ஆம்பள அப்படித்தான்! பொண்ணுங்க தான் பொறுப்பா இருக்கணும்.. அட்ஜஸ்மென்ட் பற்றி நடிகையின் சர்ச்சை பேச்சு
சென்னை: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ரிஹானா சமீபத்தில் பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சினிமா மற்றும் சீரியலில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து அவர் பேசி இருக்கிறார். அப்போது ஆண்கள் அட்ஜஸ்மெண்டுக்கு கூப்பிட தான் செய்வான். ஆனால் பொண்ணுங்க தான் பொறுப்பா இருக்கணும் என்று அவர் கூறியிருக்கிறார். இது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
பொதுவாக பெண்களுக்கு சினிமா சீரியல் மட்டுமல்லாமல் எல்லா இடங்களிலும் அட்ஜஸ்மென்ட் பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது. சின்னதாக வேலை பார்க்கும் இடமாக இருந்தாலும் சரி, பெரிய பெரிய கம்பெனிகளாக இருந்தாலும் சரி அங்கே பல பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்கிறது. சிலர் இதற்கு உடன்படாமல் தங்களுக்கு நடக்கும் அநீதிகள் குறித்து வெளிப்படையாக பேசி விடுகிறார்கள்.

பேசுவதற்கு தயக்கம்
சிலர் இதைப் பற்றி வெளியே பேசினால் நம்மைப் பற்றி தவறாக நினைத்து விடுவார்களோ? நம்முடைய குடும்பத்தினர்கள் என்ன நினைப்பார்கள்? அவர்களுக்கு பிரச்சனை வந்து விடக்கூடாது என்று தங்களுக்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து கூட வெளியே சொல்வதற்கு பயப்படுகிறார்கள். ஆனால் சமீப காலமாக சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் பலர் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் நடிகை பேட்டி
இந்த நிலையில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் கதாநாயகியின் மாமியாராக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ரிஹானா சின்னத்திரையில் நடக்கும் பல அவலங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில் சினிமாவில் மட்டுமல்ல பெண்களுக்கு எல்லா இடங்களிலும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
தொடரும் தொல்லை
ஒரு பெண் தனியாக இருக்கிறார் என்று தெரிந்தாலோ அல்லது இந்த பெண்ணை எப்படியாவது தனக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கும் சில ஆண்கள் பெண்களுக்கு ஏதாவது தொல்லைகள் கொடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள். அதை ஒரு பெண் வெளியே சொல்கிறார் என்றால் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போய்விடுகிறது. தைரியமாக பேசுபவர்களை பார்த்தாலே வாய்ப்பு கொடுப்பதற்கு பலர் பயப்படுகிறார்கள்.
எல்லா இடங்களிலும் நடக்கிறது
எந்த தப்பும் செய்யாத ஒரு சிலர் மட்டும்தான் வாய்ப்பு கொடுக்கிறார்கள். அதுபோல சின்னத்திரையில் நடிக்க வேண்டும் என்று பல பெண்கள் ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றே ஒன்று சொல்ல சொல்கிறேன் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை, பாலியல் பிரச்சனைகள் எல்லாம் சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கிறது.
துணை வேண்டும்
நீங்கள் நடிக்க வருகிறீர்கள் என்றால் உங்களுக்கு துணைக்கு யாரையாவது கூட்டிகொண்டு போங்கள். சில ஆம்பளைங்க மனசு அலைபாய விட்டுட்டு திரியிறாங்க. ஆனால் பொண்ணுங்க தான் பொறுப்பா இருந்துக்கணும். நாம் ஒரு இடத்தில் வேலை பார்க்க வேண்டும் என்றால் அந்த நம்மிடம் நெருங்க முடியாத வகையில் நான் இருக்க வேண்டும். நடிக்க வரும்போது ஒரு பெண் தன்னுடைய மாமியார் அல்லது அம்மா கணவர் என்று யாரையாவது ஒருவரை கூட்டிக்கொண்டு வரலாம்.

அட்வைஸ்
அப்படியே அவர்களை கூட்டிக் கொண்டு வந்தாலும் அவர்களுக்கு நல்ல மரியாதை கொடுக்க வேண்டும். அப்போதுதான் அதை பார்ப்பவன் உங்களிடம் நெருங்குவதற்கு பயப்படுவான். அதே நேரத்தில் தனியாக இருப்பவர்கள் உங்களுடைய சகோதரி அல்லது சகோதரர் யாரையாவது கூட கூட்டிட்டு வரலாம். உங்களுடைய செல்போனுக்கு பாஸ்வேர்ட் கூட போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
நடிகை பேச்சு
உங்களிடம் ஒருவன் தவறாக பேச வேண்டும் என்று நினைத்தால் கூட உங்கள் பக்கத்தில் எப்போதும் ஆள் இருக்கும் என்பது போல காட்டிக் கொள்ளுங்கள். ஒரு நடிகரோ, இயக்குனரோ உங்களிடம் தனியாக பேச வேண்டும் காபி ஷாப் போக வேண்டும் என்று கூப்பிட்டால் என்னால் தனியாக வர முடியாது என்று சொல்லிவிடுங்கள் என்று ரிஹானா பேசியிருக்கிறார்.
உங்க கருத்து
ரிஹானா சொன்னது சரி என்று சிலர் பேசி இருந்தாலும், எந்த இடத்திலும் இதுபோல அடுத்தவர்களின் துணையோடு ஒரு பெண்ணால் எப்படி வாழ முடியும்? நடிக்கப் போகும்போது எல்லா நேரத்திலும் ஒருவர் கூட வர முடியாது. அதுபோல எந்த வேலைக்கு போனாலும் குடும்பத்தினர்கள் கூட வந்து தான் ஒரு பெண் பாதுகாப்பாக இருக்க முடியுமா? என்றும் சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ரிஹானா சொன்னது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது இப்போதைய சூழ்நிலைக்கு இதுபோல எல்லாம் செய்து கொண்டிருக்க முடியாது என்று நினைக்கிறீர்களா பாஸ்?
-
சிறகடிக்க ஆசை: போலி சாமியார் பற்றி உண்மையை நிரூபித்த முத்து! விஜயாக்கு தெரிய வந்த இன்னொரு உண்மை! செம சம்பவம் -
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications