ரேஷ்மாவின் தவறான முடிவு.. ஆன் தி வேயில் வருது அதிர்ஷ்டம்! புஷ்பா புருஷனின் ரேஞ்சே இன்று வேற: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷ்மா பசுபலேட்டி 'வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.. இந்த படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார். குறிப்பாக, இளைஞர்களை இந்த கேரக்டர் ஈர்த்திருந்தது.. சினிமா வாய்ப்புகள் பெரிதாக வராத நிலையில், சீரியலில் நடித்து வருகிறார் ரேஷ்மா.. அதிலும், பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சினிமாவிலிருந்து விலகலாம் என்று ரேஷ்மா யோசித்து வருகிறாராம். அதுகுறித்து பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.

BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "அழகான நடிகை ரேஷ்மா.. ஆனால், தன்னுடைய ரீல்ஸ்களில் பெரும்பாலும் கவர்ச்சியான உடைகளை அணிந்து வீடியோ போட்டு வருகிறார்.. அல்லது தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பலவிதமான போஸ்களை தந்து போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்..

Television actress reshma pasubuleti Pushpa Purushan

கிளாமராக போட்டோக்களை போட்டும்கூட, வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அழகு, திறமை என எதுவாக இருந்தாலும், அதிர்ஷ்டம் என்பதும் இங்கு சினிமாவுக்கு தேவை.. ஆணுக்கும், பெண்ணுக்கும், அதிர்ஷ்டம் இருந்தால்தான், இங்கு வெற்றி பெற முடியும். இவர் பாபி சின்ஹாவின் உறவினர் என்கிறார்கள்.. ரேஷ்மாவை போலவே திறமை வாய்ந்த நடிகரான பாபி சிம்ஹாவுக்கே வாய்ப்புகள் அமையவில்லை..

புஷ்பா புருஷன்

சிஐடி சகுந்தலா, ஒய்.விஜயா, பிரமிளா போன்ற நடிகைகள் எல்லாமே திறமையான நடிகைகள்தான்.. ஆனால், குறிப்பிட்ட ஒரு கேரக்டரில் நடித்துவிட்டால், அப்படியே முத்திரை குத்தப்பட்டுவிடுவார்கள்.. இதுபோல நடிகர்களும் உண்டு.. பஞ்சாயத்துக்காரர் கேரக்டர் என்றால், போலீஸ்காரர் கேரக்டர் என்றால், குறிப்பிட்ட நடிகர்களே திரும்ப திரும்ப நடிப்பார்கள்..

அதுபோல, ரேஷ்மாவை பொறுத்தவரை, வேலைன்னு வந்தால் வேலைக்காரன் படத்தில், புஷ்பா கேரக்டரில் சூரியின் மனைவியாக நடித்திருந்தார்.. அப்போதிருந்து புஷ்பா புருஷன் என்ற பெயர் பிரபலமானது. அந்த படத்தில் நடித்ததால்தான், தன்னுடைய கேரியர் போய்விட்டதாக ரேஷ்மா வருத்தமாக கூறுகிறார். ஒருவேளை அந்த படத்துக்கு பிறகு, அதுபோன்ற கேரக்டர்களே ரேஷ்மாவுக்கு தொடர்ந்து வந்திருக்கலாம்.

இரண்டாவது மனைவி

பாக்கியலட்சுமி சீரியலில் இரண்டாவது மனைவியாக நடிக்கிறார் ரேஷ்மா.. இதுவும் கிட்டத்தட்ட புஷ்பா போன்ற கேரக்டர்தான்.. இதனால்கூட ரேஷ்மா நொந்து போயிருக்கலாம்.. ஆனால், அன்று புஷ்பா புருஷனான நடித்தவரைதான் இன்று உதாரணமாக ரேஷ்மா எடுத்து கொள்ளவேண்டும். இன்று அந்த புஷ்பா புருஷன் யார்? பெரிய ஹீரோவாக வளர்ந்துவிட்டார் சூரி.

புஷ்பா புருஷன் என்று அவரை யாரும் சொல்ல முடியாது. அதனால், ரேஷ்மா அந்த நினைப்பை மாற்றி கொள்ள வேண்டும். தப்புத்தாளங்கள் படத்தில் விபச்சாரியாக நடித்த சரிதா, மிகப்பெரிய உச்சத்துக்கு சென்றார்.. சினிமா பற்றின பார்வை ரேஷ்மாவுக்கு குறைவாக உள்ளது..

தவிர்த்திருக்கலாமே

ஒருவேளை இதுபோன்ற கேரக்டர்கள் வந்தால், அதை தவிர்த்துவிட்டு நல்ல கேரக்டருக்காக காத்திருந்து நடித்திருக்கலாம். சீரியலிலும் அதே போன்று கேரக்டரை அவாய்டு செய்திருக்கலாமே? பாக்கியலட்சுமி என்ற கேரக்டருக்கும், ராதிகா என்ற கேரக்டருக்கும் வித்தியாசம் உள்ளதே? வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று முதலில் நடிக்க சென்றுவிட்டு, பிறகு வருத்தப்படுவதாக தெரிகிறது.

அதேசமயம், யாராக இருந்தாலும், சின்ன கேரக்டர் என்றாலும் நடிப்பை காட்டி முன்னுக்கு வந்துவிடலாம். லொள்ளு சபாவில் ஒரு மூலையில் எங்கோ நடித்து கொண்டிருந்தார் யோகிபாபு. இன்று அவரது ரேஞ்ச் வேற.. இதற்கெல்லாம் திறமை, நேரம் முக்கியம்.. செய்யும் தொழிலை சரியாக செய்தாலே அவரவர்க்கான இடம் நிச்சயம் கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+