்விதான்.. ஏனென்றால், 2வது திருமணம் செய்தவர்கள், வேறுவழியின்றி, விதியே என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. அதிலும் பணம் இல்லாதவர் நிலைமை இன்னும் மோசம்..
இன்னொரு பெண்ணுக்கு 2வதாக வாழ்க்கை தந்ததாக பெருமையாக சிலர் சொல்லலாம். வாழ்க்கையை யாருக்கும் பிச்சையாக போட முடியாது.. அவரவர் வாழ்க்கையை வாழ வேண்டும்..
யாருக்கும் துன்பமோ, கஷ்டமோ, வலியோ தராத அளவுக்கு அவரவர் வாழ்க்கையை தேடிக் கொள்ள வேண்டுமே தவிர, இன்னொருத்தர் மனைவியை, திருமணம் செய்வதும், இன்னொரு பெண்ணின் கணவரை, தன்னுடைய கணவராக்கி கொள்வதும் பெருமையான விஷயம் கிடையாது.. ஒருமுறைதான் வாழ போகிறோம்.. எப்படி வேண்டுமானாலும் பிறந்திருக்கலாம்.. ஆனால், ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.. யாருடைய கண்ணீருக்கும் காரணமாகிவிடக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications