ரூபிணிக்கு இந்த நிலைமையா? வேலூர் பிரமுகர் யார்? திருப்பதி கோயிலில் ஸ்பெஷல் தரிசனத்துக்கு ஆசைப்பட்டு?
சென்னை: பிரபல நடிகை ரூபிணி நினைவிருக்கிறதா? 80களில் கொடிகட்டி பறந்த நடிகை.. ரஜினி, கமல், விஜயகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர்.. இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் இன்றும் தமிழகத்தில் உள்ளது.. பல வருடமாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்து வருகிறார்.. இப்போது திடீரென இவரை பற்றின செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகி, கவலையையும், பரபரப்பையும் தந்து வருகிறது. என்ன நடந்தது?
நடிகை ரூபிணி மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.. சிறுவயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர்..

இவர் நடிகர் கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த மனிதன், விஜயகாந்த் நடித்த கூலிக்காரன் உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக "தாமரை" என்ற படத்தில் நெப்போலியனுக்கு ஜோடியாக ரூபிணி நடித்தார்.
அதன்பின் கடந்த 1995ஆம் ஆண்டு மோகன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அனுஷா ரயானா என்ற மகள் உள்ளார். குடும்பத்தோடு மும்பையில் வசித்து வருகிறார். பரத நாட்டியம், குச்சுப்புடி நடனம் கற்றுத் தரும் பள்ளியையும், மும்பையில் நடத்தி வருகிறார்.
ஏழுமலையான் பக்தை ரூபிணி
கடவுள் பக்தி கொண்ட நடிகை ரூபிணி, திருப்பதி ஏழுமலையானின் பக்தையும்கூட.. இதனால், அடிக்கடி திருப்பதிக்கு சென்று வணங்குவது வழக்கமாகும்.. அந்தவகையில், தமிழகத்தை சேர்ந்த சரவணன் என்பவர் ரூபிணிக்கு சமீபத்தில் அறிமுகமாகியிருக்கிறார்.. உள்ளார். தேவஸ்தான அதிகாரிகளுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் ருபிணியிடம் சரவணன் கூறியுள்ளார்.
அத்துடன், தமிழகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் ரூபிணியிடம் காட்டி, அவர்களுக்கு தேவையான சிறப்பு தரிசனம் செய்து கொடுத்து அனுப்பியதாகவும், எனவே, இதுநாள்வரை அவர்களின் குடும்ப நண்பராக இருப்பதாகவும் பொய் பொய்யாக அவிழ்த்து விட்டிருக்கிறார்..
அக்கவுண்ட்டிற்கு ஒன்றரை லட்சம்
இதனால் சரவணனின் பேச்சை நம்பிய நடிகை ரூபிணி, சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுள்ளார். ஒரு மணி நேரம் தரிசனம் செய்ய, 3 பேருக்கு 77,250 ரூபாய் தருமாறு, சரவணன் கேட்டிருக்கிறார்.. அதன்படியே அந்த பணத்தை சரவணன் அக்கவுண்ட்டிற்கு ரூபிணி அனுப்பி வைத்துள்ளார்.. பிறகு, தங்கும் விடுதி கட்டணமாக, 15,000 ரூபாய் வேண்டும் என்றாராம்.. இப்படியே ரூபிணியிடம் மொத்தம் 1.50 லட்சம் ரூபாய் வாங்கி விட்டார் விட்டார்.
ஆனால், சொன்ன தேதியில், தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யவில்லையாம்.. இதுகுறித்து கேட்டதற்கு ஏதோதோ காரணங்களை சொல்லி தட்டிக்கழித்து வந்துள்ளார்.. ஒருகட்டத்துக்கு பிறகு, சரவணனை நடிகையால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
வேலூர் கோயில் பிஆர்ஓ
அப்போதுதான், தன்னை சரவணன் ஏமாற்றியதாக ரூபிணி உணர்ந்துள்ளார்.. வேலுாரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் (பிஆர்ஓ) மக்கள் தொடர்பு அதிகாரியாக சரவணன் பணிபுரிந்து வருகிறாராம்.
தன்னைப்போல் இனி வேறு எந்த பக்தரையும் சரவணன் ஏமாற்றாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆந்திர மாநிலம், மற்றும் தமிழக மாநில முதல்வர்களுக்கு ரூபிணி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகை, தமிழக நபரிடம் ஒன்றரை லட்சம் ஏமாந்திருப்பது அதிர்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications