பிறந்தநாளில் ரச்சிதா மகாலட்சுமி சொன்ன குட் நியூஸ்.. இனி தனிமை கிடையாதாமே.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி தன்னுடைய பிறந்தநாளில் தான் புதியதாக வாங்கியிருக்கும் வீட்டின் வீடியோவை வெளியிட்டு தன்னுடைய தற்போதைய நிலை குறித்து அதில் பகிர்ந்து இருக்கிறார்.
அதே நேரத்தில் புது வீட்டில் கையில் ஒயின் கிளாஸ் வைத்துக் கொண்டு, தன்னுடைய தனிமையை தான் எப்படி போக்குகிறேன் என்று தகவல்கள் கேட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பெரிய அளவில் பிரபலமடைந்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான "பிரிவோம் சந்திப்போம்" என்ற சீரியல் மூலமாகத்தான் தமிழில் அறிமுகம் ஆகி இருக்கிறார். ஆரம்பத்தில் கன்னடத்தில் ஒரு லோக்கல் சேனலில் தொகுப்பாளராக இருந்த ரச்சிதா முதல்முறையாக தமிழ் சீரியலில் அறிமுகமானதும் அவருக்கு அதிகமான வரவேற்பு கிடைக்க தொடங்கியது.
அதைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலில் எந்த நடிகையும் செய்யாத சாதனையை இவர் செய்திருந்தார். அதாவது தொடர்ச்சியாக பல சீசன்களில் இவர்தான் மீனாட்சி ஆகவே நடித்துக் கொண்டிருந்தார். எல்லா சீரியல்களிலும் கதாநாயகி தான் மாறிக் கொண்டிருப்பார்கள். ஆனால் கதாநாயகன் ஒருவர்தான் இருப்பார்.
ஆனால் இவருக்கு மட்டும் அதான் பல கதாநாயகர்கள் ஜோடியாக நடித்திருந்தனர். அப்படியான நிலையில் சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு நடித்த சீரியல்கள் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் என்ட்ரி கொடுத்தார். அதற்கு பிறகு அந்த சீரியல் முடிவடைந்த பிறகு கலர்ஸ் தமிழில் சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்திருந்தார்.கதை நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது.
ஆனால் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று அந்த சீரியல் முடிவடைந்துவிட்டது. ஆனால் அந்த சீரியலில் முடிவு குறித்து ரசிகர்கள் எவ்வளவு ஃபீல் பண்ணினார்களோ அதைவிட ரச்சிதா ரொம்பவே ஃபீல் பண்ணி இருந்தார். அதற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா கலந்து கொண்டு இருந்த நிலையில் 90 நாட்களுக்கு மேலாக அந்த நிகழ்ச்சியில் இருந்தார்.
இந்த நிலையில் ரச்சிதா தன்னுடைய 33 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்த ரச்சிதா அதில், உங்களை ரச்சிதா காஸ்டலுக்கு வரவேற்கிறேன். தனிமையின் அமைதி இப்படித்தான் இருக்கும். தனது சொந்த வழியில் 33வது வயதில் அடி எடுத்து வைக்கிறேன். எனது ஒய்னுடன் நானும் எனது சிறிய வீடும்.
எங்க வீடு வாங்கி ஒரு வருடம் ஆகிறது. எனக்கு 33வது ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களும், என்னுடைய வீட்டின் முதல் வருட பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தனக்குத்தானே பிறந்தநாள் வாழ்த்து ரச்சிதா தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் ரச்சிதாவிற்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications