நாய் சப்போர்ட்டர்ஸ் வீட்டில் இரண்டு சாவு வரணும்! சாபமிட்ட நடிகை ரிஹானா.. கோபத்தில் கமாண்ட் கொடுத்த சந்தியா
சென்னை: விஜய் டிவியில், கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி சமூகத்தில் நடக்கும் பல விவாதங்களை வெளிப்படையாகப் பேசுகிறது. சமீபத்தில், தெரு நாய்கள் அகற்றப்பட வேண்டுமா? அல்லது பாதுகாக்கப்பட வேண்டுமா? என்ற தலைப்பில் நடந்த விவாதம், சமூக வலைத்தளங்களில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

ரிஹானாவின் சாபமும், ரசிகர்களின் எதிர்ப்பும்
இந்த விவாதத்தைப் பற்றிப் பலரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வந்த நிலையில், சீரியல் நடிகை ரிஹானா ஒரு பேட்டியில் நாய் காதலர்களைக் கடுமையாக விமர்சித்து, அவர்களுக்கு சாபமும் இட்டுள்ளார். "நாய்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் வீட்டில் இருப்பவர்கள் நாய் கடித்துச் சாகணும். அவங்க அம்மாவோ, பாட்டியோ இறக்க வேண்டும். இரண்டு எழவாவது விழணும். அப்படி இறந்தவர்களுக்கு நாற்பதாவது நாளில் காரியத்துக்கு சாப்பாடு போடும்போது கடிச்ச நாயை கூப்பிட்டு வீட்டில் வைத்து சாப்பாடு போடணும். அப்படி போடுபவர்களை நான் நாய் லவ்வர்ஸ் என்று ஒத்துக்கிறேன். மத்தபடி நான் நாய் லவ்வர்ஸ் என்று சப்போர்ட் பண்ணி பேசாதீங்க." என்று மிக மோசமான வார்த்தைகளால் அவர் பேசியுள்ளார். நான் நேற்று கூட காரில் போய்க்கொண்டிருந்த போது ரோட்டில் நான்கு நாய் என் காரை பார்த்து குறைத்து பின்னாடியே ஓடி வந்தது. நான் காரில் போனதால் எனக்கு பிரச்சனை இல்லை. இதே பைக்கிலோ அல்லது நடந்ததோ போறவங்களுக்கு எவ்வளவு பிரச்சனையை ஏற்படுத்தும் என்று கேட்டிருந்தார்.
ரிஹானாவின் இந்தப் பேச்சுக்கு, பலர் தங்களின் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். ஒருவர் எவ்வளவு கோபமாக இருந்தாலும், இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது சரியல்ல என்றும், இது மனிதாபிமானமற்ற செயல் என்றும் பலரும் விமர்சித்து வருகிறார்கள். அதே சமயம், சிலர் ரிஹானாவின் கருத்துக்களுக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.
சந்தியாவின் கேள்வி
ரிஹானாவின் இந்தப் பேட்டிக்கு, சீரியல் நடிகை சந்தியா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். "உங்களுக்கு நாய் பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக, நாய்களைப் பிடிப்பவர்களுக்கு சாபம் விடுவது எந்த விதத்தில் நியாயம்? நீங்கள் யார் மேடம்?" என்று நேரடியாகக் கேள்வி கேட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விலங்குகளுக்கு ஆதரவாகப் பேசிவரும் சந்தியாவின் இந்தக் கேள்விக்கு, பலரும் ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
நீயா நானா நிகழ்ச்சியின் இந்த விவாதம், சமூகத்தில் உள்ள இருவேறுபட்ட கருத்துக்களை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. நடிகை ரிஹானாவின் சாபம், இந்த விவாதத்திற்கு மேலும் சர்ச்சையைக் கூட்டியுள்ளது. இது குறித்து, நீயா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications