VIP படம் பண்ண மாட்டேன்னு சொன்னேன்.. ஆனால் தனுஷ் இப்படி பண்ணுவார்னு நினைக்கல- சரண்யா ஓப்பன் அப்
சென்னை: நடிகை சரண்யா பொன்வண்ணன் சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் வேலையில்லா பட்டதாரி படத்தில் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். ஆனால் தனுஷ் கேட்காமல் என்னை சமாதானப்படுத்தி நடிக்க வைத்து விட்டார் ஆனால் டப்பிங்கில் நான் நடித்திருந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டேன் என்று பேசி இருக்கிறார்.
முன்னணி நடிகையாக நடித்த பல நடிகைகள் சில வருடங்கள் கழித்து அம்மாவாகவும் அக்காவாகவும் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் பல முன்னணி நடிகர்களின் அம்மாவாக நடிகை சரண்யா பொன்வண்ணன் நடித்து வருகிறார். அதிலும் நடிகர் தனுஷ், உதயநிதி ஸ்டாலின், ஜீவா போன்றவர்களுக்கு சரண்யா பொன்வண்ணன் அம்மாவாக நடித்த பிறகு இவருக்கு கதாநாயகிகளை போலவே அதிகமான வரவேற்பு கிடைக்க தொடங்கி விட்டது.

இப்போது ரசிகர்களுக்கு கலகலப்பான ஒரு அம்மா கேரக்டர் வேண்டும் என்றால் உடனே கூப்பிடுங்க சரண்யா பொன்வண்ணனை என்று எல்லா இயக்குனர்களும் இவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு அம்மா கேரக்டரில் பலருடைய மனதை கவர்ந்திருக்கிறார். அதிலும் பல பெண்கள் கூட இப்படி ஒரு மாமியார் எங்களுக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிற அளவிற்கு சரண்யா பொன்வண்ணன் ஜாலியான மாமியாராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நாள் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்று தனுஷிடம் சொன்னேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு காரணம் அந்த படத்தில் எனக்கு நடிப்பதற்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை என்று எனக்கு கதை சொல்லும் போது தோன்றியது. அதிலும் பாதியிலே நான் இறந்து போய் விடுவேன் என்று சொன்னாங்க.
அதனால் இந்த படத்தில் நான் நடிச்சா பெருசா தாக்கம் இருக்காது என்று நினைத்திருந்தேன். ஆனால் தனுஷ் தான் விடாமல் என்னை கன்வின்ஸ் செய்தார். உங்களுக்காக நான் ஒரு பாட்டெல்லாம் வச்சிருக்கேன் மேடம் என்று சொல்லி இருந்தார். நான் பாட்டு வச்சிருந்தா சரிதான் எனக்கு அங்க எந்த வேலையுமே இல்லையே என்று சொன்னேன். ஆனாலும் அவர் விடமாட்டேன் என்றார். பிறகு பெரிய அளவில் இன்ட்ரஸ்ட் இல்லாமல் தான் அந்த படத்தில் நடித்தேன்.
படத்தில் நடிக்கும் போது கூட எனக்கு பெரிய அளவில் கஷ்டமே இல்லாமல் தான் நடித்து முடித்தேன். ஆனால் டப்பிங் பேசும் போது தான் நான் நடித்த காட்சிகளை பார்த்து அசந்து போனேன். இப்படியெல்லாம் நாம நடிச்சோமா என்று எனக்கே சந்தேகம் வந்தது. அதற்கு பிறகு அந்த திரைப்படம் வெளியே வந்ததும் என்னுடைய கேரக்டருக்கு பெரிய அளவில் மக்கள் மத்தியில் தாக்கம் இருப்பதை பார்த்து நான் அசந்து போய் விட்டேன் என்று அந்த பேட்டியில் சரண்யா பொன்வண்ணன் பேசியிருக்கிறார்.
அதுபோல வேலையில்லா பட்டதாரி திரைப்படம் வெளியான பிறகு பல இளைஞர்கள் தங்களுடைய அம்மா பாசத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் காட்டி கொண்டிருப்பதை காண முடிகிறது. அதிலும் அம்மா இறந்து போய்விட்டால் அவர்களுடைய நினைவு வரும் போதெல்லாம் பலருக்கும் இந்த பாடல் தான் ஆறுதலாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். அதுபோல பலர் இந்த பாடல்களை கேட்கும் போது தங்களை மீறி கண்ணீர் வருவதாகவும் உணர்வு பூர்வமாக பேசி இருக்கிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications