நான் உயிரோடு இருக்க காரணமே இதுதான்..உணர்வுபூர்வமாக மீண்டும் பதிவு வெளியிட்ட சம்யுக்தா..காரணம்?
சென்னை: நடிகை சம்யுக்தா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
கடந்த சில நாட்களாகவே அவருக்கும் அவருடைய கணவர் விஷ்ணுகாந்த்தும் இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனையை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் சம்யுக்தா நான் உயிரோடு இருக்க காரணம் இதுதான் என்று பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார்.

சின்னத்திரையில் பல நடிகர்கள் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து இருக்கின்றனர். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு அதாவது மார்ச் மாதம் தான் சின்னத்திரை நடிகை ஆன சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் திருமணம் செய்திருந்தனர். இவர்கள் இருவரும் தங்களுடைய காதல் ரகசியத்தை சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து பல பேட்டிகளிலும் ஒருவரை மற்றி ஒருவர் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
காதலிக்கும் போது நன்றாகவே போய்க்கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கையில் கல்யாணம் முடிந்த சில நாட்களுக்குள் பிரச்சனை பூதாகரமாக வெடிக்க தொடங்கி இருக்கிறது. சின்ன சின்ன பிரச்சனைகளும் இவர்களுக்கு பெரியதாகவே தெரிந்திருக்கிறது. அதனாலயே இரண்டு மாதத்திற்குள் கருத்து வேறுபாடால் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒருவரை மாற்றி ஒருவர் தாக்கிக் கொள்ளும் பொருட்டு சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இதில் யார் பக்கம் சரி யார் பக்கம் தவறு என்று யூகிக்க முடியாத வகையிலே இவர்களுடைய பிரச்சனை இருக்கிறதே என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அந்த அளவிற்கு இருவரும் மாறி மாறி லைவில் வந்து ஒருவரை மாற்றி ஒருவர் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் சம்யுக்தா இன்று தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் இன்னைக்கு மறக்க முடியாத நாள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது தொடக்க காலத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வுகளை என்னால் மறக்க முடியாது. இதுவரை நான் எங்க போனாலும் எல்லாருமே என் கூட இருந்து நிறைய அன்பு காட்டி வந்திருக்கிறீர்கள். நான் நடிச்ச கதாபாத்திரத்தை தான் நான் ரொம்பவே ரசிக்கிறேன்.

இப்ப வந்து தனிப்பட்ட விஷயத்தில் என்னைப் பற்றி தெரிந்து கொண்டு என்மேல் அன்பு காட்டுறீங்க. எல்லோருமே என்ன உங்க சொந்த சகோதரியா நினைக்கிறீங்க. உங்களின் விலைமதிப்பற்ற அன்பை எனக்கு கொடுக்கிறீங்க. ஒரு சில வாழ்க்கை விஷயங்களை சொன்னீங்க, உங்க எல்லாருக்குமே நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் இருக்கிறதற்கு தகுதியானவள் தான் என்பதை உணர வைத்த அந்த விஷயம் தான் நான் இப்போ உயிரோடு இருக்க காரணம். எல்லோருக்குமே ரொம்ப நன்றி நான் யார் என்பதற்காக என்னை ஏற்றுக் கொண்டதற்காக உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் எப்பவும் நன்றியோடு இருப்பேன் என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications