தினேஷை வெறுப்பேற்ற நீயா நானா பிரபலத்தோடு ரச்சிதா வெளியிட்ட பதிவு! ஆனால் இப்படி சொல்லி இருக்காங்களே!
சென்னை: சின்னத்திரை தம்பதிகளான ரச்சிதாவும் அவருடைய கணவர் தினேஷும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் விவாகரத்து இன்னும் ஆகவில்லை. இவர்களுடைய வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரச்சிதா சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் ஒருவரை சந்தித்து அவரோடு புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.
இதனால் ரசிகர்கள் நீங்கள் தினேஷை வெறுப்பேற்றுவதற்காக தான் இப்படி எல்லாம் பண்ணுறீங்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதாவிற்காக தான் நான் கலந்து கொண்டேன் என்று சொல்லி இருந்த நிலையில் ரச்சிதா தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போதும் அவருக்கு எதிராக பதிவு வெளியிட்டுக் கொண்டிருந்தார். அது போல இப்போதும் தினேஷை தாக்கும் வகையிலேயே பதிவு வெளியிட்டுக் கொண்டிருக்கிறாரே என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் சின்னத்திரையாக இருந்தாலும் சரி வெள்ளி திரையாக இருந்தாலும் சரி ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ஏராளமாக இருந்தாலும் அதில் ஒரு சிலரால் தான் பல வருடங்கள் தொடர்ச்சியாக தங்களுடைய திருமண வாழ்க்கை பயணத்தை தொடங்க முடிகிறது. சிலர் கருத்து வேறுபாடால் பாதியிலேயே வாழ்க்கையை முறித்து விடுகிறார்கள்.
அந்த வரிசையில் இப்போது சின்னத்திரை தம்பதிகளாக இருந்த தினேஷ் மற்றும் ரச்சிதா தம்பதிகள் இணைந்து இருக்கின்றனர். இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் மனம் ஒத்த தம்பதிகளாக இருந்த நிலையில் இப்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். ஆனால் தினேஷ் தான் மீண்டும் ரச்சிதாவோடு சேர விரும்புவதாக பல இடங்களில் கூறிக் கொண்டிருந்தார். ஆனால் ரச்சிதா எந்த இடத்திலும் தினேஷோடு தான் இனி சேர்ந்து வாழும் விருப்பம் இல்லை என்கிற மாதிரி தான் பதிவுகளும் புகைப்படங்களும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
இப்படியான நிலையில் தான் இன்று ரச்சிதா கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பிரபலத்தை சந்தித்திருக்கிறார். அதாவது கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீயா நானா நிகழ்ச்சியில் விவாகரத்து ஆன பெண்களும் அவர்களை இந்த சமுதாயம் எப்படி பார்க்கிறது என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் சந்திர பிரபா என்கிற டாக்டர் பெண்மணி ஒருவர் விவாகரத்து ஆன பெண்கள் அணியில் கலந்து கொண்டிருந்தார்.

அவர் விவாகரத்து ஆன பிறகு தன்னுடைய நிலைமை எப்படி இருக்கிறது பெண்கள் எப்படி சுயமாக முன்னேற வேண்டும் என்கிற ரீதியில் பேசி இருந்தார். இவருடைய பேச்சுக்கு சமூக வலைதளத்தில் அதிகமான பாராட்டும் கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் ரச்சிதா அவரை சந்தித்து இருக்கிறார். அவரோடு எடுத்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதற்கு நீண்ட ஒரு கேப்ஷனும் கொடுத்திருக்கிறார்.
அதில் "உறவு" என்ற தலைப்பில் எழுத தொடங்கி இருக்கிறார். அதைத்தொடர்ந்து ஒரு சில உறவுக்கு ஒன்றுமே இல்லை... ஆனாலும் எப்படித்தான் கனெக்ட் ஆகிறது தெரியல. ஆனா நிச்சயம் இது பிரபஞ்சத்தின் அழைப்பு தான். ஒரு சில சமயங்களில் ஆன்மா கேட்கும் மற்றும் சிந்திப்பதற்காக ஒரு மனம் தேவைப்படுகிறது. தி வொண்டர் வுமன் பேராசிரியர் டாக்டர் சந்திர பிரபா மேடம் உங்களை அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுற்றிலும் காயப்பட்ட பல உயிர்களை தொட்டுள்ளீர்கள்.
உண்மையிலேயே உங்களுடைய பேச்சு எனக்கு ஊக்கம் அளிக்கிறது. எனக்கு மிகவும் தேவையாக இருந்த ஒரு குணப்படுத்தும் ஆராவை நீங்க தந்தீங்க. இன்னொரு நாள் நான் இதுபோல உஙகளை சந்திப்பதற்காக எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். எனக்குள் இழந்த நம்பிக்கையை நிரப்பியது நீங்கள் தான். நீங்கள் உண்மையிலேயே ஒரு உத்வேகமாக இருக்கிறீங்க. நிறைய குணமடையாத ஆன்மாக்களுக்கு ஒரு வெளிச்சத்தை தந்திருக்கிறீங்க

நமது சமுதாயத்தின் மங்கலான பார்வையை துடைக்க இங்கே நீங்கள் இருக்கிறீங்க. உங்கள் எண்ணங்கள், சித்தாந்தம் மற்றும் அறிவு தொகுப்புக்கு ஒரு பெரிய பெரிய வரவேற்பு. பழமையான நம்பிக்கை கொண்ட இந்த சமுதாயத்திற்கும் மக்களுக்கும் இன்னும் நிறைய தேவை. உங்களிடம் இருந்து ஞானம் நிறைய பேரை ஊக்கமளித்துக் கொண்டே இருங்கள் என்று கூறியிருக்கிறார். இந்த பதிவிற்கு ஒரு சில ரசிகர்கள் ரச்சிதாவிற்கு வாழ்த்துக்கள் கூறுகின்றனர்.
இன்னும் ஒரு சிலர்கள் உங்கள் மனதில் இருக்கும் வலியை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது என்று ரச்சிதாவிற்கு ஆறுதல் கூறிவரும் நிலையில் இன்னுமொரு சிலர் நீங்கள் இதை தினேஷை வெறுப்பேற்றுவதற்காக தான் இப்படி பண்ணுறீங்களா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications