நான் கர்ப்பமாக இருக்கிறேனா? பிரபல சன் டிவி சீரியலில் இருந்து விலகும் கதாநாயகி வெளியிட்ட பதிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து நடிகை ஷபானா தான் விலகப்போவதாக பதிவு வெளியிட்டிருந்தார். அதனால் ரசிகர்கள் அவரிடம் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? அதனால் தான் சீரியலில் இருந்து விலகுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
அதற்கு ஷபானா பதில் அளித்து இருக்கும் நிலையில் இது இணையத்தில் பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது. அதே நேரத்தில் ஷபானா என்ன சொன்னார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் சீரியல் நடிகை ஷபானா தமிழில் "செம்பருத்தி" சீரியல் மூலமாகத்தான் அறிமுகமாகினார். ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இந்த சீரியலில் பல வருடங்களான ஷபானா கதாநாயகியாக நடித்திருந்தார். ஆரம்பத்தில் இந்த சீரியலில் நடிகர் கார்த்திக் ராஜ் கதாநாயகனாக நடித்து வந்தார்.
ஆனால் திடீரென்று அவர் அந்த சீரியலில் இருந்து விலகிய பிறகு சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் அதிர்ச்சி கிடைத்தது. ஆனாலும் அந்த சீரியலில் கதாநாயகியாக தொடர்ந்து ஷபானா நடித்து வந்தார். இப்படியான நிலையில் அந்த சீரியல் முடிவடைந்த பிறகு ஷபானா சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்ற சீரியல் மூலமாக என்ட்ரி கொடுத்தார். ஆனால் 300 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலில் இருந்து தான் விலகப் போவதாக ஷபானா நேற்று போஸ்ட் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் ஷபானா கர்ப்பமாக இருக்கிறாரா? அதனால்தான் சீரியலில் இருந்து விலகுகிறாரா? என்று அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வந்திருக்கிறார்கள். ஷபானா சீரியல் நடிகரான ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரியன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னைப் பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு ஷபானா பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று எல்லோரும் எனக்கு வாழ்த்துக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் அப்படியெல்லாம் இல்லை உண்மையில் அப்படி நடந்தால் சந்தோஷம்தான்.

ஆனால் நான் இப்போது சீரியலில் இருந்து விலகி இருப்பது என்னுடைய ஃபியூச்சர் வாழ்க்கைக்காக எடுத்த முடிவுக்காக தான் வேறொன்றும் இலலை. சீக்கிரமாக இன்னொரு பெரிய ப்ராஜெக்டில் உங்களை சந்திக்கிறேன் என்று ஷபானா விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications