பல பேர் முன்பு அந்த இடத்தில் கை வைத்து.. விசித்திராவை அடுத்து சன் டிவி சீரியல் நடிகை பகிர்ந்த பகீர்
சென்னை: சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா தனக்கு சினிமா துறையில் நடந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார்.
அதைத்தொடர்ந்து பல நடிகைகள் தாங்கள் அனுபவித்த அட்ஜஸ்மென்ட் பிரச்சனை குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வரிசையில் சீரியல் நடிகை ரிஹானா தான் நடிக்க வருவதற்கு முன்பு பஸ்ஸில் ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து பேசி இருக்கிறார்.

பொதுவாக அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை சினிமா துறையில் மட்டுமல்லாமல் பல துறைகளில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் பலரும் அதை வெளிப்படையாக சொல்வது கிடையாது. இப்போது ஒரு சில பிரபலங்கள் தாங்கள் அனுபவித்த வேதனைகள் குறித்தும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்தும் பேச துணிந்திருக்கின்றனர்.
அந்த மாதிரி தான் கடந்த வாரத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகை விசித்திரா 25 வருடத்திற்கு முன்பு தெலுங்கு நடிகர் ஒருவர் தனக்கு கொடுத்த தொந்தரவு, அதற்கு பிறகு தான் பட்ட வேதனை சினிமாவை விட்டு விலக காரணமானது என்பதை பற்றி பேசி இருந்தார். இது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைத்தொடர்ந்து ஒரு சில நடிகைகள் தாங்கள் அனுபவித்த பிரச்சினைகள் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் இது குறித்து சீரியல் நடிகை ரிஹானா தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்த பிரச்சனை பற்றியும் பேசி இருக்கிறார். ரிஹானா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு சன் டிவியில் ஆனந்த ராகம் என்ற சீரியல் மூலம் பிரபலமடைந்திருந்தார்.
இப்படி இருக்கையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த கசப்பான சம்பவத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் சினிமாவுக்கு நடிக்க வருவதற்கு முன்பு செவிலியர் ஆக பணிபுரிந்து வந்தேன். அப்போது ஒரு நாள் வேலைக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது என் பின்னாடி இருந்த ஒரு நபர் என் பின்பக்கத்தை தடவிக் கொண்டே இருந்தார்.
உடனே நான் உனக்கு தடவ வேண்டுமா எனக்கு நீ ஒரு பக்கமாக தடவுவதால் எரிகிறது இந்த பக்கம் வந்து தடவிக்கொள் என்று கூறினேன். நான் சத்தமாக பேசியதை பேருந்தில் இருந்து அனைவரும் பார்த்தனர். ஆனால் யாருமே அவனை தட்டி கேட்கவில்லை. உடனே நான் நடத்துனரை கூப்பிட்டு எனக்கு நடந்த அனைத்தையும் கூறினேன்.
உடனே அவர் பேருந்தை நிறுத்தி அந்த நயவஞ்சகனை பேருந்தில் இருந்து இறக்கி விட்டார் என்று பேசியிருக்கிறார். இது குறித்து ரசிகர்கள் சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறையிலும் எல்லா இடங்களிலும் இப்படி பிரச்சனை நடக்கத்தான் செய்கிறது. இது போல பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தொந்தரவுகள் இருக்கத்தான் செய்கிறது. எல்லோருமே தங்களுக்கு நடப்பதை பொறுத்துக் கொள்ளாமல் தைரியமாக அதை எதிர்க்க வேண்டும்.. அப்போதுதான் இப்படிப்பட்டவர்களுக்கு பயம் வரும் என்றும் கருத்து கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications