அல்லு அர்ஜுன் கூட சேர்ந்து டான்ஸ் ஆடும்போது சங்கடமாக இருந்தது.. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்
சென்னை: தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான 'புஷ்பா 2' திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸை உலுக்கி எடுத்துள்ளது. இந்த படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா, 'பீலிங்ஸ்' பாடலில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஆடிய நடனம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.
"பீலிங்ஸ்" பாடலின் படப்பிடிப்பு, படம் வெளியீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பே தொடங்கி 5 நாட்களில் முடிந்தது என்று ராஷ்மிகா தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஆடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும், தொடக்கத்தில் சற்று பயமாகவும், சங்கடமாகவும் இருந்தது என்று கூறியுள்ளார்.

"பொதுவாக என்னை யாராவது தூக்கிச் சென்றால் எனக்கு பயமாக இருக்கும். இந்த பாடலில் அல்லு அர்ஜுன் சார் என்னை அலேக்காக தூக்கிச் சென்று நடனமாட வைத்தபோது நான் மிகவும் பயந்தேன். ஆனால் பின்னர் அதுவே சகஜமாகிவிட்டது, கூச்சம் போய்விட்டது" என்று ராஷ்மிகா கூறியுள்ளார்.
ராஷ்மிகாவின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே "பீலிங்ஸ்" பாடலில் இடம் பெற்றுள்ள கவர்ச்சியான வரிகள் மற்றும் நடன காட்சிகள் காரணமாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலர், இந்த பாடல் ஆபாசமானது என குற்றம் சாட்டி வருகின்றனர்.
பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வரிகள் மிகவும் வெளிப்படையானதாகவும், இளைஞர்களை தவறான பாதையில் இட்டுச் செல்லும் வகையில் இருப்பதாகவும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். ராஷ்மிகா மந்தனாவின் நடன அசைவுகள் மிகவும் கவர்ச்சியாகவும், பாலியல் ரீதியாக தூண்டிவிடும் வகையிலும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அல்லு அர்ஜுனுடன் ஒட்டி உறவாடும் வகையில் அந்த பாடல் அமைந்திருந்தது.
புஷ்பா 1 படத்தில் கூட இப்படித்தான் அல்லு அர்ஜுனுடன் ஒரு வேனுக்குள் அமர்ந்து ராஷ்மிகா மந்தனா காதல் செய்யும் காட்சியில், ஆபாசம் கொப்பளிக்கும். அந்த சேட்டைகளை குடும்பத்தோடு பார்க்க முடியாது. புஷ்பா 2 அதற்கு விதிவிலக்கு இல்லை. புஷ்பா 1 படத்தில் அல்லு அர்ஜுனுடன் சமந்தாவும் ஒட்டி உறவாடி ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு இருப்பார். அதே பாணியில்தான் பீலிங்ஸ் பாடலும் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில், கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில், காதல் காட்சிகளில் கனவு கன்னியாக நடித்து வந்தவர் ராஷ்மிகா மந்தனா. பலரின் ஆதர்ஷ காதல் நாயகியாக இருந்தார். ஆனால், சமீப காலங்களாக ஆபாசம் என்று சொல்லும் அளவுக்கு நடிக்க தொடங்கியுள்ளார். அவருக்கே, இந்த பாடலில் நடிக்கும்போது முதலில் சங்கோஜமாக இருந்ததாக கூறியுள்ளது குறிப்பிடத்த்ககது.


Click it and Unblock the Notifications
