புஷ்பலதாவை விரட்டி வந்த உச்ச நடிகர்.. சினிமாவுக்கு வந்தது எப்படி? மக்கள் மனதில் நின்ற நடிகை: பிரபலம்
சென்னை: பழம்பெரும் மூத்த நடிகை புஷ்பலதா திரைத்துறைக்கு வந்தது குறித்தும், சினிமாவில் நடிக்க ஆரம்பத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் குறித்தும், மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் கூறியிருந்ததை, இங்கே நினைவுகூர வேண்டியிருக்கிறது.
தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை புஷ்பலதா. 87 வயதான நடிகை புஷ்பலதா சென்னை தி.நகரில் வசித்து வந்தார்.. கடந்த சில நாட்களாகவே வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்த நிலையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

தமிழில் 1961-ம் ஆண்டு வெளியான "செங்கோட்டை சிங்கம்" என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பெரிய நடிகர்களுடன் நடித்துள்ள இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும், துணை கதாபாத்திரங்களிலும் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
பிரபலமான படங்கள்: நல்வரவு, ராமு, தாயே உனக்காக, நானும் ஒரு பெண், கற்பூரம், ஜீவனாம்சம், பணமா பாசமா, தீர்க்க சுமங்கலி, திருமலை தெய்வம், சிட்டுக்குருவி, பகலில் ஒரு இரவு, ரத்தபாசம் போன்ற படங்களிலும் புஷ்பலதா நடித்திருந்தது, தமிழக மக்களின் இதயத்தில் இடம்பிடித்திருந்தன. பிந்தைய காலகட்டத்திலும், 70, 80-களில் தமிழ் சினிமாவில் படுபிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்த நடிகை புஷ்பலதா, ரஜினி, கமல் உள்ளிட்டோரின் ஏராளமான படங்களில் அம்மா, மாமியார் கேரக்டர்களில் நடித்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள புஷ்பலாதா, "நானும் ஒரு பெண்" என்ற படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த ஏவிஎம் ராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகாலட்சுமி, அபிராமி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மகாலட்சுமி, ராணித்தேனீ, முதல் வசந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
பிளாஷ்பேக்: சமீபத்தில், Kingwoods News யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அந்த பேட்டியில் புஷ்பலதா பற்றின முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.. அதன் சுருக்கம்தான் இது:
"பிரபல நடிகர் ஏவிஎம் ராஜனின் மனைவி புஷ்பலதா.. அற்புதமான நடிகை... இவரை பற்றி சொல்வதானால், ஒரு துயரத்தையும் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது. புஷ்பலதா திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு, வாய்ப்புக்காக சென்னைக்கு வந்தார்.
உச்ச நடிகர்: ஆனால், அன்றைய ஒரு உச்சபட்ச நடிகர், அவரை சினிமாவில் நடிக்க அனுப்பாமல், தனக்கு சின்ன வீடாக, தன்னுடனே வைத்திருந்தார். சினிமா ஸ்டுடியோ பக்கமே புஷ்பலதாவை விடுவதில்லை. இதனால் அவரை மீறி செல்லவும் பயந்து கிடந்தார் புஷ்பலதா.
அப்போதைய காலத்தில், கோடம்பாக்கம் மேம்பாலம் கட்டப்படவில்லை. வெறும் ரயில்வே கேட் மட்டும்தான் போடப்பட்டு இருந்தது. எனவே, அந்த வழியாக செல்லும் வண்டிகள் எல்லாம், கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் நின்றுதான் செல்லும். இந்த ரயில்வே கேட்டை சுற்றிலும் ஏராளமான விறகுக்கடைகள் இருந்தன. அன்றைய காலங்களில் கேஸ் ஸ்டவ் இல்லாததால், பெரும்பாலும் வீடுகளில் விறகு அடுப்புகள்தான் பயன்பாட்டில் இருந்தன.
விறகுக்கடை: அந்தவகையில், கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில், விறகுக்கடைக்காரர் ஒருவரிடம், தன்னுடைய நிலைமையை சொல்லி புஷ்பலதா அழுதுள்ளார்.. அந்த டாப் நடிகர், சினிமாவில் நடிக்க அனுமதி தராமல், தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லி அழுதார். இதைக்கேட்டதும், விறகுக்கடைக்காரருக்கு பரிதாபம் ஏற்பட்டது. புஷ்பலதாவுக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார்.
ஒருநாள், கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில், அந்த உச்சபட்ச நடிகரின் கார் வந்து நிற்கிறது. உடனே அந்த விறகு கடைக்காரர், நீண்ட விறகுக்கட்டையை எடுத்து சென்று, அந்த நடிகரின் கார் கண்ணாடியை அடித்து உடைத்தார்.. "வாய்ப்பு தேடி வந்த பெண்ணை சினிமாவில் நடிக்க விடாமல், சின்ன வீடாக பயன்படுத்துகிறாயா?" என்று கேட்டு, அவரது காரை நொறுக்கினார்.
கிறிஸ்தவ பின்னணி: இந்த சம்பவத்துக்கு பிறகு, அந்த நடிகர் புஷ்பலதாவை தொந்தரவு செய்யவில்லை. அதற்கு பிறகுதான் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாகவும் புஷ்பலதா வர்றாங்க. இயல்பாகவே கிறிஸ்தவ பின்னணியை சேர்ந்தவர் என்பதால், கணவனுடன் இணைந்து, கிறிஸ்தவ பணிகளை மேற்கொண்டு வருகிறார்" என்று தெரிவித்திருந்தார் தமிழா தமிழா பாண்டியன்.
இவரது கணவர் ஏவிஎம் ராஜனின் இயற்பெயர் சண்முக சுந்தரம்.. இவர் ஒரு தீவிரமான சிவபக்தர்.. இந்து மத ஆன்மீகத்தில் அளவுகடந்த பற்றை கொண்டவர். புதுக்கோட்டையை சேர்ந்தவர்.. ஆனால், திருச்சியில் ஒரு கிறிஸ்தவ பள்ளியில்தான் படித்தவர். சினிமா படங்கள் எடுத்து நஷ்டத்தை சந்தித்தவர்.. 1980களியே 40 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.. இப்போது இதன் மதிப்பு 400 கோடி ரூபாய்க்கு சமமாம்.. இதிலிருந்து ஏவிஎம் ராஜன் எப்படி மீண்டார்? புஷ்பலதாவுடன் சேர்ந்து எப்படி கிறிஸ்தவ மத ஊழியரானார்? என்பது குறித்தும் தமிழா தமிழா பாண்டியன் விரிவாக அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications