சுங்கத்துறையிடம் மறைத்து ரம்பா கொண்டு வந்த பொருள்..! வாயை கொடுத்து வம்பில் சிக்கிட்டாரே!
சென்னை: 90ஸ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்த நடிகை ரம்பா இப்போது சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விமானத்தில் தான் மறைத்துக் கொண்டு வந்த பொருள் பற்றி அவர் வெளிப்படையாக பேசியது பலரையும் அதிர வைத்திருக்கிறது.
90ஸ் கிட்ஸ்கள் பலருக்கும் பரீட்சையமானவர்தான் நடிகை ரம்பா அதிலும் சமீபத்தில் ட்ரெண்டான அழகிய லைலா பாடல் மூலம் 2கே கிட்ஸ்களுக்கும் தெரிந்திருக்கும். தொடை அழகி என்று இவரை வர்ணித்த இளைஞர்கள் கூட்டம் ஏராளம். ஆனாலும் புகழின் உச்சத்தில் இருக்கும்போது திடீரென்று திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

சினிமா குறித்து விளக்கம்
திருமணத்திற்கு பிறகு பல வருடங்களாக நடிக்காமல் இருந்த ரம்பா இப்போது மீண்டும் சின்ன திரையில் அடி எடுத்து வைத்திருக்கிறார். சமீபத்தில் இவரிடம் நீங்கள் மீண்டும் திரைப்படத்தில் நடிப்பீர்களா என்று கேட்டபோது இப்போது உள்ள தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்று எந்த திரைப்படமும் வரவில்லை. நான் பார்த்தவரையில் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு அப்படி குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எந்த திரைப்படமும் இல்லை.
கணவருக்கு உதவி
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இல்லாத படங்களில் நான் எப்படி நடிக்க முடியும்? என்னுடைய குழந்தைகள் கூட நான் அப்படிப்பட்ட படங்களில் நடித்தால் சிரிப்பார்கள் என்று பேசி இருந்தார். அதுபோல தன்னுடைய கணவர் தொடங்கும் கிச்சன் ப்ராடக்ட் பிசினஸ்க்கு உதவியாக இருந்து வருகிறார்.

சின்னத்திரையில் அறிமுகம்
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் இவரும் நடுவராக கலந்து கொண்டு இருக்கிறார். அதுபோல சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் ரம்பா அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் தன்னுடைய குடும்ப புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். சில மாதங்களுக்கும் முன்பு நடிகர் விஜய்யுடன் அவர் எடுத்த புகைப்படம் அதிகளவில் வைரல் ஆனது.
ஹோம் டூர் வீடியோ
அதைத் தொடர்ந்து சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசிய விஷயம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அதாவது அந்த பேட்டியில் தன்னுடைய சென்னை வீட்டை சுற்றி காட்டி இருக்கிறார். அப்போது அங்கு விதவிதமாக வைக்கப்பட்டிருக்கும் மரம் செடிகளையும் சுற்றி காட்டி இருக்கிறார். அதில் கருவேப்பிலை செடி, செம்பருத்தி, துளசி, மருதாணி என பல செடிகள் வைக்கப்பட்டிருக்கிறது.

மருதாணி செடி ரகசியம்
அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு மருதாணி செடியை காட்டி இந்த செடி நான் இலங்கையில் இருந்து கொண்டு வந்தது என்று கூறியிருக்கிறார். பொதுவாக விமானத்தில் அடுத்த நாட்டிலிருந்து மரம் செடி கொண்டு வர அனுமதி கிடையாது என்று கூறப்படுகிறது. ஆனால் ரம்பா இலங்கையில் இருந்து மருதாணி செடியை எப்படி கொண்டு வந்திருப்பார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ரம்பாவின் சர்ச்சை பேச்சு
அதற்கு அந்த வீடியோவில் ரம்பா பதில் சொல்லியிருக்கிறார். அதாவது ஒரு பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதில் மருதாணி செடியின் வேரை சிறிதாக வெட்டி எடுத்து போட்டுக் கொண்டு வந்ததாக கூறுகிறார். அந்த மருதாணி இப்போது மரமாக வளர்ந்து நிற்கிறது என்று இவர் பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அரண்மனை போன்ற வீடு
இலங்கையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட ரம்பா கனடாவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கிறார். அப்போது விடுமுறைக்கு தான் சென்னைக்கு வந்து தங்குவார்களாம். விடுமுறையில் சென்னையில் தங்குவதற்காக அரண்மனை போன்ற ஒரு வீட்டை கட்டி இருக்கிறார். அந்த வீட்டிற்கு எதிரே தான் நடிகர் கமல்ஹாசன் வீடு கட்டி கொண்டு இருப்பதாக அந்த பேட்டியில் ரம்பா கூறி இருந்தார்.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே












Click it and Unblock the Notifications