ஒருதலைக் காதலால் 16 வெட்டு.. குடலை கையில் பிடித்துக் கொண்டு.. குட் நைட் பட நடிகைக்கு நடந்த அவலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருதலை காதலால் பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் குட் நைட் திரைப்படம் மூலம் பிரபலமடைந்த நடிகை ரேச்சல் ரெபகா வாழ்க்கையிலும் நடந்த சோகங்களும் அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வந்தார் என்பது பற்றி அவர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

கல்லூரி படிக்கும் போது தன்னை ஒரு தலையாக காதலித்த நபரால் தான் 16 இடங்களில் வெட்டுப்பட்டு உயிருக்கு போராடி பல போராட்டங்களுக்குப் பிறகு உயிரோடு வந்து இன்று சமூக ஆர்வலராகவும், நடிகையாகவும், ஆயுர்வேத மருத்துவராகவும் இருக்கும் ரேச்சல் ரெபக்கா பல பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்.

Actress Racheal Rebacca who was amputated in 16 places by the man who fell in one side love

அத்தோடு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவருடைய வாழ்க்கை உத்வேகம் கொடுக்கும் வகையில் தான் இருக்கிறது. தான் பட்ட அவஸ்தைகள் குறித்து உணர்வு பூர்வமாக ரேச்சல் பேசி இருக்கிறார் அது பற்றி பார்ப்போம்.

ரேச்சல் ரெபக்கா என்று சொன்னால் யாருக்கும் பெரிய அளவில் தெரியாது. ஆனால் அவரை இணையத்தில் பாலோ பண்ணுபவர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் ஆயுர்வேத மருத்துவராகவும் சமூக ஆர்வலராகவும் இருந்து வருகிறார். ஆனாலும் சமுதாயத்தில் இப்போது கடைசி விவசாயி திரைப்படத்தில் மாஜிஸ்திரேட்டாக இவருடைய நடிப்பு பலரையும் கவர்ந்தது.

அதைத்தொடர்ந்து குட் நைட் திரைப்படத்திலும் மணிகண்டனின் அக்காவாக இவர் நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பு பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற இவருடைய அழகு பலரையும் கவர்ந்திருந்தது. நடிப்பு, சமூக சேவை மருத்துவம் என்று இவர் பிஸியாக இருந்தாலும் இவருடைய ஆரம்ப காலம் சோகங்கள் நிறைந்ததாகவும் அதிலிருந்து இவர் மீண்டு வந்த விதம் கேட்பவர்களுக்கு கண்ணீரை வர வைக்கும் விதமாக இருக்கிறது. அது பற்றி ரேச்சல் பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதில் தான் 2008 ஆம் ஆண்டில் கல்லூரியில் முதல் வருடத்தில் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு சின்ன வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்தது. என்னுடைய அப்பா சமூக ஆர்வலராக இருந்த போதிலும் அதிகமாக மருத்துவர்களோடு கலந்துரையாடுவார். அப்போது என்னையும் கூட்டிக்கொண்டு போவார். அப்போது அதிகமான ஆயுர்வேத மருத்துவர்கள் நாங்கள் சந்தித்திருக்கிறோம். அப்போது இருந்தே நானும் ஒரு ஆயுர்வேத மருத்துவராக வேண்டும் என்று கனவில் தான் நான் படித்து வந்தேன்.

நல்லபடியாக படித்து வந்தேன். அப்போது என்னை ஒருவன் காதலிப்பதாக சுற்றி வந்தான். எனக்கு அப்போது காதல் மீது கொஞ்சம் கூட விருப்பமில்லை. அதனால் நான் என்னுடைய படிப்பில் தான் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் ஒரு நாள் வீட்டில் நான் தனியாக இருந்தேன். அப்போது காலிங் பெல் அடித்தது.அந்த நேரத்தில் நான் கையில் போனை வைத்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்தேன்.

Actress Racheal Rebacca who was amputated in 16 places by the man who fell in one side love

அப்படியே போய் கதவை திறந்து பார்த்தேன் வெளியே என்னை காதலிக்கிறேன் என்று சொன்ன நபர் நின்றான். அவன் என் கையில் இருந்த போனை பிடுங்கிக் கொண்டு இது வேண்டும் என்றால் நீ நான் சொல்ற இடத்துக்கு வந்து என்னை பாரு என்று சொல்லி விட்டு ஓடி விட்டான். நான் அப்போது மனதளவில் உடைந்து போய் விட்டேன். காரணம் அந்த மொபைல் போன் சித்தப்பா எனக்காக வாங்கி கொடுத்தது. அதை பிடுங்கி கொண்டு போய் விட்டான். கூடவே இவனுடைய தொந்தரவு வேற என்னால் எப்படி சமாளிக்கிறது என்று தெரியாமல் நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தேன்.

நான் படித்துக் கொண்டிருக்கும் போதே வீடியோவில் பார்த்து வீட்டிலேயே சில பொருட்களை தயார் செய்வேன். அந்த மாதிரி ஹேர் ஆயில் தயார் செய்வதற்காக குன்றிமணி விதையை வாங்கி வைத்திருந்தேன். அது விஷமென்று எனக்குத் தெரியும். அதை பொடி செய்து சாப்பிட்டுவிட்டு இறந்து விடலாம் என்று முடிவு எடுத்தேன்.

அதுபோலவே செய்து சாப்பிடும் போது சாமி கும்பிட்டு விட்டு சாப்பிடலாம் என்று சாமி கும்பிடும்போது அங்கிருந்த கண்ணாடியில் என்னுடைய முகத்தை பார்த்து நான் அழுது கொண்டிருந்தேன். பிறகு எனக்கே தோன்றியது. நம்ம என்ன தப்பு பண்ணுனோம்? எதற்காக நாம சாகனும்? இனி சாகுற எண்ணமே நம்மளுக்குள்ள வரக்கூடாது என்று பிறகுதான் நானா முடிவெடுத்து அந்த பொடியை தூக்கி வீசினேன். அந்த நேரத்தில் என்னுடைய அப்பா வீட்டிற்கு வந்தார்.

அவரிடம் நடந்ததை எல்லாம் சொன்னேன். அவர் இதில் எதற்காக நீ அழுது கொண்டிருக்கிறாய். அவன் வீட்டிற்குள் வந்திருக்கும் போது அவனை வீட்டிற்குள் தள்ளி நீ வெளியில் லாக் பண்ணி இருக்கலாம் என்று தன்னம்பிக்கை கொடுக்கிற மாதிரி பேசினார். சரி என்று நானும் மனதை தேற்றிக் கொண்டேன் பிறகு சிறிது நேரத்தில் என்னுடைய அப்பா வெளியே போய்விட்டார். அதற்கு பிறகு நானும் அம்மாவும் மட்டும் வீட்டில் இருந்தோம். அதற்குப் பிறகு மீண்டும் காலிங் பெல் சத்தம் கேட்டது.

அந்த நபர் மீண்டும் வந்து வாசலில் நின்று இருக்கிறான். அம்மா அவனைத் திட்ட அவன் வீட்டிற்குள் வந்து என்னையும் அம்மாவையும் கையில் வைத்திருந்த துருப்பிடித்த கத்தியால் வெட்டி விட்டான். என்மீது 16 இடங்களில் வெட்டுப்பட்டது. என்னுடைய வயிற்றில் விழுந்த குத்து எனக்கு தெரிந்தது உள்ளே குடல் வெட்டுப்பட்டு விட்டது என்று, நான் கையை வயிற்றில் வைத்து பார்க்கிறேன். நான் காலையில் சாப்பிட்ட தோசை வருகிறது. அப்போதும் நான் போட்ட சத்தத்தில் அவன் ஓடி போய் விட்டான்.

Actress Racheal Rebacca who was amputated in 16 places by the man who fell in one side love

பிறகு என்னுடைய அம்மா பக்கத்து வீட்டினரை கூப்பிட்டு என்னை ஹாஸ்பிடலில் சேர்த்தார்கள். அப்போதும் நான் சொல்லிக் கொண்டிருந்தது ஒன்றே ஒன்று தான். நான் வாழ வேண்டும் எப்படியாவது என்னை காப்பாற்றி விடுங்கள் என்று தான் சொல்லிக் கொண்டிருந்தேன். உடனே அவசர அவசரமாக என்னை நான் ட்ரைனிங் போய்கிட்டு இருந்த மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார்கள் அங்கு இது ரொம்ப ஆழமான வெட்டாக இருக்கிறது முடியாது என்று சொல்லி அனுப்பி வேறு ஹாஸ்பிடலுக்கு மாற்றி விட்டார்கள்.

என்னுடைய உடம்பில் இருந்து அதிகமான இரத்தம் வெளியேறி இருந்தது. ஆனாலும் எனக்கு எங்க அப்பா சமூக ஆர்வலராக இருந்து பலருக்கு செய்த உதவியால் பல பேர் எனக்கு ரத்தம் கொடுத்தார்கள். அப்போது நான் பல நாட்கள் கழித்து கண் விழித்து பார்த்தேன். அதற்கு பிறகு தான் நாம சாதிக்கணும் பல பேருக்கு உதவி செய்யணும் என்ற எண்ணம் அதிகமானது. என்னுடைய உடம்பில் பல பேருடைய ரத்தம் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

அவர்கள் எல்லாரும் தந்த ரத்தத்தில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றால் இந்த ரத்தத்துக்கு உண்மையான நான் வாழ்ந்து பலருக்கு உதவனும் என்று தான் அன்றிலிருந்து முடிவு பண்ணி அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் ரேச்சல் பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+