டிடி பலிஆடு.. நூலிழையில் அந்த இடத்திலிருந்து உயிர் தப்பிச்சோம்.. கதறி அழுதாங்க.. ராதிகா ஓபன்
சென்னை: நடிகை ராதிகா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத பல விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார். அப்போது தொகுப்பாளர் டிடி பற்றி இருக்கிறார். அதில் டிடி உட்பட ராதிகா மற்றும் பல நடிகைகள் செல்வி சீரியலில் நடிக்கும் போது நூலிழையில் உயிர் தப்பியது பற்றியும் ராதிகா பேசியிருக்கிறார்.
தொகுப்பாளர் என்று சொன்னதும் டக்கென்று நினைவிற்கு வரும் முகங்களில் டிடியும் ஒருவர். அவர் பல வருடங்களாக பல விஜய் டிவி உட்பட பல சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். சமீபத்தில் அவருடைய உடல் நிலை பிரச்சனை காரணமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில்லை. இந்த நிலையில் டிடி பற்றி நடிகை ராதிகா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

நானும் நடிகை ஸ்ரீபிரியாவும் டிடி தொகுத்து வழங்கிய காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அப்போது டிடியை நாங்கள் பலிஆடாக ஆக்கிவிட்டோம். அதுபோல எனக்கு டிடியோடு இன்னொரு சம்பவம் இருக்கிறது. அதாவது டிடியை முதல்முறையில் நான்தான் சின்னத்திரையில் அறிமுகம் செய்தேன். நான் நடித்த செல்வி என்று சீரியலில் டிடியும் நடித்திருந்தாங்க.
அப்போ நாங்க இலங்கைக்கு ஷூட்டிங்க்கு போயிருந்தோம். இலங்கையில் முதலில் கேண்டில் சூட் செய்து விட்டு கத்தறகம்மாவில் போய் சூட்டிங் முடிக்கலாம் என்று சொல்லி இருந்தாங்க. நான் முதலில் கோவிலில் சூட்டிங் செய்து விட்டு பிறகு மலை உச்சிக்கு போகலாம் என்று சொன்னேன். நான் எடுத்த அந்த முடிவு தான் எல்லாருடைய உயிரையும் காப்பாற்றியது.
நாங்க நினைச்ச மாதிரியே ஷூட்டிங் முடித்து விட்டோம். அன்று தான் கடைசி ஷூட்டிங் அதை முடித்தது எல்லோரும் ஊருக்கு கிளம்பலாம் என்று முடிவு செய்திருந்தோம். கடைசி நாள் எனக்கு மட்டும்தான் சூட்டிங் அதற்கு முந்தைய நாள் டிசம்பர் 25ஆம் தேதி என்னுடைய அண்ணன் வீட்டில் எங்களுக்கு ஒரு டின்னர் ரெடி பண்ணி இருந்தாங்க. எல்லோரும் அங்கு முடிச்சுட்டு காலையில் நான் சூட்டிங் போறேன்.
அப்போ கடற்கரை ஓரமா நான் போயிட்டு இருக்கும்போது கடலில் நிறைய பறவைகள் பறந்துட்டு இருக்குது. வழக்கத்துக்கு மாறா தண்ணி உள்ளே இருந்தது. நான் அதை பார்த்துக் கொண்டே நடந்தேன். ஆனால் எனக்கு அது பெருசா எதுவும் தெரியவில்லை. நாங்கள் பிறந்ததிலிருந்து கடற்கரையில் தான் வசித்து இருக்கிறேன். ஆனாலும் எனக்கு அந்த நேரத்தில் எதுவும் மனதில் தோன்றவே இல்லை.
நானும் சரி என்று பிறகு சூட்டிங் போனேன். அங்கு இருந்த எல்லா நடிகைகளையும் நீங்கள் கிளம்புங்க என்று சொல்லிவிட்டு எனக்காக ஷார்ட்ஸ் எடுத்துட்டு இருந்தோம். அந்த சீரியலின் டைரக்டரின் சின்ன பையனும் அங்கு இருந்தார். எனக்கு ஷார்ட் எடுக்கும்போது என்னுடைய ஹஸ்பண்ட் எனக்கு போன் பண்ணி பேசுகிறார். ஆனால் அவர் சொல்வது எதுவும் எனக்கு சரியாக புரியவில்லை. எர்த் குயிக் என்று ஏதோ சொன்னாரு அந்த நேரத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் கீழே விழுகிறது.
உடனே நான் மற்ற எல்லாரையும் நீங்கள் பெரிய பஸ் இருக்கிறது அந்த பஸ்ஸில் என்னுடைய பிரதர் வீட்டுக்கு போங்க, அது உள்ளே தள்ளி இருக்கிறது. அதுவும் மேல மலைப்பகுதியில் இருக்கிறது என்பதால் நீங்கள் அங்க போங்க என்று நான் என்னுடைய ஷார்ட்டை எடுத்துவிட்டு அங்கு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் எனக்கு மனதிற்குள் சின்ன வருத்தம் இருந்ததால் உடனே டைரக்டரிடம் நாம இங்கிருந்து கிளம்பலாம் என்று சொன்னேன்.

அவர் ஒரே ஒரு ஷாட் மேடம் என்று சொன்னார். நான் எனக்கே ஏதோ ஒரு மாதிரி இருக்கு இங்கே இருக்க வேண்டாம் போகலாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது வந்தது பாருங்க தண்ணி.. அப்படி ஆர்ப்பரிச்சு வந்தது. நல்லவேளையாக மற்றவர்கள் எல்லாம் இன்னொரு பஸ்ஸில் போய்விட்டார்கள். நான் தண்ணீரை பார்த்ததும் என் பக்கத்தில் இருந்த டைரக்டர் மகனை பிடிச்சு வண்டிக்குள் போட்டு வண்டியை எடு என்று கத்தினேன்.
நல்லவேளையாக நாங்கள் அந்த நேரத்தில் வண்டி பக்கத்தில் நின்று கொண்டிருந்ததால் உடனே வண்டியை டிரைவர் எடுத்துவிட்டார். அது கடற்கரை பக்கத்தில் இருப்பதால் மேலே போவதற்கு ஒரு ஏற்றமான பகுதி அந்த ஏற்றமான பகுதியில் டிரைவர் ஒரே அழுத்தில் ஏறிவிட்டார். வண்டியிலிருந்து திரும்பிப் பார்க்கிறேன் தண்ணீர் பகுதியாக முழுவதும் மாறி இருந்தது. பிறகு எல்லாரையும் என்னுடைய பிரதர் ஆஃபீஸில் தங்க வைத்து அங்கு சாப்பாடு அரேஞ்ச் பண்ணனோம்.
பிறகு அவர்களே அங்கிருந்து பிளைட்டில் அனுப்பி வைத்துவிடலாம் என்று பார்த்தால் பிளைட் கேன்சல் ஆகிடுச்சு. அப்போ டிடி என்னை பார்த்து மேடம் எனக்கு கல்யாணம் கூட ஆகல மேடம். இப்பவே நான் செத்துப் போகணுமா? ரொம்ப பயமா இருக்கு மேடம் என்று அழுதுட்டு இருந்தாங்க. நான் யாரும் சாக மாட்டோம் என்று சொல்லி ஆறுதல் சொன்னேன். பிறகு எல்லாரையும் ஒரு வழியா பிளைட்டில் அனுப்பி வைத்தேன். டிடியோடு எனக்கு இந்த அனுபவத்தை மறக்க முடியாது என்று ராதிகா பேசியிருக்கிறார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications