தாய்ப்பால் கொடுத்தால் அழகு கூடும்.. “இவ்வளவு” நன்மைகள் இருக்கிறது.. சரண்யா பொன்வண்ணன் பளிச்
சென்னை: தாய்ப்பால் வாரத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சரண்யா பொன்வண்ணன் தாய்ப்பால் கொடுப்பதால் அழகு கூடும், கேன்சர் வராது, குழந்தைகளின் அறிவு வளரும் என்று பல விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
நடிகை சரண்யா பொன்வண்ணன் சமீபத்தில் அதிகமான பல நடிகர்களுக்கும் அம்மா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு வெகுளியான அம்மாவாகவும், மிரட்டலான அம்மாவாகவும் இவரை தவிர வேற யாராலும் நடிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு தன்னுடைய நடிப்பை தத்ரூபமாக காட்டிக் கொண்டிருக்கிறார்.

சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் நான் இரண்டு குழந்தைகளின் அம்மா என்று சொல்லியபடியே இன்று நடைபெற்ற தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல விஷயங்களை பேசி இருக்கிறார். அதில் உலக தாய்ப்பால் வாரத்தை கொண்டாடும் நிகழ்வுக்காக என்னை அழைத்தது பெருமையாக இருக்கிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி தாய்மார்கள் அனைவருக்கும் எடுத்து சொல்வதற்கு என்னை ஒரு கருவியாக பயன்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் வழக்கம் இடையில் குறைந்திருந்தாலும் தற்போது அதிகரித்துள்ளது. தாய்மார்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமான தாய்ப்பால் உருவாகின்றது. தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறையும் என்பதில் எந்தவித உண்மையும் கிடையாது. தாய்ப்பால் கொடுப்பதால் தான் குழந்தை மற்றும் தாயின் அழகு கூடும்.
பெரும்பாலான பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படும் முக்கிய காரணமே தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதுதான். என்னுடைய இரண்டு மகள்களுக்கும் நான் தாய்ப்பால் கொடுத்து வளர்த்தேன். அவர்கள் தற்போது ஆரோக்கியமான மனநிலையோடு நல்ல விதத்திலும் காணப்படுவதோடு டாக்டராகவும் இருக்கிறார்கள் என்று சரண்யா பொன்வண்ணன் நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.
பொதுவாக பல பெண்கள் இப்படி ஒரு மாமியார் நமக்கு கிடைக்க வேண்டும் என்று சரண்யா பொன்வண்ணன் பார்த்து கூறிக் கொண்டிருந்தாலும் இவர் அந்த அளவிற்கு வயசு ஆகாமல் இருக்கும் நிலையிலே ஒரு அம்மாவாக நடிக்க வந்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் மணிரத்தினம் இயக்கத்தில் ரிலீஸ் ஆன நாயகன் திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
முதல் திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த நேரத்திலேயே அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. அதனால் குறுகிய காலத்திற்குள் இவரும் பெரிய அளவில் பிரபலம் அடைய தொடங்கினார். பாரதிராஜா இயக்கத்தில் கருத்தம்மா பசும்பொன் ஆகிய திரைப்படங்களில் நடித்த போது அப்படத்தில் உதவி இயக்குனராக இருந்த நடிகர் மற்றும் இயக்குனர் பொன்வண்ணனுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டது.
காதலித்து சில வருடங்கள் கழித்து 1995 ஆம் ஆண்டு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அதிகமாக திரைப்படங்களில் நடிக்காமல் விட்டு விலகிய சரண்யா 2000ஆம் ஆண்டில் மீண்டும் நடிப்பை தொடங்கினார். அந்த நேரத்தில் அவருக்கு அதிகமான அம்மா வேடங்கள் கிடைத்து வந்தது. அப்படித்தான் இவர் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்று தந்தது.
அதுபோல ராம் திரைப்படத்தில் நடிகர் ஜீவாவின் அம்மாவாக இவர் நடித்ததையும் மறக்க முடியாது, அது போல ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் அம்மாவாக நடித்ததையும் அது மட்டும் அல்லாமல் இவர் நடித்த பல திரைப்படங்களின் பெயர்களை சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications