Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஞ்சிதாவின் குமுறல்.. என் வாழ்க்கையை செதச்சிட்டாங்களே.. நித்தியானந்தாவை விட்டு வரமாட்டேன்.. ஒரே போடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் நித்யானந்தாவின் பக்தையாகவே இருக்கிறேன்.. இப்போதும் அவருடன் தான் இருக்கிறேன். இனியும் அவருடன் தான் இருப்பேன் என்று நடிகை ரஞ்சிதா தந்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

கடந்த 1992ம் ஆண்டு கார்த்திக் ஜோடியாக நாடோடி தென்றல் படம் மூலம் டைரக்டர் பாரதிராஜாவினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரஞ்சிதா... முதல் படத்திலேயே தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.. இதைத்தொடர்ந்து, ஜெய்ஹிந்த், கர்ணா, தோழர் பாண்டியன், அமைதிப்படை, தமிழச்சி, மக்களாட்சி, பெரிய மருது, சின்ன வாத்தியார் போன்ற படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

actress ranjitha nityananda

கடந்த 2010ல், நித்தியானந்தாவுடன் தனியறையில் ரஞ்சிதா நெருக்கமாக இருந்த வீடியோ ஒன்று திடீரென வெளியாகி, தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.. இதனால் அவமானத்தில் வீட்டை விட்டே வெளியே வராமல் இருந்த ரஞ்சிதா, மீடியாக்களிடம் அந்த வீடியோ குறித்து சண்டை போட்டுள்ளார்..

விளக்கம்: அந்த வீடியோவில் இருப்பது தான் கிடையாது என்றும் சொல்லியிருக்கிறார். ஆனாலும், குடும்ப உறவுகள் அவரை விட்டு செல்ல, கணவரும் பிரிந்து செல்ல, நிர்க்கதியாக நின்ற நிலையில், கடைசியாக நித்தியானந்தாவின் ஆசிரமத்திலேயே இணைந்துவிட்டார் ரஞ்சிதா...

இதற்கு பிறகு, நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கிகொண்டு சென்றுவிட்ட நிலையில், அந்த நாட்டுக்கு ரஞ்சிதாவை பிரதமராக நியமித்து அறிவித்திருந்தார் நித்தியானந்தா.. கைலாசா நாட்டுக்கு இப்போதுவரை ரஞ்சிதாதான் பிரதமராக இருந்து வருவதாக தெரிகிறது. தன்னுடைய பெயரையும் மா ஆனந்தமயி என்று மாற்றிக் கொண்டார் ரஞ்சிதா.

அவமானங்கள்: இந்நிலையில், ரஞ்சிதாவின் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த பேட்டியில் , அந்த வீடியோ வெளிவந்தபோது தான் சந்தித்த கஷ்டங்கள், அவமானங்கள், பிரச்சனைகளை விவரித்து சொல்லியிருக்கிறார் ரஞ்சிதா. அதன் சுருக்கம்தான் இது:

"மீடியாக்கள் எல்லாம் சேர்ந்து என் மரியாதையை பொதுவெளியில் துகிலுரித்து விட்டார்கள். நான் பெரிய பணக்கார வீட்டு பெண் இல்லை. என் அப்பா பிசினஸ் மேனும் இல்லை. ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பெண்ணா என்னால, இந்த சம்பவத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை..

தற்கொலை முடிவு: இதையெல்லாம் நினைத்து, தற்கொலை செய்து கொள்ளலாம் என்றுகூட முடிவெடுத்தேன்.. ஆனால், என் குடும்பத்தை பாதுகாக்க, வேறு யாரும் இல்லையே? என்று நினைத்து என்னை நானே சமாதானம் செய்து கொள்வேன்.என் கணவரும் என்னை விட்டு விலகிவிட்டார்... எனக்கு நடந்த விஷயத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..

நான் அன்று பிஸியாக நடித்து கொண்டிருந்தபோதுகூட, என்மீது கிசுகிசு கிடையாது.. என் மீது வந்த ஒரே கிசுகிசு, நான் எப்பவுமே புத்தகம் படிச்சிட்டு இருப்பேன் என்பதுதான்.. ஆனால் அன்று நான் படித்த புத்தகங்கள் தான், என்னை பக்குவப்படுத்தியிருக்கிறது...

நித்யானந்தா: எனக்கு எப்போதுமே ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம்.. அதனால்தான் இன்றுவரை ஆன்மீகத்தில் பற்றுடன் உள்ளேன். நான் நித்யானந்தாவின் பக்தையாகவே இருக்கிறேன்.. இப்போதும் அவருடன் தான் இருக்கிறேன். இனியும் அவருடன் தான் இருப்பேன். ஆன்மீக வழியில் செயல்படுவேன்" என்றெல்லாம் அந்த வீடியோவில் உறுதிபட பேசியிருக்கிறார் ரஞ்சிதா.

சில வருடங்களுக்கு முன்பு, குமுதம் நாளிதழுக்கும் ரஞ்சிதா ஒரு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில் தன்னுடைய கணவரை பற்றி புகழ்ந்து பேசியிருந்தார்.. "என் கணவர் யாருடனும் பேசமாட்டார்... எனக்கு அப்படியே மாறுப்பட்டவர் தான் என் கணவர்.

உருக்கம்: என் வாழ்க்கையில் பார்த்த ஒரே பேலன்ஸ்டு நபர் என்றால் அது என் கணவர்தான்.. என்ன பிரச்சினை என்றாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளமாட்டார். 16 ஆண்டுகளாக அவருடன் குடும்பம் நடத்தி வரும் நிலையில், ஒரு நாள் கூட அவர் கோபப்பட்டு பார்த்ததில்லை. என்னை யாராவது பேசிவிட்டால் அதற்கு நான் கோபப்படுவேன். ஆனால் அவர் என்னை சமாதானம் செய்வார்" என்றெல்லாம் பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது.

சில மாதங்களுக்கு முன்பு, நடிகை ரஞ்சிதாவின் அப்பா, அசோக் குமார், பிரபல தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்திருந்தார.. அசோக்குமாரும் ஒரு நடிகர்தான்.. இவர் சுமார் 25 க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்..

உண்மையா? பொய்யா?: அந்த பேட்டியில், "என் இரண்டாவது பெண்ணான ரஞ்சிதா, சுவாமி நித்யானந்தாவை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. 2 பேரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வெளிவந்தன.

ஒன்று உண்மை.. நித்யானந்தாவால், தான் காதலித்து திருமணம் செய்தவரை விவாகரத்து செய்துவிட்டார் ரஞ்சிதா. கோபத்தில் நித்யானந்தாவிடம் சென்றேன். வெட்கமாக இல்லையா? என் மகளை உங்கள் ஆசிரமத்தில் இருந்து திருப்பி அனுப்புங்கள் என்று சொன்னேன். என் கோபத்தையும் வலியையும் புரிந்துகொள்பவர்கள் யாருமே இல்லை. என் இரண்டு மகள்களும் நித்யானந்தாவின் மாயையை பின்பற்றினார்கள். இன்னும் அவருடன் இருக்கிறார்கள்.

கடைசி மகள்: இதையெல்லாம் தாங்க முடியாமல் என் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். என் 3வது மகள் என்னை கவனித்துக் கொள்கிறாள். மற்ற 2 பேரும் எனக்கு ஒரு போன் கூட செய்யவில்லை... பொருளாதார ரீதியாக எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. என் கடைசி மகள் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறாள்" என்று கூறியிருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+