Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரவும் வதந்தி.. இனிமே பொறுமையா இருக்க மாட்டேன்! கோபத்தில் சாய் பல்லவி போட்ட போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சாய் பல்லவி ராமாயணம் திரைப்படத்தில் நடிப்பதற்காக அசைவ உணவை தவிர்த்து வருகிறார் என்று பிரபல பத்திரிக்கை ஒன்றில் செய்தி வந்ததற்காக கண்டனம் தெரிவித்து ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அது இணையத்தில் அதிகமான கமெண்ட்ஸ் பெற்று வருகிறது.

நடிகை சாய் பல்லவி ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அமரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடித்தார் என்று சொல்வதை விடவும் இந்து ரெபேக்காவாக வாழ்ந்திருந்தார். அதனாலயே இணையத்தில் அவரை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

television sai pallavi

சாய்பல்லவி டாக்டராக இருந்தாலும் சினிமாவில் தனக்குன்னு ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அதிகமாக மேக்கப் எதுவும் இல்லாமல் தன்னுடைய தனித்துவத்தோடு கேரக்டரோடு ஒன்றி வாழ்வது இவருடைய இயல்பான நடிப்பாலேயே மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து இருக்கிறார்.

அமரன் திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டானதை தொடர்ந்து பாலிவுட்டில் ரன்பீர் கபூருடன் ராமாயணம் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இந்த படத்தில் சாய் பல்லவி நடிப்பதற்காக சைவ உணவு உண்பவராக மாறிவிட்டார் என்று பிரபல பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது இணையத்தில் பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

இதை பார்த்த சாய் பல்லவி தன்னுடைய எக்ஸ் அக்கவுண்ட்டில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதோடு இதுபோன்று மீண்டும் ஆதரமற்ற வதந்திகளை செய்திகளாக வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

அதாவது ராமாயணம் படத்தில் சாய் பல்லவி நடித்து வருவதற்காக சைவமாக மாறி உள்ளதாகவும், அவர் எங்கு சென்றாலும் சைவ உணவுகளை மட்டுமே சமைக்க சமையல்காரர்கள் கூட்டி செல்வதாகவும், சாய்பல்லவி ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

television sai pallavi

அதை தன்னுடைய எக்ஸ் தளத்தில் டேக் செய்த சாய் பல்லவி அந்த பதிவில், உண்மையில் ஒவ்வொரு முறையும் எனக்கு எதிராக ஆதாரமற்ற வதந்திகள், தவறான அறிக்கைகள் மற்றும் பொய்யான செய்திகள் எழுதப்பட்ட போதிலும் நான் அமைதியாக இருந்தேன். ஆனால் இனி நான் அமைதியாக இருக்க மாட்டேன்.

நான் என்ன செய்கிறேன் என்பது எல்லாம் கடவுளுக்கு தெரியும். அந்த செய்திகளை அப்படியே கடந்து செல்வதால் இது மீண்டும் மீண்டும் நடக்கிறது. அவர்கள் இதுபோன்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்துவதே இல்லை. குறிப்பாக எனது படம் வெளியாகும் போதும், அறிவிக்கப்படும் போதும், எனது சினிமா வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தருணங்களும் இதுபோன்ற மோசமான செய்திகள் வருகின்றது.

இனி இதுபோல எந்த பிரபல ஊடகங்களிடமிருந்தோ அல்லது நபர்களிடமிருந்தோ வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அமரன் படத்தில் பலருடைய மனதை கவர்ந்த பிறகு சாய்பல்லவி ரன்பீர் கபூருடன் ராமாயணம் படத்திலும், தெலுங்கில் நாக சைதன்யாவுடன் தண்டேல் படத்திலும் நடித்து வருகிறார். அதுபோல லவ் ஸ்டோரி எனும் படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது.

அதுபோல சாய்பல்லவி ஏற்கனவே பல பேட்டிகளில் தான் சைவ உணவுகளை மட்டுமே உண்பேன் என்று கூறி இருக்கிறார். அதோடு ஒரு உயிர் கொல்வதை தன்னால் பார்க்க முடியாது என்பதால் தான் சைவ உணவுகளை உண்பதாகவும் பேசி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+