நடிகை ரச்சிதாவிற்கு பிரபல இயக்குனருடன் இரண்டாவது திருமணமா? பதிவுகளால் அதிரடி
சென்னை: சீரியல் நடிகையான ரச்சிதா மகாலட்சுமி அவருடைய கணவர் தினேஷூடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் விரைவில் விவாகரத்து நடக்க போவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதுபோல தினேஷ் கூட சில பேட்டிகளில் தங்களுடைய விவாகரத்து கேஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் ரச்சிதா பிரபல இயக்குனர் ஒருவரை திருமணம் செய்ய போகிறார் என்ற செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. ஏற்கனவே முதல் திருமணத்தால் தான் பட்ட வேதனை குறித்து அடிக்கடி சமூக வலைத்தள பக்கத்தில் ஆண்களுக்கு எதிராக ரச்சிதா பதிவிட்டு வரும் நிலையில் இப்போது ரச்சிதாவிற்கு அடுத்த திருமணம் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி ஒன்றாக நடிக்கும்போது காதலித்து திருமணம் செய்து கொள்வது புதிதல்ல. அது பல வருடங்களாக இருக்கிறது. அதேபோல திருமண வாழ்க்கையில் பல சின்னத்திரை தம்பதிகள் ஆரம்பத்தில் எடுத்த முடிவு பிறகு தவறாக போயிருப்பதை பார்க்கவும் முடிகிறது.
அந்த வகையில் ஆரம்பத்தில் திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்த தினேஷ் மற்றும் ரச்சிதா தம்பதிகளுக்கு இடையில் சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்போது இருவரும் பிரிந்து இருக்கின்றனர். கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரச்சிதா போட்டியாளராக இருக்கும்போது தினேஷ் தன்னுடைய ஆதரவை தெரிவித்து வந்தார்.
அதனால் இருவரும் மீண்டும் சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் நம்பி இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சிதா தினேஷ் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தார். அதற்கு பிறகு இருவரும் விவாகரத்துக்கு அப்ளை செய்து கோர்ட்டில் அந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதைத்தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்டரியாக அறிமுகமான தினேஷ் தான் இந்த சீசனில் டைட்டில் வெற்றி பெற்று அதை ரச்சிதாவிடம் கொடுத்து நாங்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வோம் என்கிற ரீதியில் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது ரச்சிதா தன்னுடைய வெறுப்பை தான் காட்டிக் கொண்டிருந்தார்.
இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தினேஷ் ரச்சிதா அவருடைய மனநிலையில் ஸ்ட்ராங்காக இருக்கிறார். அதனால் நானும் இனி என்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கையை பார்க்க போகிறேன் என்று வெளிப்படையாகவே பேசி இருந்தார். இப்படியான நிலையில் தான் தற்போது இணையத்தில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.
அதாவது ரச்சிதா பிரபல இயக்குனர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்யப் போகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் புலப்படவில்லை. காரணம் ரச்சிதா தொடர்ச்சியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஆண்களுக்கு எதிராகவும், திருமண வாழ்க்கையில் பெண்கள் படும் கஷ்ட ங்கள் குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறார்.
இதனால் இவர் மீண்டும் திருமணம் செய்வாரா? என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கிறது. அதே நேரத்தில் ரச்சிதா இப்போது கன்னட திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரைப் பற்றிய செய்தி இப்போது இணையத்தில் பரவி வரும் நிலையில் அது குறித்து எந்த விளக்கத்தையும் கொடுக்காமல் இருக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications