90ஸ் நடிகை ரவளியை ஞாபகம் இருக்கா? கிளாமருக்கு நோ சொன்னவர்.. இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க
சென்னை: 90ஸ் காலகட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்த ரவளி அந்த நேரத்தில் கவர்ச்சி படங்களில் நடிக்க மாட்டேன், கவர்ச்சியாகவும் நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருந்த நிலையில் இப்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
முன்னணி நடிகர்கள் பலரோடு நடித்த ரவளி இப்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கும் நிலையில் அவரைப் பற்றி பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 1990 ஜஸ்ட்மென்ட் இந்த மலையாள திரைப்படத்தின் மூலமாகத்தான் ரவளி சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.
அதுபோல ரவளி தெலுங்கு திரை உலகில் பிரபலமாக இருந்தாலும் தமிழில் அவர் அறிமுகமானது பட்டத்து ராணி என்ற திரைப்படத்தில் தான். அந்த திரைப்படத்தில் சாந்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படத்தில் அவருடைய கேரக்டர் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகவில்லை. அதை தொடர்ந்து அவருக்கு புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த திரைப்படத்தின் நடித்த பிறகு மீண்டும் தெலுங்குக்கு போன நடிகை ரவளி அங்கு பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு மறவாதே கண்மணி என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பி இருந்தார். அந்த படத்தில் கதாநாயகனாக வினித் நடித்த நிலையில் ரவளி கேரக்டருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருக்கிறது. அதற்கு பிறகு தான் கரிசக்காட்டு பூவே என்ற திரைப்படத்தில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் ரவளி நடித்திருந்தார்.
நெப்போலியன், குஷ்பூ நடித்த இந்த திரைப்படத்தில் ரவளி நாகமணி என்ற கேரக்டரில் நடித்து அவருடைய நடிப்பை பலரையும் வியக்க வைத்திருந்தார். அதைத்தொடர்ந்து விஜயகாந்த் நடித்த "திருமூர்த்தி" என்ற திரைப்படத்திலும் ரவளி நடித்து தமிழ் திரை உலகில் பிரபலமாகி இருக்கிறார். பவித்ரன் இயக்கத்தில் உருவான திரு மூர்த்தி திரைப்படம் பெரிய அளவில் ஆக்சன் படமாக இருந்தது. அந்த திரைப்படத்தில் ரவளி உமா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் துறை பக்கமே வராமல் இருந்த ரவளி அங்கு தெலுங்கு திரையில் அதிகமாக நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் கடந்த 2007 ஆம் ஆண்டு ரவளிக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. நீலி கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்த நிலையில் இந்த தம்பதிக்கு 2008 ஆம் ஆண்டு பெண் குழந்தையும், 2018 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்து இருக்கின்றனர்.

அதுபோல 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் நடித்துக் கொண்டிருந்த நடிப்பை விட்டு விட்டு தன்னுடைய குடும்பத்தை கவனிப்பதில் முழு நேரத்தையும் ரவளி செலுத்தி வருகிறார். அதுபோல அவருக்கு தமிழ், தெலுங்கு என சில வாய்ப்புகள் வந்திருந்தாலும் அதை அவர் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார். இந்த நிலையில் தான் சமீபத்தில் ஒரு பங்க்ஷன் ஒன்றில் ரவளி கலந்து கொண்டிருந்த நிலையில் அங்கு எடுத்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் உடல் பருமனாகி இருக்கும் ரவளியை பார்த்ததும் இவரா அவர் என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். அதுபோல ரவளி படைவீட்டு அம்மன் போன்ற சாமி படங்களிலும் நடித்திருந்தார். அது மட்டும் அல்லாமல் தெலுங்கில் பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். தமிழிலும் வந்தால் ஸ்ரீ தேவி என்ற சீரியலிலும் பொண்ணுக்கு தங்க மனசு என்ற சீரியலில் சித்ராவாகவும் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications