என்னை அதிர்ஷ்டசாலி என்று சொல்ல முடியாது.. மகள் நிச்சயதார்த்தம் முடிந்ததும் ராதா உருக்கமான பதிவு
சென்னை: நடிகை ராதாவின் மகளான நடிகை கார்த்திகாவிற்கு சமீபத்தில் எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருக்கிறது. அது குறித்து ராதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
மகளின் புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய வருங்கால மருமகனின் குடும்பத்தினரை பற்றியும் ராதா உருக்கமாக பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் ராதாவின் பதிவிற்கு அதிகமான பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
தற்போது ஒரு சில நாட்களாகவே நடிகை ராதாவின் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கும் தகவல்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ராதாவின் மகளும் நடிகை கார்த்திகாவின் எங்கேஜ்மென்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும் நிலையில் ராதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அம்மாவின் அன்பை கொட்டி இருக்கிறார்.
அதில் விரைவில் ஒரு புதிய குடும்பத்திற்கு நாங்கள் கொடுக்கும் இளம் பெண்ணை பற்றி நான் பெருமைப்பட முடியாது. மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுக்காக இந்த அழகான குடும்பத்தை தேர்ந்தெடுத்ததற்காக என்னை அதிர்ஷ்டசாலி என்று சொல்ல முடியாது. திருமணம் என்பது இரண்டு குடும்பங்கள் ஒன்று சேர்வதை பற்றியது என்று நான் நம்புகிறேன்.

என் இதயம் இப்போது பல கலவையான உணர்வுகளுடன் இயங்குகிறது. ஆனால் அதிக அதிர்வு உங்கள் அன்பும் மகிழ்ச்சியும் மட்டுமே. எந்த தாயும் விரும்பும் மகள் என்னுடைய மகள் கர்து( கார்த்திகா). நீங்கள் எங்கள் குடும்பங்களுக்கு சிறந்த பரிசாக இருந்தீர்கள். நீங்கள் எனக்கு அளித்த இந்த அற்புதமான அனுபவத்திற்கு நன்றி அன்பே என்று ராதா தன்னுடைய மகள் எங்கேஜ்மென்ட் பங்க்ஷனில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
இதற்கு நடிகை குஷ்பூ, தொகுப்பாளர் டிடி, ராதிகா சரத்குமார், வனிதா, பிளாக் பாண்டி, ஸ்ரீதேவி ஸ்ரீதர் என்று பலர் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்த வருகின்றனர். நடிகை ராதாவிற்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகைகளின் நடிகர் ராதாவும் அவருடைய அக்கா அம்பிகாவும் இருந்து வந்தனர். கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இவர்கள் நடித்திருந்தனர்.
இவர்கள் மட்டுமல்லாமல் தற்போது இவர்களுடைய குழந்தைகளும் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். நடிகை ராதா புகழின் உச்சத்தில் இருக்கும்போதே ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு அவருக்கு கார்த்திகா, விக்னேஷ், துளசி என்ற மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். அதில் மூத்த மகளான கார்த்திகா தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து தமிழில் அவருக்கு "கோ" திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. அதைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அது பெரிய அளவில் கார்த்திகாவுக்கு அங்கீகாரத்தை கொடுக்கவில்லை. இதன் வழியில் ராதாவின் இன்னொரு மகளான துளசியும் தமிழ் சினிமாவில் கடல் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த நிலையில் தன்னுடைய மகள் எங்கேஜ்மென்ட் நேரத்தில் ராதா உருக்கமாக பதிவு வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்து அதிகமான ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி இந்த பதிவை வைரல் செய்து வருகின்றனர்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications