ராதிகா அம்மா இறந்த சமயத்தில் கூட சூட்டிங்கில் இப்படி பண்ணுனாங்க! ரகசியங்களை உடைத்த நடிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் திரையுலகில் சுமார் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகத் தனது நடிப்பால் கோலோச்சும் நடிகை ராதிகா சரத்குமார், தொழில் மீதும் கடமை உணர்விலும் அவர் கொண்டிருக்கும் பற்றுதலை நிரூபித்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ராதிகாவின் அம்மா காலமாகிவிட்டார். அந்த செய்தி கேள்விப்பட்டதும் அவர் செய்த செயலை பற்றி அவருடன் நடித்த நடிகை மமீதா பைஜூ பெருமையாக பேசி இருக்கிறார்.

Radhika Sarathkumar Mamitha Baiju

ராதிகாவின் கடமை உணர்வு

நடிகை ராதிகா, நடிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்தது முதல் இன்று வரை, எந்தவொரு சூழ்நிலையிலும் தனது பணியை விட்டுக் கொடுத்ததில்லை. அவரது வாழ்வில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம், கலை மீது அவர் கொண்டிருக்கும் தீவிரமான அன்பையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியது.

இது பற்றி மமிதா பைஜூ பேசும்போது நான் இந்த விஷயத்தை பேசலாமா என்று தெரியவில்லை. டியூட் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்த போது தான் ராதிகாவின் அம்மா இறந்து போயிட்டாங்க என்று செய்தி வந்தது. ஆனாலும் அதற்கு பிறகு இரண்டு சூட் இருந்தது அதை முடித்துக் கொடுத்துவிட்டு தான் ராதிகா அங்கிருந்து கிளம்பனாங்க. அது காமெடி சீன் தான் சூட் செய்யப்பட்டது. மனசுக்குள் வருத்தம் இருந்தாலும் அந்த காட்சியில் சிரித்தப்படி தான் நடித்தார். இந்த சம்பவம் நடப்பதற்கு ரெண்டு நாள் முன்பு தான் அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்களாலதான் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று அவங்களை பற்றி பெருமையாக பேசி இருந்தார்.

தாய் இறப்பின் துயரம்

ராதிகாவின் தாய் உயிரிழந்த துயரமான நேரத்தில், அவர் செய்த செயல் படக்குழுவினர் அனைவரையும் வியக்க வைத்து இருக்கிறது. 'தாயை இழந்த துயரத்திலும், படப்பிடிப்புத் தடைபடக் கூடாது' என்ற எண்ணத்தில், அவர் அந்தக் காட்சிகளை பேசி முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள புறப்பட்டார்.

இந்தச் சம்பவம், நடிகை ராதிகா தனது நடிப்புத் தொழிலை வெறும் வேலையாகப் பார்க்காமல், ஒரு தவமாகவே மதித்தார் என்பதைப் பறைசாற்றியது. இந்தத் தொழில் பற்றும், கடமை உணர்வும் தான் இன்று வரை அவர் அசைக்க முடியாத ஒரு சக்தியாகத் தமிழ் திரையுலகில் வலம் வரக் காரணம்.

வெற்றிகரமான குடும்பத்தின் ஆரோக்கிய மந்திரம்

நடிகை ராதிகா, நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட பிறகு, தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் வெற்றிகரமான ஒரு பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். சரத்குமார் குடும்பம் திரையுலகில் மிகவும் அறியப்பட்ட குடும்பமாகும்.

ஜிம் வீடியோ வைரல்

இந்த தீபாவளிக்கு பிறகு, நடிகை ராதிகா, கணவர் சரத்குமார், மகள் வரலட்சுமி சரத்குமார் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஜிம்மில் ஒன்றாகச் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வரலட்சுமி வெளியிட்டுள்ளார். பண்டிகை நாளில் இனிப்புகளை சாப்பிட்டாலும், உடல் ஆரோக்கியம் தான் முக்கியம் என்று உணர்ந்து, குடும்பமாக அவர்கள் உடற்பயிற்சி செய்வது ரசிகர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணத்தை வழங்கியிருக்கிறது.

திரையில் ஒருபுறம் தனது அசாத்தியமான நடிப்பால் பாராட்டுக்களை அள்ளும் ராதிகா, தனிப்பட்ட வாழ்க்கையில் குடும்பத்தை ஒன்றிணைத்து, ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தி, வெற்றிகரமாகத் தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார். கலை மீது அவர் கொண்ட கடமை உணர்வும், குடும்பத்தின் மீதான பாசமும் அவரைத் தமிழ்த் திரையுலகின் இரும்புப் பெண்மணியாக இன்றும் நிலைநிறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+