பாரதிராஜாவா இப்படி செய்தது? 21 வயசுல சரிதாவுக்கு அந்த கேரக்டர்.. கோபத்தை இப்படியும் கொடுக்கலாமா..!?
சென்னை: அதிகமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த சரிதா தற்போது மாவீரன் திரைப்படத்தில் பல வருடங்கள் கழித்து அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறார்.
பாலச்சந்தர் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார்.
பல வெற்றி படங்களில் நடித்த சரிதா தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்தும் நடிகர் பாரதிராஜா இயக்கத்தில் தான் நடித்த போது கிடைத்த அனுபவம் குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

நடிகை சரிதா 1978 ஆம் ஆண்டு தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி வெற்றிகரமாக பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்திருந்தார். இந்த நிலையில் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு தற்போது மாவீரன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
நடிகை சரிதா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் அச்சமில்லை அச்சமில்லை, வண்டி சக்கரம் போன்ற பல திரைப்படங்கள் இவருடைய நடிப்பின் அச்சாணியாக இருந்தது. அது மட்டும் அல்லாமல் தப்புத்தாளங்கள், நெற்றிக்கண், அக்கினி சாட்சி, புதுக்கவிதை போன்ற பல திரைப்படங்களும் இவருடைய வேற லெவல் நடிப்பை வெளிகாட்டியது. அதனாலையே இந்த திரைப்படங்களில் இவருக்கு சிறந்த நடிகை என்ற பட்டங்களும் கிடைத்தது.
நடிகர் பாக்யராஜ், ரஜினி, மோகன், சத்யராஜ் போன்ற நடிகர்கள் முன்னணி நடிகர்களாக இருக்கும்போது அந்த காலகட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக நடிகை சரிதாவும் வலம் வந்து கொண்டிருந்தார். ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் பல நடிகைகளுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருந்திருக்கிறார். குறிப்பாக நதியா, நக்மா போன்றவர்களுக்கு சில திரைப்படங்களில் இவர் டப்பிங் பேசி இருக்கிறார்.

இந்த நிலையில் தான் இவருக்கு பாரதிராஜாவின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வேதம் புதிது என்ற திரைப்படத்தில் காந்திமதியின் செகண்ட் வர்ஷன் ஆக இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த கேரக்டரில் இவர் காதுகளில் நீண்ட கம்மல் போட்டும் வெற்றிலை பாக்கு எல்லாம் போட்டுக் கொண்டும் வயதான தோற்றத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் நடிக்கும் போது சரிதாவுக்கு வயது 21 வயது தான்.
அதனால் இந்த மாதிரி ஒரு கேரக்டரா என்று முதலில் சரிதா நடிக்க தயங்கினாராம். பிறகு பாரதிராஜா படம் அதனால் அதை மிஸ் பண்ண வேண்டாம் என்று தான் இவர் சரி என்று சொல்லி இருக்கிறார். அதனால் சரிதாவின் வீட்டிற்க்கே வந்து லுக் டெஸ்ட் எடுத்தார்களாம். இப்போது அந்த படத்தில் இருக்கும் லுக் அவர்கள் எடுக்கும் போது கிடையாதாம். வேறொரு லுக்கில் தான் எடுத்து இருக்கிறார்கள். ஆனால் சரிதா ஓகே ஆன பிறகு இன்னொரு நடிகை யார் என்று கேட்டாராம்.

இப்போது அவர்கள் 15 வயது மதிக்கத்தக்க ஒரு நடிகையைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இவரும் சரி என்று அப்போது விட்டு விட்டாராம். பிறகு சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து இருக்கிறார். அங்க வந்த பிறகுதான் இவருக்கு பெரிய ஷாக் கிடைத்திருந்தது. ஏனென்றால் இவருக்கு மருமகளாக நடித்தது அமலா தானாம். 15 வயதுன்னு சொன்னாங்க ஆனா இவருக்கா நாம மாமியார் என்று அதிர்ச்சியில் இருந்தாராம்.
பிறகு சரிதாவின் லுக்கையும் மொத்தமாக மாட்டி விட்டார்களாம். ஆனால் சரிதாவை பொருத்தவரைக்கும் ஒரு படத்திற்கு சரி என்று சொல்லிவிட்டு நடிப்பதற்கு சம்மதித்து விட்டால் அங்கு என்ன நடந்தாலும் எதுவும் சொல்லாமல் தன்னுடைய வேலையை செய்து முடிப்பது தான் இவருடைய பாலிசியாம். அதனால் இந்த இடத்தில் அவர் அமைதியாகவே சொன்னபடி படத்தை நடித்து முடித்து இருக்கிறார்.
ஆனாலும் பாரதிராஜா இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லையாம். இருந்தாலும் அவர் சொன்ன மாதிரியே படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் படம் முழுக்க இவருக்கு அந்த கேரக்டர் மீது கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல் தான் நடித்திருந்தாராம். அந்த படம் முடிஞ்சு பிறகு அந்த படத்தின் தயாரிப்பாளர் தனக்கு கொடுத்த செக்கை அப்படியே அவரிடம் திருப்பி கொடுத்து விட்டாராம். ஆனால் பாரதிராஜா மீது எனக்கு எப்போதும் ஒரு தனி மரியாதை இருக்கிறது என்றும் சரிதா பேட்டியில் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications