விளம்பரத்துக்காக மானத்தை விற்ற ஸ்ருதி நாராயணன்? ’அந்த’ நபரை யாருமே கேட்கலையே? போட்டுடைத்த பிரபலம்..!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் ஸ்ருதி நாராயணனின் சில வீடியோக்கள் திடீரென சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ ஏஐ தொழில் நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது என ஸ்ருதி நாராயணன் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் ஸ்ருதி நாராயணனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகை ரிஹானா. எந்த பெண்ணும் விளம்பரத்திற்காக மானத்தை விற்க மாட்டார்கள் எனவும், அதே நேரத்தில் பெண்கள் தான் கவனமாக இருக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா கேரக்டரில் நடித்திருப்பவர் தான் ஸ்ருதி நாராயணன். ஆரம்பத்தில் மாதத்திற்கு ஒரு முறை அவர் சீரியலில் தோன்றி வந்த நிலையில் தற்போது அவரை சுற்றி ஒரு காதல் கதை பின்னப்பட்டிருக்கிறது.

ரோகிணி வீட்டில் மாட்டிக்கொண்ட பின் வித்யாவின் முக்கியத்துவம் சீரியலில் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு எபிசோடிலும் குறைந்தபட்சம் இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் ஆவது அவர் வந்து விடுகிறார். இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களாகவே அவர் குறித்த சர்ச்சை சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சில தினங்களுக்கு முன்பு ஸ்ருதி நாராயணனின் தனிப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. வாய்ப்புக்காக ஒருவரிடம் அவர் வீடியோ காலில் பேசியதாக அந்த வீடியோ பகிரப்பட்ட நிலையில் அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என விளக்கம் அளித்திருந்தார். மேலும்," உங்களுக்கும் தாய் சகோதரி இருக்கிறார்கள். அவர்களும் பெண் தான். வேண்டுமென்றால் அவர்களின் வீடியோக்களை பகிர்ந்து என்ஜாய் செய்யுங்கள்" என பதிலடி கொடுத்திருந்தார். அதே நேரத்தில் கடந்த ஒரு வாரமாகவே அவர் குறித்த பேச்சு தான் சமூக வலைதளங்களில் இருந்திருக்கிறது.
வாய்ப்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?, வேண்டுமென்றே ஸ்ருதி நாராயணன் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கலாம்! எனவும், விளம்பரத்திற்காக அவர் அவ்வாறு செய்திருக்கலாம் என சிலர் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் எந்த பெண்ணும் விளம்பரத்திற்காக மானத்தை விற்க மாட்டாள் என அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் பிரபல நடிகையான ரிஹானா. இதுகுறித்து பேசிய அவர்," தற்போது தொழில்நுட்ப வளர்ந்துவிட்ட நிலையில் செல்போன்களை பெண்கள் கவனமாக கையாள வேண்டும்.
அதில் உள்ள தகவல் எப்போதுமே நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர வேண்டும். செல்போன் தொடர்பான விழிப்புணர்வு நம்மிடம் இருக்க வேண்டியது அவசியம். இந்த வீடியோ வெளியாகும் வரை ஸ்ருதி நாராயணன் யார் என்றே பலருக்கும் தெரியாது. விளம்பரத்திற்காக அவர் அவ்வாறு செய்திருப்பார் என விமர்சிக்கிறார்கள். எந்த பெண்ணும் விளம்பரத்திற்காக தனது மானத்தை விற்க மாட்டார் ஸ்ருதி நாராயணனை விமர்சிக்கும் ஆட்கள் அந்த வீடியோவை வெளியிட்ட நபர் குறித்து இதுவரை கேள்வியை எழுப்பவில்லை.
அது ஏன் என தெரியவில்லை.. அதே நேரத்தில் பெண்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் செய்து விட்டு பின்னர் வருந்துவது தேவையில்லாதது. இது போன்ற விவகாரங்களில் சிக்கும் பெண்களின் மனம் படும் வேதனை மிக மோசமானது" என கூறியிருக்கிறார்.
-
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications