நடிகர் எம்ஜிஆர் எப்படிப்பட்டவர் தெரியுமா? உண்மையை உடைத்து மனம் திறந்த நடிகை சரோஜாதேவி
சென்னை: எவர்கிரீன் நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை சரோஜாதேவி பல வருடங்களுக்குப் பிறகு செய்தி சேனல்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்தும் தன்னுடன் நடித்த நடிகர்கள் பற்றியும் அதில் பல தகவல்களை பேசி இருக்கிறார்.
இந்த வகையில் நடிகர் எம் ஜி ஆர் உடன் ஏற்பட்ட முதல் சந்திப்பு, அவருடைய உண்மையான குணங்களைப் பற்றியும் அதில் சரோஜாதேவி பேசி இருக்கிறார்.

நடிகை சரோஜாதேவி ஜனவரி 7ஆம் தேதி 1938ஆம் தேதி பெங்களூரில் பிறந்திருக்கிறார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருந்தாலும் இவர் கன்னடத்தில் அபிநய சரஸ்வதி என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் அறிமுகம் ஆகி இருக்கிறார். அந்த திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் கன்னடத்து பைங்கிளி என்று அடைமொழியோடு பலரால் இப்பவும் அழைக்கப்பட்டு வருகிறார்.
ஆரம்பத்தில் சரோஜாதேவிக்கு நடிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் தான் இருந்ததாம். அவருடைய அம்மா தான் கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தாராம். அதற்கு பிறகு தான் கன்னடத்தில் முதன் முதலில் இவர் நடித்திருக்கிறார்.பிறகு தமிழ் உள்ளிட்ட எல்லா படங்களிலும் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அப்போது எம்ஜிஆர், சிவாஜி உடன் நடிக்கவே இவருக்கு நேரம் சரியாக இருந்ததாம். ஒரு ஆண்டுக்கு குறைந்தது 30 படங்களுக்கு இவர் நடித்திருக்கிறார்.
அந்த நேரத்தில் தான் முதன் முதலில் ரேவதி ஸ்டுடியோவில் கச்சதேவயானி சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது அங்கே ஆயிரம் சூரியன்கள் பிரகாசமாக இருப்பது போல ஒரு உருவம் வந்து இருக்கிறார். அவரை பார்த்த எல்லோரும் எழுந்து அவருக்கு வணக்கமும் செலுத்தி இருக்கிறார்கள். அவர் யார் என்று அப்போது சரோஜாதேவிக்கு தெரியாதாம். ஆனாலும் இவரும் எழுந்து நின்று இருக்கிறார். எல்லோரும் அவருடன் பேசிய பின் பெங்களூரில் இருந்து இந்த பெண் வந்து இருக்கு என்று இவரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள்.
அவரும் உடனே நல்லா இருக்கியா? என்ன கன்னடத்தில் கேட்டு விட்டு சென்று விட்டாராம்.அவர் போன பிறகு தான் அவர்தான் எம்ஜிஆர் என்று சரோஜாதேவிக்கு தெரிய வந்ததாம். அதற்குப் பிறகு போய், திருடாதே படத்தில் அந்தப் பெண்ணின் முயற்சி செய்யுங்கள் என்று எம்ஜிஆர் கூறினாராம். அப்படித்தான் அவரோடு ஜோடி சேர வாய்ப்பு கிடைத்தது என்று கூறியிருக்கிறார்.
ஒருமுறை எம்ஜிஆர் ரோடு ஜோடியாக டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும்போது இவருடைய காலில் கண்ணாடி குத்தி விட்டதாம். இவரும் சொல்லாமல் ரத்தத்தோடு ஆடி இருக்கிறார். ஆனால் எம்ஜிஆர் இவருடைய காலை பார்த்து அவர் மேலே இவருடைய காலை வைத்து காயத்தை சுத்தம் செய்தாராம். அதுபோல நாடோடி மன்னன் படத்திலும் இவர் நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து எல்லா இடங்களிலும் எம்ஜிஆர் இவர்களை அழைத்து சென்றாராம்.

அதற்குப் பிறகு சரோஜாதேவிக்கு நிறைய படங்கள் வந்து இவர் பிஸியாகி இருக்கிறார். அப்போது எம்ஜிஆர் ஏழு மணிக்கு எல்லாம் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விடுவாராம். ஆனால் சரோஜா தேவியால் நேரத்திற்கு வர முடியாமல் இருந்திருக்கிறது. ஆனாலும் அதை எம்ஜிஆர் பொறுத்துக் கொள்வாராம்.
எம்ஜிஆர் உடன் அன்பே வா, எங்க வீட்டு பிள்ளை, படகோட்டி போன்ற படங்கள் இப்போதும் மறக்க முடியாது. அவரோடு 26 படங்கள் நடித்திருக்கிறேன். எம்ஜிஆர் என் அன்பு தேவன், நான் யார் என்பது பற்றி தெரிய வைத்ததும் அவர்தான். எம்ஜிஆர் பற்றி நிறைய நினைவுகள் இருக்கு, எம்ஜிஆர் ஒரு மாதிரி என்றால் சிவாஜி வேறு மாதிரி சிவாஜி ராஜா டைப். அவர் நடை உடை பேச்சு எல்லாமே வேற மாதிரி இருக்கும் என்று சரோஜாதேவி கூறியிருக்கிறார்.
அப்போதெல்லாம் சூட்டிங் ஸ்பாட்டில் முதலில் சரோஜாதேவிக்கு சூட்டிங் வைத்து அவரை அனுப்பி வைத்து விடுங்கள். அவருக்கு வேறு வேலை இருக்கும் என்று எம்ஜிஆர் கூறிவிடுவாராம். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் அப்படியெல்லாம் கூறுவார்களா? என்று எனக்கு தெரியாது. ஆனால் அந்த அளவிற்கு எனக்கு பெரிய நடிகர்கள் கூட சப்போர்ட் செய்ததால் தான் என்னால் அத்தனை படங்கள் நடிக்க முடிந்தது என்று சரோஜாதேவி கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோவிற்கு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
-
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications