திடீரென்று சீரியலில் இருந்து விலகும் ரேஷ்மா.. அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. இவருக்கே இந்த நிலைமையா?
சென்னை: நடிகை ரேஷ்மா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் தான் விரைவில் சீரியலில் இருந்து விலக இருப்பதாக கூறி இருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீதாராமன் சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கும் ரேஷ்மா சூட்டிங் முடிவடைந்ததும் லைவில் ரசிகர்களிடம் பேசி இருக்கிறார்.
ரேஷ்மா சீதாராமன் சீரியலில் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும் ராதிகாவாக நடித்து வருகிறார். பாக்கியலட்சுமி சீரியலிலும் வில்லியாக ராதிகா இருந்தாலும் அனைவரின் மனம் கவர்ந்த கேரக்டராக இருக்கிறார். அதுவும் சமீபத்தில் அவர் பாக்யாவுக்கு சப்போர்ட் செய்து பலருடைய சப்போர்டை பெற்றுக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் தான் எதனால் சீரியலில் இருந்து விலக போகிறேன் என்பதை பற்றியும், அதுவும் என்ன சீரியல் என்பதை பற்றியும் அந்த லைவ் வில் ரேஷ்மா பேசியிருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் பரவி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் ரேஷ்மா ஒரு நடிகையாக பலருக்கும் தெரிந்திருந்தாலும் இவர் ஒரு பிக் பாஸ் பிரபலமாகவும் இருந்திருக்கிறார். அதோடு ஒரு செவிலியர் ஆகவும், செய்தி வாசிப்பாளராகவும் பல திறமைகளை கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக கவனம் செலுத்தி வரும் ரேஷ்மா வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியிலும் அவர் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
அதை அடுத்ததாக பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாகவும், ஜீ தமிழில் சீரியலில் வில்லியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு சீரியல்களும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் இன்று ரேஷ்மா instagram பக்கத்தில் லைவில் வந்து ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தான் இரண்டு சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பது தனக்கு கஷ்டமாக இருப்பதாக கூறியிருந்தார்.
அதோடு தான் ஒரு சீரியலில் இருந்து தான் விலகப் போகிறேன். ஆனால் அது என்ன என்பதை பற்றி நான் உங்களிடம் சீக்கிரமாக சொல்கிறேன் என்றும் சொல்லியிருந்தார். தனக்கு சில திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். எப்போதும் ஒரே மாதிரியாக வாழ்ந்து கொண்டிருப்பது ரொம்பவே போர் அடிக்கிறது. திடீரென்று நம்முடைய மனதிற்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

அதுவும் சமீப காலமாக நான் ரொம்பவே உடல்நல பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறேன். அதனால நீங்க உங்களோட உடல்நலத்தை ரொம்ப கவனமா வச்சுக்கோங்க. மனச சந்தோசமா வச்சுக்கோங்க. அதுபோல எந்த இடத்திலும் டென்ஷன் ஆகாமல் அதையும் குறைவா வச்சுக்கோங்க என்று அந்த லைவில் பேசிக் கொண்டிருந்தபோதே ரசிகர்கள் எந்த சீரியலில் இருந்து நீங்க விலகப் போறீங்க என்று கேட்டுக் கொண்டே இருக்க அதுக்கு மட்டும் பதில் அளிக்காமல் அதை சீக்கிரமா சொல்றேன் என்று மழுப்பி இருந்தார்.
நான் இப்போ சீதாராமன் சீரியல் முடிச்சுட்டு தான் வந்திருக்கேன். அந்த சீரியலிலும் நான் வில்லியா தான் நடிச்சிட்டு இருக்கிறேன். அதனால் தான் என்னுடைய மேக்கப் கூட இப்போ இப்படி இருக்கிறது என்று விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தார். ஆனால் ரேஷ்மாவுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் அவரை விட பெரியவர்களான நிலையில் இருக்கும் நிலையில் அந்த லைவில் பல ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் எப்போது என்று ஜொள்ளு விட்டு கொண்டு இருந்ததை காண முடிகிறது.
அது போல தான் சீரியலில் இருந்து விலகப் போகிறேன் என்று உறுதியாக ரேஷ்மா சொல்லிக் கொண்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் நீங்க சீதாராமன் சீரியலை விட்டு வேண்டுமென்றால் போங்க, அதுல தான் நீங்க வில்லியா இருக்கீங்க. ஆனா ராதிகாவா மட்டும் போயிறாதீங்க என்று சிலர் வேண்டுகோள் வைத்தும் வருகிறார்கள். ஒரே நேரத்தில் யாருடைய தயவு இல்லாமல் ரேஷ்மா ஆரம்ப காலகட்டத்தில் பல வேலை செய்து வந்தேன் என்று பலமுறை சொல்லி இருக்கிறார்.
அதுவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய சோக கதை பலரையும் கண்ணீர் விட வைத்திருந்தது அத்தனை நாட்களாக சகஜமாக எல்லோரிடமும் பேசி சிரித்துக்கொண்டிருந்த ரேஷ்மா பிக் பாஸ் நிகழ்ச்சியில் சோக கதை சொல்லும் டாஸ்கில்தான் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அவல நிலைகளை குறித்து பேசி இருந்தார். அதில் இவர் வெளிநாட்டில் இருக்கும்போது அங்கு அவருடைய கணவர் இவர் வயிற்றில் குழந்தையோடு இருக்கும்போது கூட அடித்து துன்புறுத்தி...,

மாடியில் இருந்து கீழே அடித்து தள்ளியதில் வயிற்றில் அடிபட்டு ப்ளீடிங் ஆன நிலையிலும் தானாகவே அந்த காரை எடுத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு போய் அட்மிட் ஆகி அந்த குழந்தையை பெற்றெடுத்தது போன்ற வலி நிறைந்த பல கதைகளை சொல்லியிருந்தார்.. ஆனால் அவரா இப்போது இரண்டு சீரியலில் ஒரே நேரத்தில் நடிக்க முடியவில்லை என்று சொல்கிறார்? என்றும் பலர் கேள்விகளை கமெண்ட்களில் எழுப்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications