நடிகர் ஜெய்சங்கருடன் நடிக்காதது ஏன்? பல வருடம் கழித்து உண்மையை உடைத்த நடிகை சரோஜா தேவி
சென்னை: பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தன்னுடைய திரைப்பட வாழ்க்கை குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இத்தனை வருடங்களாக தன்னுடைய திரைப்பயணம் நீண்டு கொண்டிருக்கும் நிலையில் தன்னோடு நடித்த நடிகர்கள் பற்றி அதில் பேசி இருக்கிறார்.
சரோஜாதேவி ஒரு முறை கூட நடிகர் ஜெய்சங்கர் உடன் ஜோடியாக நடிக்கவில்லை அது குறித்து பதிலையும் கூறி இருக்கிறார்.
தமிழ் ரசிகர்களால் கன்னடத்து பைங்கிளி என்றும் அபிநய சரஸ்வதி என்றும் பாசத்தோடு கொண்டாடப்படும் சரோஜாதேவி 70ஸ், 80ஸ் கிட்ஸ்களில் ஃபேவரட் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு ஒன்றும் எளிதாக கிடைக்கவில்லையாம்.

இப்போது இருப்பது போன்று அப்போது இணையதள வசதிகளும் போட்டோ சூட் வசதிகளும், சிபாரிசுகளும் கிடையாது அந்த காலகட்டத்தில் கன்னட திரை உலகின் ஜாம்பவான் ஹென்னப்ப பாகவதரின் கண்டுபிடிப்பு தான் சரோஜாதேவி. ஒரு இசை நிகழ்ச்சி ஒன்றில் அவரது குரலை கேட்டு பாடகியாக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.
அவருடைய தோற்றத்தை பார்த்து பிறகு ஹீரோயினாக மாற்றி இருக்கிறார். சிம்ரன் நடித்த ஜோடி திரைப்படத்தில் திரிஷா தலை காட்டியது போல, அப்போது முன்னணி கதாநாயகி ஆக இருந்த வைஜெயந்தி மாலாவுக்கு தோழியாக பார்த்திபன் கனவு என்னும் திரைப்படத்தில் சரோஜாதேவி நடித்திருக்கிறார்.
அது மட்டும் இல்லையாம் தொடக்க காலத்தில் பி.ஆர். பந்தலு இயக்கிய தங்கமலை ரகசியம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். தமிழில் அவருக்கு முதல் ஹீரோயின் வாய்ப்பு அந்த அளவிற்கு எளிமையாக கிடைக்கவில்லையாம். தங்கமணி ரகசியம் படத்தில் 250 ரூபாய் சம்பளத்தில் ஆட வந்தவர் தான் பிறகு எம்ஜிஆருக்கு ஜோடியாக ஹீரோயின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேலே நடித்த சரோஜாதேவி, எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற நடிகர்களோடு ஜோடியாக நடித்திருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் புகழின் உச்சத்தில் இருந்த ஜெய்சங்கர் உடன் மட்டும் அவர் ஜோடியாக நடிக்கவில்லை. அது பலரும் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது. எதனால் சரோஜாதேவி ஜெய்சங்கர் உடன் மட்டும் ஜோடியாக நடிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வந்திருந்தனர். அதற்கு சமீபத்தில் பேட்டி ஒன்றில் சரோஜாதேவி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ஜெய்சங்கர் உடன் நடிப்பதற்காக எனக்கு பல வாய்ப்புகள் வந்தது. ஆனால் அந்த நேரத்தில் எனக்கு கால் சீட் கொடுக்க முடியாமல் பிரச்சனை இருந்தது. ஒரே நேரத்தில் நான் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அதனால் ஜெய்சங்கர் திரைப்படங்கள் வாய்ப்பு வரும்போது கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு நான் பிஸியாக இருந்ததால்தான் நடிக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.
நடிகர் ஜெய்சங்கர் நடித்த திரைப்படத்தில் நான் ஒரே ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால் அது அவருக்கு ஜோடியாக இல்லை. அவரோடு நான் நடிக்காததற்கு வேறு எந்த காரணமும் இல்லை. நடிப்பதற்காக நானும் முயற்சி செய்தேன். ஆனால் எனக்கு கால் சீட் பிரச்சனை மற்றும் அடுத்தடுத்த படங்கள் காரணமாக அந்த ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது என்று கூறியிருக்கிறார்.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications