பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ரேஷ்மா விலகப் போகிறாரா? அவரே போட்ட போஸ்ட்..! குவியும் கமெண்ட்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டரில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் வெளியே பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் இவர் சீரியலில் இருந்து விலகப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சீரியலில் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் நடித்த புஷ்பா கேரக்டர் இவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் இவர் சூரிக்கு ஜோடியாக வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் நடித்தது தான் இப்ப வரைக்கும் பேசப்படுகிறது.

baakiyalakshmi serial vijay tv

திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சீரியலிலும் நடித்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு இவருடைய சோக கதையை சொன்ன பிறகு இவர் மீது இருந்த பார்வையை ரசிகர்களுக்கு மாறி இருந்தது. அதுவரைக்கும் இவர் instagram-யில் அதிகமான போட்டோ சூட் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் கிளாமர் குயினாக வளம் வந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடைய சோக கதை பலரையும் பீல் பண்ண வைத்தது.

baakiyalakshmi serial vijay tv

அதுபோல விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் இவருக்கு பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது. ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதா ராமன் சீரியலில் வில்லியாக நடித்து இருந்தார். அதுபோல அபி டெய்லர் சீரியலிலும் இவர் வில்லியாக தான் நடித்திருந்தார். ஆனால் பாக்கியலட்சுமி சீரியலில் தான் இவர் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்து இருக்கிறார்.

baakiyalakshmi serial vijay tv

பாக்கியாவிற்கு ஆரம்பத்தில் தோழியாக இருந்த ராதிகா இப்போது கோபியின் இரண்டாவது மனைவியாக மாறி இருக்கிறார். இப்போது கோபி செய்த திருட்டு வேலைகள் எல்லாம் பாக்யாவிற்கு தெரிய வந்திருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்து பாக்யா மிரட்டி இருக்கிறார். அதை தொடர்ந்து நாளைக்கான ப்ரோமோவில் கோபி மீது பாக்கியா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்த நிலையில் கோபியை போலீஸ் அரெஸ்ட் செய்து கூட்டிட்டு போகின்றனர்.

baakiyalakshmi serial vijay tv

ராதிகா எதுவும் பேசாமல் அதிர்ச்சியாகி நிற்கிறார். கோபி செய்யும் தப்புகள் தவறு என்று நேற்று கூட ராதிகா பேசியிருந்தார். இந்த நிலையில் ப்ரோமோவில் கோபி அரஸ்ட் ஆகும் போது கோபத்தில் ராதிகா நிற்கும்போது கோபிக்கு சப்போர்ட் செய்து பாக்யா மீது கோபப்படுகிறாரா? அல்லது கோபி செய்தது தப்பு என்று அவருக்கு எதிராக நிற்கப் போகிறாரா? என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

இப்படியான நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் எடுத்த சில புகைப்படங்களை ரேஷ்மா தன்னுடைய instagram பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் இவர் சீரியலில் இருந்து விலகப் போகிறாரா? என்ற கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். காரணம் இவர் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியலில் இப்போது முக்கியமான கேரக்டரில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

baakiyalakshmi serial vijay tv

அந்த சீரியலில் இனி இவருடைய கேரக்டர் தான் அதிகமாக முக்கியத்துவம் உள்ள நிலையில் அதற்காக பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதற்கு முடிவெடுத்து இருக்கிறாரா? அதனால் தான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியலட்சுமி சீரியல் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறாரா என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

ஆனாலும் ரேஷ்மா இதுகுறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இதற்கு முன்பு இவர் சீதாராமன் சீரியலிலும் பாக்கியலட்சுமி சீரியலிலும் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது கூட நான் ஒரு சீரியலில் இருந்து விலகலாம் என்று இருக்கிறேன் என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனால் விரைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ரேஷ்மா பதில் கொடுப்பார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+