எனக்குன்னு யாரும் இல்லை! அனாதை ஆகிட்டேன்! சீதாவின் கலங்க வைத்த பதிவு! இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது
சென்னை: நடிகை சீதாவின் அம்மா சில தினங்களுக்கு முன்பு உடல் நல பிரச்சனையால் காலமானார். அம்மாவின் இறப்பிற்கு பிறகு சீதா எமோஷனலாக ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
1985 ஆம் ஆண்டில் நடிக்க துவங்கிய சீதா அப்போது முதல் இப்போது வரைக்கும் சினிமாவில் கதாநாயகியாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் 1985 இல் இருந்து 1991 ஆம் ஆண்டு வரை சீதா படுங்க பயங்கர பிசியாக நடித்துக் கொண்டிருந்தார் ஆனால் அதற்கு பிறகு நடிப்பிற்கு சில வருடங்கள் பிரேக் விட்டிருந்தார். அந்த நேரத்தில் பெரிய அளவில் அவர் சினிமாவில் நடிக்கவில்லை.

அதற்குப் பிறகு 2002 ஆம் ஆண்டு வெளியான மாறன் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இப்போது சினிமா, சீரியல், வெப் சீரிஸ் என்று பலவற்றிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். தன்னுடைய மொட்டை மாடி வீடியோஸ் மற்றும் தன்னுடைய கிராமத்து பண்ணை வீடு, தோட்டம் போன்றவற்றை அடிக்கடி வீடியோஸ் எடுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
அதோடு தன்னுடைய இயற்கை விவசாயம், கால்நடைகள் பராமரிப்பு போன்றவற்றையும் அந்த வீடியோக்களில் ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார். அதுபோல ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கமெண்ட்களில் பதிலும் கொடுத்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் சீதாவின் அம்மா கடந்த சில தினங்களுக்கு முன்பு வயது மூப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்.
அது குறித்து தன்னுடைய வருத்தத்தை அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்து இருந்தார். அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வந்தனர். தன்னுடைய அம்மாவோடு விருகம்பாக்கத்தில் சீதா தனியாக வசித்து வந்த நிலையில் அவருடைய அம்மாவின் இறப்பிற்கு பிறகு இன்று எங்களது பாசமிகு தாயார் சந்திரா மோகன் காலமானார் என்று கண்ணீரோடு தெரிவித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அம்மாவின் கைவிரல்களை பிடித்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில், “நான் இன்று அம்மா இல்லாத அனாதை போல் உணர்கிறேன்” என்று எமோஷனலாக போஸ்ட் போட்டிருக்கிறார். இந்த கஷ்டமான. சூழ்நிலையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று சீதாவிற்கு பலர் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

அதுபோல சீதா சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் போது நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வீட்டை எதிர்த்து திருமணம் செய்திருந்தாலும் அவர்களுடைய திருமண வாழ்க்கை பல வருடங்கள் நிலைக்கவில்லை. சீதா மற்றும் பார்த்திபன் தம்பதிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர்.
பார்த்திபனோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். சமீபத்தில் சில தினங்களுக்கு முன்புதான் சீதாவின் இரண்டாவது மகள் அபிநயா தன்னுடைய அப்பா பார்த்திபனோடு எடுத்த புகைப்படத்தையும் அம்மா சீதாவோடு எடுத்த புகைப்படத்தையும் ஒன்று சேர்த்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார்.

அப்போது சீதா இப்போது போல எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும், மீண்டும் பார்த்திபனோடு சேர்ந்து வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்று கூட பலர் கருத்து தெரிவித்திருந்தனர். சீதா இந்த அளவிற்கு சினிமாவில் ஜெயிப்பதற்கு காரணம் அவருடைய அம்மா தான்.
ஆரம்பத்தில் சீதா ஆண்பாவம் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தபோது அவர் நடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் பிறகு தொடர்ந்து இயக்குனர் கேட்டதால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார். அப்போது சீதாவின் குடும்பத்தில் எல்லோரும் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் சீதாவின் அம்மா தான் தைரியமாக நடி என்று அவருக்கு சப்போர்ட் கொடுத்திருக்கிறார்.
அதுபோல சீதா சூட்டிங் ஸ்பாட்டுக்கு போகும்போது அவருடைய அம்மா தான் அவருக்கு துணையாக வருவாராம். தன்னுடைய அம்மாவோடு எடுக்கும் புகைப்படங்களையும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் சீதா அதிகமாக பகிர்ந்து இருக்கிறார். எந்த வயதாக இருந்தாலும் சரி பெற்றோரை இழப்பது எல்லோருக்கும் வேதனை தான். இந்த வேதனையிலிருந்து சீக்கிரமாக சீதா மீண்டு வர வேண்டும் என்பது பலருடைய கமெண்டாக இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications