மனைவியிடம் தோற்றால் தான் வெளியே ஜெயிக்க முடியும்! கணவர் பக்கத்தில் இருக்க, ரோஜா சொன்ன சீக்ரெட்
சென்னை: நடிகை ரோஜா 90ஸ் காலகட்டத்தில் கதாநாயகியாக கலக்கி கொண்டு இருந்த நிலையில் இப்போது சினிமாவுக்கு பிரேக் விட்டுவிட்டு அரசியல் பக்கம் சென்றிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய கணவரோடு சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது ஒரு ஆண் வெளியே ஜெயிக்க வேண்டும் என்றால் முதலில் மனைவியிடம் தோற்றுப் போக வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அவர் சில காரணங்களையும் சொல்லி இருக்கிறார்.
நடிகை ரோஜா செம்பருத்தி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படமே இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தது. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நிலையில் தன்னுடைய முதல் திரைப்பட இயக்குனரான ஆர்கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

செம்பருத்தி கதாநாயகி
செம்பருத்தி திரைப்படத்தில் பிரசாந்த் ரோஜாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லோருமே எவர் கிரீன் பாடலாக அமைந்துவிட்டது. முதல் திரைப்படத்தில் இவருடைய கிரங்கடிக்கும் பார்வை மற்றும் டான்ஸ் பலருடைய ஃபேவரைட் ஆக இருந்தது. நடிகை ரோஜா மற்றும் ஆர்.கே செல்வமணி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.

தொகுப்பாளர்
திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு சில வருடங்களாக விலகி இருந்த ரோஜா பிறகு சின்னத்திரையில் கவனம் செலுத்தி இருந்தார். ஜீ தமிழில் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதன் மூலம் இவருக்கு சின்னத்திரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடியிருந்தாலும் இவருடைய கலகலப்பான பேச்சு மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை கிண்டல் செய்யும் திறமையால் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

திருமண நள் கொண்டாட்டம்
பிறகு அதிலிருந்தும் விலகி அரசியலில் சேர்ந்திருந்தார். 2011 இல் இருந்து தற்போது வரை காங்கிரஸில் விவசாய கட்சியில் இருக்கிறார். அதுபோல கடந்த 2024 ஆம் ஆண்டு வரை ஆந்திராவில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்திருந்தார். இந்த நிலையில் ஆர்கே செல்வமணி மற்றும் ரோஜா தம்பதியின் திருமணநாள் கொண்டாட்டம் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

சண்டை வேண்டாம் பாஸ்
அப்போது ரோஜா சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் நான் எப்பவுமே சண்டை போடுவேன். ஆனால் செல்வமணி சார் எப்பவுமே சண்டை போட மாட்டார். கோபம் வந்ததுன்னா சீரியஸா ஒரு ரூமுக்குள்ள போய் கதவை மூடிப்பார். பிறகு கோபம் குறைந்ததும் அவரே வெளியே வருவார். அவர் என்னை திட்டினா நான் அழுவேன், அப்புறம் என்னை சமாதானப்படுத்திடனும், இதெல்லாம் அவருக்கு தெரியும்.
ரோஜாவின் அட்வைஸ்
வாழ்க்கையில் ஜெயிக்கணும்னு நினைச்சா பொண்டாட்டி கிட்ட தோத்துப் போங்க. பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டா வீட்டுல சண்டை போட்டுகிட்டு தான் இருக்கணும். வெளியே போய் ஜெயிக்க முடியாது என்று ரோஜா அட்வைஸ் கொடுத்திருக்கிறார். இதற்கு நெட்டிசன்கள் தங்களுடைய கமெண்ட்களை குவித்து வருகிறார்கள். ரோஜா சொன்னது சரிதானா பொண்டாட்டியிடம் தோற்றுப் போனால் தான் வெளியே ஜெயிக்க முடியுமா? உங்க அனுபவத்தை சொல்லுங்க பாஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications