ரியல் தம்பதியாக போகும் விஜய் டிவி பிரபலங்கள்.. திருமண தேதியை அறிவித்த சங்கீதா.. குவியும் வாழ்த்து
சென்னை: கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் நடித்த நடிகை சங்கீதா மற்றும் அரவிந்த் சேஜு இருவரும் காதலிக்கும் செய்தியை சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர். இந்த நிலையில் அவர்களுடைய திருமண தேதியை தற்போது அறிவித்திருக்கிறார்கள்.
சன் மியூசிக்கல் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி அதிலிருந்து சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியலில் சங்கீதா நடித்து பிரபலமானார். முதல் சீரியலே இவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது. ஆரம்பத்தில் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்த இவர் பிறகு நெகட்டிவாக நடித்திருந்தார்.

அந்த சீரியலின் முடிவுக்கு பிறகு ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். கடந்த ஆண்டு முடிவுக்கு வந்த தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுவாக பாதிக்குப் பிறகு சங்கீதா தான் நடித்திருந்தார். அதுபோல சங்கீதா ஹாட் ஸ்டாரில் ஓடிடியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் வெப்சீரிஸில் மலர் டீச்சர் ஆக நடித்திருந்தார்.
இந்த சீரிஸ் சங்கீதாவுக்கு பெரிய அளவில் பிரபலத்தை பெற்று கொடுத்தது. அதற்கு பிறகு அதிகமான ரசிகர்கள் அவரை மலர் டீச்சர் என்று கூப்பிட்டு வந்தனர். அந்த சீரியலில் கலை கேரக்டரில் நடித்தவர் தான் அரவிந்த் சேஜு. இந்த சீரிஸில் அபி கேரக்டரில் நடித்த தீபிகா மற்றும் கௌதம் கேரக்டரில் நடித்த ராஜா வெற்றி பிரபு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் இதே சீரியலில் நடித்து இரண்டாவது ஜோடியாக இப்போது சங்கீதா மற்றும் அரவிந்த் இருவரும் திருமணம் செய்ய இருக்கிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலிக்கும் செய்தியை தங்களுடைய இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தனர். இந்த நிலையில் இவர்களுடைய திருமண தேதியை இப்போது அறிவித்திருக்கிறார்கள்.
அதில் வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை சங்கீதா மற்றும் அரவிந்த்க்கு திருமணம் நடைபெற இருக்கிறது. அதுபோல அரவிந்த் பெற்றோர் கொரோனா காலகட்டத்தில் இறந்துவிட்ட நிலையில் அவருடைய அண்ணன் தான் இந்த திருமணத்தை முன் நின்று நடத்துகிறார் என்று கூறப்படுகிறது.

அதுபோல அரவிந்த் கனா காணும் காலங்கள் சீரிஸ் மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல நேற்று முதல் விஜய் டிவியில் இரவு 7:30க்கு ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை என்ற சீரியலில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக தான் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக பிரபலம் அடைந்த மதுமிதா நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த நிலையில் ஒரே சீரியலில் டீச்சரும் மாணவனும் ஆக நடித்த ஜோடி இப்போது நிஜ வாழ்க்கையில் கணவன் மனைவியாக மாறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
அதே நேரத்தில் கனா காணும் காலங்கள் சீரியலில் பாதியிலேயே சங்கீதா வெளியேறி இருந்தார், அதற்கு காரணம் கூட இதுதானா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனாலும் சங்கீதா மற்றும் அரவிந்த் ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தும் வருகிறார்கள்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications