எனக்கும் அந்த பிரச்சனை நடந்திருக்கு.. ரூமிற்கு வந்து அழுதாங்க! ரகசியங்களை வெளிப்படையாக பேசிய ராதிகா
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் சினிமா உலகில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் தன்னுடைய சினிமா வாழ்க்கையிலும் சில பிரச்சனைகள் நடந்தது என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார். தன்னுடைய ரூமிற்கு வந்து சில நடிகைகள் சிலர் பற்றி பேசி அழுதது குறித்தும் அதில் ராதிகா சரத்குமார் பேசியிருக்கிறார்.
அட்ஜஸ்மென்ட் பிரச்சனை என்பது பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. எல்லா துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. அதே நேரத்தில் சினிமா துறையில் இருக்கும் ஒரு சிலர் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேச தொடங்கி இருக்கிறார்கள்.

அதிலும் கடந்த வாரத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள சினிமா உலகில் நடக்கும் அவலங்கள் அம்பலப்படுத்தியது. அதற்கு பிறகு பல நடிகைகள் தைரியமாக தாங்கள் சந்தித்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார்கள். இந்த நிலையில் இது பற்றி நடிகை ராதிகா சரத்குமார் தந்தி டிவி செய்தி சேனலில் பேசியிருக்கிறார்.
அதில் ராதிகா பேசுகையில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை என்பது மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் நடக்கிறது. சினிமாவில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் அது இருக்கிறது. ஆனால் அதை வெளியே சொல்லும்போது பெண்கள் மீதுதான் மொத்த பழியும் விழுகிறது. சமீபத்தில் நடிகை பார்வதி ஊர்வசியுடன் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்திருந்தாங்க. அந்த படத்தை பார்த்தேன்.
எனக்கு பார்வதியின் நடிப்பு அவ்வளவு பிடித்து இருந்தது. அப்போது அவருக்கு ஏன் அவார்ட் கொடுக்கவில்லை என்று நான் விசாரித்ததற்கு அவர் அதிகமாக பேசிட்டார் அதனால் அவரை பெருமை படுத்தாமல் விட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன் என்று சிலர் சொல்றாங்க. இப்படித்தான் பல இடங்களிலும் இருக்கிறது. எந்த விஷயத்தையும் வெளியே சொன்னால் அந்தப் பெண்ணின் தோளின் மீது மொத்த பழியையும் சுமத்தி விடுகிறார்கள்.
என் கண் எதிரே பல நடிகைகளுக்கு இந்த பிரச்சனை நடந்திருக்கிறது. நான் ஒரு ரூமில் இருக்கும் போது என்னிடம் பல நடிகைகள் வந்து அழுது இருக்கிறார்கள். எங்களுடைய ரூமில் இருக்க பயமாயிருக்கு. சிலர் தொந்தரவு செய்கிறார்கள். நீங்கள் தைரியமான ஆளு அதனால உங்க கூட இருக்கிறோம் என்று அவங்களே சொல்லுவாங்க... ஏன் எனக்கும் ஆரம்பத்தில் அதுபோன்ற பிரச்சனை நடந்திருக்கிறது.
ஒரு அரசியல்வாதி எனக்கு பிரச்சனை கொடுத்தார். ஆனால் நான் அந்த இடத்தில் தைரியமாக எதிர்த்து நின்றேன். இப்போது ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி இருக்கிறது இதில் பல பெண்கள் பல்வேறு குற்றங்களை சொல்கிறார்கள். ஆனால் இதை இன்னும் சில வருடங்கள் கழித்து தான் விசாரிப்பார்கள். அப்போது சம்பந்தப்பட்ட பெண்களிடம் நீங்கள் என்ன எவிடன்ஸ் வைத்திருக்கீர்களா? என்று காயப்படுத்துவார்கள்.
அப்போது அவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை நடக்கும் போது வீடியோ எடுத்தா வைத்துக் கொண்டு ஆதாரம் கேட்டிருக்கிறவர்களிடம் கொடுக்க முடியும். அதனால் எனக்கு இந்த கமிட்டிகளில் உடன்பாடு இல்லை. எந்த ஒரு பிரச்சனை நடந்தாலும் உடனுக்குடன் தீர்வு என்பது போன்ற ஒரு நிலை கொண்டு வர வேண்டும் என்று தன்னுடைய கோபத்தை ராதிகா வெளிப்படுத்தி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications