பெண்ணாக இருப்பதே சேலஞ்ச்.. நிறைய பேர் ஏமாத்தினாங்க! ராதா ரவி போன் பண்ணி.. ராதிகா பளிச்
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ஆரம்ப காலகட்டத்தில் தான் பட்ட கஷ்டங்கள் அதற்கு பிறகு தன் வைராக்கியத்தால் தான் ஜெயித்து மேலே வந்தது குறித்து பல விஷயங்களை பேசி இருக்கிறார். இது ராதிகாவிற்கு மட்டுமல்ல பல விமர்சனங்களை தாண்டி ஜெயிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலருக்கும் மோட்டிவேஷன் கொடுக்கும் வகையில் இருக்கிறது என்று ரசிகர்கள் இதை பகிர்ந்து வருகிறார்கள்.
பொதுவாக "நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள். அதற்காக பார்த்து நடந்துக்கணும்" என்று வீட்டில் எல்லோரும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதே நாலு பேர் நாம நல்லா இருந்தா மட்டும் ஆகா ஓகோ என்று புகழ்வார்கள். அதே நேரத்தில் நமக்குன்னு ஒரு கஷ்டம் வந்து விட்டால் இவர்களை பற்றி தான் எனக்கு அப்பவே தெரியுமே என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

ஆனால் அடுத்தவர்களை பற்றி பேசுபவர்கள் வீட்டில் நடக்கும் விஷயங்கள் பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். இது சாதாரணமாக ஒவ்வொரு வீட்டில் மட்டுமல்லாமல் சமுதாயத்தில் நடக்கும் அவலமாக தான் இருக்கிறது. இது குறித்து தான் சமீபத்தில் நடிகை ராதிகா சரத்குமார் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில் ராதிகாவிடம் நீங்க சக்சஸ்ஃபுல் தொழில் முனைவராக இருக்கீங்க... தொழில் முனைவராக என்ன பண்ணலாம்? என்ன பண்ண கூடாது? என்று கேட்ட கேள்விக்கு பேசியிருக்கிறார். அதில் ராதிகா பேசுகையில், பெண்ணாக இருப்பது முதல் சேலஞ்ச். நான் சிங்கிள் மேன் ஷோவாகத்தான் என்னுடைய வாழ்க்கையில் ஆரம்பத்தில் ரன் பண்ணிட்டு இருந்தேன். நிறைய பேர் என்னை ஏமாத்தினாங்க.
எங்களை சீரியஸா எடுக்க மாட்டேங்கறாங்க என்ற ஆதங்கம் இருந்தது அதனால் கேம் ப்ளான் வெச்சுக்கணும், என் பிசினஸை கார்ப்பரேட் ஆக்கணும்னு முடிவு பண்ணி தான் ராடான் ஸ்டார்ட் பண்ணினேன். கடுமையாக உழைக்கணும், ஸ்மார்ட் அண்ட் ஷேப் ஆக இருக்கணும் அவ்வளவுதான் என்று நான் முடிவு எடுத்தேன். இங்கே நம்முடைய உழைப்பை புரிஞ்சுக்க யாரும் இல்ல... புரிய வைக்கவும் யாரும் இல்ல...
ஒரு தடவை ராதாரவி எனக்கு கால் பண்ணி என்னடா இந்த ஆளு உன்ன பத்தி தப்பா பேசுறான் என்று ஒரு ஆளைப் பற்றி என்னிடம் சொன்னார். பொதுவா இப்போ ஒரு சிலர் நடிகை நடிகைகள் பற்றி பேச பழைய காலத்து பத்திரிகையாளர்கள்னு ஒரு பத்து பேரு இருக்காங்க. அவங்க உட்கார்ந்துட்டு என்னென்னமோ பக்கத்துல இருந்து டார்ச் அடிச்சு பாத்த மாதிரி நடிகை நடிகர்கள் பர்சனல் கேரக்டர் அண்ட் ஃபேமிலி பற்றி ரொம்ப அவதூறா பேசுறாங்க.
நாங்க சினிமாவில் நடிச்ச காலகட்டம் வேற இன்னிக்கு எல்லாமே மாறி இருக்கிறது. இன்டர்நெட் இலவசமாக கிடைக்குது அதனால சில புழுக்கள் எங்களை பற்றி எங்க குடும்பத்தை பற்றி அவதூறாக பேசி அதுல வர பணத்துல அவங்க பிள்ளைகளை படிக்க வச்சு, அவங்க சந்தோஷமா சாப்பிடுகிறார்கள் என்றால் அவங்க கமென்ட் கொடுக்க ஒர்க் கிடையாது. இண்டஸ்ட்ரியில் எல்லோரும் ஒன்றிணைந்து இந்த நெகட்டிவிட்டியை தடுக்கணும்.
இது காலத்தின் கட்டாயம் ஒருத்தருடைய பர்சனல் லைஃப் பற்றி பேச யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. நான் வெள்ளித்திரையில் மட்டுமல்ல சின்ன திறையிலும் நடித்திருக்கிறேன். சின்னத்திரை மாதிரி யாராலும் கடினமா உழைக்க முடியாது. பலர் சேர்ந்து பாடுபட்டு இங்கு உழைக்கணும். வருகிற ஆகஸ்டுடன் சினிமாவில் நான் அறிமுகமாகி 45 ஆண்டுகள் ஆகுகின்றது.
இதுவரைக்கும் நான் நடிக்காத ஒரே டைரக்டர் பாலச்சந்தர் சார் தான் என்று அந்த நிகழ்ச்சியில் ராதிகா பேசி இருக்கிறார். இதில் இவருடைய கருத்தை பலர் ஆதரித்து வருகிறார்கள். ஒரு சிலர் இதையும் விமர்சித்து வருகிறார்கள். அதிலும் அதிகமான பெண்கள் ராதிகாவின் கருத்தை பாராட்டி இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications