இன்ப அதிர்ச்சி.. 2வது கல்யாணத்துக்கு சமந்தா ரெடி? தோதா சொன்ன வார்த்தை.. அப்ப மாப்ளை இவரா: பிரபலம்
சென்னை: நடிகை சமந்தாவுக்கு 2வது திருமணம் நடைபெற போவதாக இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், மூத்த பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன், சமந்தா திருமணம் குறித்து முக்கிய தகவல் ஒன்றை சொல்லியிருக்கிறார்.
சமீபத்தில், சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.. இதையடுத்து, சமந்தாவும், 2வது திருமணத்தை நடத்த வேண்டும் என்ற அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதனிடையே, இயக்குநருடன், சமந்தாவுக்கு 2வது திருமணம் என்ற வதந்தி, இணையத்தில் வட்டமடித்தது.. இதைப்பார்த்த சில ரசிகர்கள், ஏற்கனவே திருமணமானவருடன் மறுமணம் வேண்டாம் என்று சமந்தாவுக்கு அன்பு கட்டளையை போட்டு வருகிறார்கள்.

சித்தார்த்:
இப்படிப்பட்ட சூழலில், மூத்த பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமந்தாவுக்கு 2வது திருமணம் குறித்து பேசியிருக்கிறார். King 24X7 சேனலில் அவர் சொல்லும்போது, "ஆரம்பத்தில் நடிகர் சித்தார்த்துடன் லிவிங் டூகெதரில் வாழ்ந்து வந்தார் சமந்தா. பிறகு சித்தார்த்தை பிரேக் அப் செய்துவிட்டார்..
2வதாக நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார்.. ஆனால் தம்பதியிடையே கருத்து வேறுபாடு முற்றியது.. எனவே, சமந்தாவை விவாகரத்து செய்யும்படி நாகார்ஜூனா குடும்பத்தினர் நாகசைதன்யாவை நிர்ப்பந்தித்தார்கள். இதனால், சமந்தாவை நாக சைதன்யாவும் விவாகரத்து செய்தார். பிறகு நடிகை சோபிதாவை 2வது திருமணம் செய்தார்.. சோபிதாவும் ஏற்கனவே தொழிலதிபர் ஒருவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.
திருமணம்:
சோபிதா- நாக சைதன்யாவின் திருமணத்தை பார்த்ததுமே, தானும் 2வது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சமந்தாவுக்கு வந்துள்ளதாம். பேமிலிமேன் என்ற வெப்சீரிஸில், ராஜூ நிடுமூடு என்ற டைரக்டருடன் சமந்தா பணியாற்றியிருந்தார். இந்த வெப்சீரிஸில் உச்சக்கட்ட கவர்ச்சியுடனும் சமந்தா நடித்திருந்தார். இந்த வெப்சீரிஸ் வெற்றிக்கு காரணமே சமந்தாதான்.. இந்த தொடரின் வெற்றிக்கு காரணமான சமந்தாவுக்கு டைரக்டர் ராஜூ கடன்பட்டவராகிறார்..
இந்நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக பத்திரிகைகளில் செய்திகள் கசிந்து வருகின்றன. இதற்கு தோதாக, "பாதுகாப்பான வாழ்க்கை துணை, கைக்குழந்தையோடு இருந்தாலும் பரவாயில்லை" என்று சமந்தா போஸ்ட் போட்டுள்ளார்.
மகிழ்ச்சி வாழ்க்கை:
இதன் அர்த்தம் என்னவென்றால், டைரக்டர் ராஜு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளும் இருக்கிறார்களாம். எனினும், பாதுகாப்பாக கணவன் இருந்தால் போதும், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று சமந்தா நம்புகிறாராம். ஆக மொத்தம் ராஜுவுடனான சமந்தாவின் திருமணம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது" என்றெல்லாம் அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications