Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சினிமாவை விட்டு விலகிய ரீமாசென் இப்படி மாறிவிட்டாரே.. ஏக்கத்தில் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்னல் திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் மின்னிக் கொண்டிருக்கும் ரீமாசென் தற்போது எடுத்த புகைப்படங்கள் பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

சினிமாவை விட்டு விலகிய ரீமாசென் மீண்டும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக மாறியதும் அவருடைய ரசிகர்கள் எப்போது திரை பிரவேசம் என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

பல வருடங்களுக்கு பிறகு ரீமாசென்னை பார்த்த ரசிகர்கள் பலர் இவர் அவர்தானா என்று குழப்பத்தோடு ரீமாசென்னை பார்த்து வருகிறார்கள்.

மின்னலே திரைப்படத்தில் அறிமுகம்

மின்னலே திரைப்படத்தில் அறிமுகம்

மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்து தெலுங்கு திரைப்படங்களின் மூலமாக நடிப்புத் துறைக்குள் நுழைந்த ரீமா செல்லுக்கு தமிழ் சினிமா தான் பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்தது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தன்னுடைய முதல் திரைப்படத்தில் ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். ரீமாசென், மாதவனுடன் நடித்த முதல் திரைப்படம் ஆன மின்னலே திரைப்படம் இப்ப வரைக்கும் பல 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் திரைப்படமாக இருந்து வருகிறது. அதுவும் அந்த திரைப்பட தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் இப்ப வரைக்கும் முனுணுக்கம் பாடல்களாக இருந்து வருகிறது. அதில் ரீமா சென்னின் அசத்தலான டான்ஸ் அனைவரையும் கவர்ந்து உள்ளது.

மிரட்டிய கீதா கேரக்டர்

மிரட்டிய கீதா கேரக்டர்

செல்லமே, திமிரு திரைப்படத்தில் விஷாலுடனும் பகவதி தூள் ஆயிரத்தில் ஒருவன் என பல திரைப்படங்களில் ரீமா சென் நடித்திருந்தாலும் நெகட்டிவ் கேரக்டரில் தன்னுடைய நடிப்பை வேற லெவலில் காட்டி இருந்த வல்லவன் திரைப்படம் ரீமாசென்னுக்கு அதிக அளவில் பெயரை வாங்கிக் கொடுத்திருந்தது. வல்லவன் திரைப்படத்தில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் நெகட்டிவ் கேரக்டரிலும் அனைவருடைய மனதில் இவருடைய நடிப்பு வேற லெவல் என்று சொல்லும் பெயரை இந்த திரைப்படத்தில் இவர் பெற்றிருந்தார்.வல்லவன் திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில வருடங்களுக்கு பிறகு தான் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் ரீமாசென் நடித்திருந்தார்.

சினிமாவுக்கு டாட்டா

சினிமாவுக்கு டாட்டா

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் தன்னுடைய கம்பீரமான நடிப்பை வெளிகாட்டி பலரையும் மிரட்டிய ரீமாசென் அதற்குப் பிறகு சினிமா துறைக்கு டாட்டா காட்டி ரசிகர்களை ஏங்க வைத்துவிட்டு திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துவிட்டார். ரீமாசென் 2012ல் தொழிலதிபர் ஷிவ் கரன் சிங்கை திருமணம் முடித்து அடுத்த வருடமே ஒரு ஆண் குழந்தைக்கு தாயாக மாறிவிட்டார். அவருடைய மகனின் பெயர் ருத்ரவீர் தற்போது எந்த திரைப்படங்களிலும் நிகழ்ச்சிகளிலும் ரீமா சென் தலை காட்டுவதே இல்லை அதனால் அவருடைய ரசிகர்கள் அவரை அதிகமாக தேடிக் கொண்டிருந்தனர்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்

பல வருடங்களுக்கு பிறகு தற்போது ரீமா சென் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது திருமணத்திற்கு பிறகு எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவ்வபோது அவர் பதிவிட்டு வருகிறார். இவருடைய புகைப்படத்தை மீண்டும் பார்த்த ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்களை கூறி எப்போது சினிமாவில் மறு பிரவேசம் என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அதுவும் தற்போது தன்னுடைய தோழிகளோடு ரீமாசென் எடுத்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+