11 வருஷம் ரிலேஷன்ஷிப்ல இருந்தோம்.. திடீர் கல்யாணம்! ஆனால் இப்போ! நடிகை பிரியங்கா நல்கரி எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலின் மூலம் பிரபலமடைந்த நடிகை பிரியங்கா நல்கரி அவருடைய கணவரை பிரிந்து இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் தெரிவித்து இருந்த நிலையில் இப்போது அவர் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் பிரியங்கா நல்கரி அவருடைய கணவர் ராகுலை 11 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் அவர்களுக்கு திடீர் கல்யாணம் எதனால் நடைபெற்றது என்பது பற்றியும் திருமணத்திற்கு பிறகு என்ன நடந்தது என்பது பற்றியும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Actress Priyanka Nalkari about my live and sudden marriage reason

அந்த வகையில் வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் மூலம் அறிமுகமான நடிகை பிரியங்கா நல்கரிக்கு முதல் சீரியலிலே தமிழ் ரசிகர்கள் அதிகமான வரவேற்பு கொடுத்திருந்தனர். அதனாலே தொடர்ச்சியாக பல வருடங்களாக அந்த சீரியலில் பிரியங்கா நல்கரி கதாநாயகியாக நடித்து வந்தார். பிறகு அந்த சீரியல் முடிவடைந்ததும் ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதா ராமன் என்ற சீரியலில் கதாநாயகி நடித்து வந்தார்.

இந்த நிலையில் தான் அவருக்கு திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த ஒரு சில மாதங்களில் அவர் சீரியலில் இருந்து விலகிவிட்டார். இப்படியான நிலையில் சமீபத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வருகிறது. அதில் நீங்கள் நினைக்கிற மாதிரி எல்லாம் எனக்கு திடீர் கல்யாணம் நடக்கல, நானும் என்னுடைய கணவர் ராகுலும் 11 வருடங்களாக காதலித்து வந்தோம்.

ஆனால் காதல் வாழ்க்கையை நாங்கள் வாழவே இல்லை. காரணம் நாங்கள் காதலிக்க தொடங்கியது ஒரு நிகழ்ச்சியில் பார்த்து தான். நாங்கள் இருவரும் அந்த நேரத்தில் ஜீ தெலுங்கு சேனலில் நடித்துக் கொண்டிருந்தோம். இருவரும் ஒரே சேனலில் நடிக்கும் போது சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் தான் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டு பிறகு காதலாக மாறியது. இருவரும் காதலித்துக் கொண்டிருக்கும் போது பிரம்மாண்டமாக என்கேஜ்மென்ட் செய்திருந்தோம்.

எங்களுடைய என்கேஜ்மென்ட்க்கு தெலுங்கு நடிகர்கள் பலர் வந்திருந்தார்கள். ரிப்போர்ட்டர்ஸ் எல்லாம் வந்திருந்தார்கள் அதற்குப் பிறகு ராகுலுக்கு மலேசியாவில் வேலை கிடைத்ததும் அவர் மலேசியாவுக்கு போய்விட்டார். நான் இங்கு தமிழில் ரோஜா சீரியலில் நடித்துக் கொண்டிருந்தேன். இந்த சீரியலில் நடிக்கும் போது எனக்கு கிடைத்த வரவேற்பால் இந்த சீரியலில் தொடர்ந்து கொண்டிருந்தேன். அப்போ கூட எங்களுக்குள் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில நாட்கள் நாங்கள் பேசாமல் இருந்தோம்.

பிறகு மீண்டும் நாங்கள் பேசிவிட்டோம் அப்போது எப்போது திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டிருந்தார். நான் அதற்கு ரோஜா சீரியல் முடியட்டும் இந்த சீரியல் நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது திருமணம் செய்தால் நன்றாக இருக்காது என்று சொல்லி இருந்தேன். அதன்படி சீரியல் முடிவடைந்ததும் அவர் எப்போது திருமணம் என்று கேட்டார் நான் உடனே வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருந்தேன்.

அந்த நேரத்தில் ஜீ தமிழில் எனக்கு சீதாராமன் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த கதையை கேட்டதும் எனக்கு வேண்டாம் என்று சொல்ல மனசு வரல. உடனே ஒத்துக்கொண்டேன் பிறகு நானும் ராகுலும் எளிமையாக திருமணத்தை நடத்தி முடித்தோம். கோவிலில் திருமணம் நடக்கும்போது நாங்க ரெண்டு பேரும் மட்டுமே இருந்தது எனக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது.

எங்க அம்மா அப்பாவால் கூட வர முடியல. காரணம் அவங்களுக்கு பாஸ்போர்ட் பிரச்சனை இருந்தது. அதுபோல ராகுலின் வீட்டில் எங்களுடைய திருமணத்திற்கு இப்போதும் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் நாங்கள் திருமணம் செய்து எங்களுடைய வாழ்க்கையை தொடங்கிடோம். பிறகு நான் இனி திருமணம் முடிஞ்சாச்சு அவருடன் தான் நான் வாழ வேண்டும் என்று தான் சீதாராமன் சீரியலில் இருந்து வேறு வழியே இல்லாமல் விலகினேன்.

ஆனால் திருமணம் முடிந்து வீட்டில் இருக்க தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே என்னால் இருக்க முடியவில்லை. காரணம் நான் சின்ன வயசிலிருந்து நடிக்க தொடங்கி விட்டதால் எனக்கு நடிப்பு இல்லாமல் இருக்க முடியவில்லை என்று நான் பீல் பண்ணிக் கொண்டிருந்ததை பார்த்து என்னுடைய கணவர் நீ நடிக்கப் போ என்று சொன்னார். அதனால்தான் நான் இப்போதும் நள தமயந்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் பிரியங்கா நல்கரி பேசியிருக்கிறார். ஆனால் இது பழைய பேட்டி இது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+