மலையாள சினிமா அட்ஜஸ்ட்மென்ட்.. அங்கு நடப்பது இதுதான்! நைட் கதவு தட்டுவாங்க! சாந்தி வில்லியம்ஸ் பகீர்
சென்னை: மலையாள சினிமாவில் அதிகமான பாலியல் தொந்தரவுகள் மற்றும் அட்ஜஸ்மெண்ட் பிரச்சனை இருப்பதாகவும் அட்ஜஸ்ட்மென்ட் இருந்தால் தான் அங்கு சினிமாவில் நடிக்க முடியும் என்ற நிலை அதிகமாக இருப்பதாக சமீபத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து மலையாள சினிமாவில் நடக்கும் அவலங்கள் குறித்து பல நடிகைகள் பேசி வருகிறார்கள். அதில் நடிகை சாந்தி வில்லியம்ஸ் மலையாள சினிமா உலகை பற்றி பல அதிர்ச்சிகரமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அட்ஜஸ்மென்ட் பிரச்சனை என்பது பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் சினிமா உலகில் மட்டுமில்லாமல் எல்லா துறைகளிலும் இந்த பிரச்சனை பூதாகரமாக உருமாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் தைரியமான ஒரு சில நடிகைகள் மட்டும் தங்களுக்கு நடக்கும் அவலங்கள் குறித்து பேசி வருகிறார்கள்.

அதே நேரத்தில் ஒரு சிலர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு தங்களை பிரபலங்கள் அழைத்ததாக போய் புகார்களையும் சொல்லி வருகிறார்கள். ஆனால் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் சம்பவம் நடந்த உடனே அதைப் பற்றி வெளிப்படையாக பேசாமல் சில வருடங்கள் கழித்து அதைப் பற்றி பேசுவதால் தப்பு செய்தவர்கள் அடுத்தடுத்து துணிந்து அதுபோன்ற தப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாள சினிமா உலகில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து பல நடிகைகள் தங்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைண நடந்ததாக வெளிப்படையாக பேசி வருகிறார்கள். இந்த நிலையில் மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சாந்தி வில்லியம்ஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் மலையாள சினிமாவை பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில் எனக்கு மலையாள இண்டஸ்ட்ரியை பற்றி பேசவே விருப்பம் இல்லை. அங்கு நிறைய பாலிடிக்ஸ் இருக்கு. நீ பெரியவனா நாம் பெரியவனா என சில பாலிடிக்ஸ் அங்கு இருக்கு. அதுபோல அங்கு பெண்கள் சேஃபா போக முடியாது. 18 வயசு பொண்ணாக இருந்தாலும் சரி, 90 வயசு கிழவியாக இருந்தாலும் சரி ராத்திரி வந்து கதவை தட்டுறவங்க அங்க நிறைய இருக்காங்க. அதுதான் எனக்கு சுத்தமா பிடிக்கல.
நான் தமிழ் சினிமாவில் இத்தனை வருஷம் இருக்கிறேன் ஒருநாள் கூட இங்கு யாரும் அப்படி நடந்துக்கல. அதற்காக தமிழ் மற்றும் ஆந்திரா சினிமா உலகை நான் கையெடுத்து கும்பிடுகிறேன். இங்கு உள்ளவர்கள் வயசை புரிஞ்சுக்கிறாங்க. அனுபவித்த மதிக்கிறாங்க. ஆனாலும் அதையும் மீறி சில இடங்களில் தப்பு நடக்குதுன்னா அதை நாம சொல்ல முடியாது. அது அவங்க அவங்க விருப்பத்தை பொறுத்து இருக்கு.
ஒரு பொண்ணு கிராமப்புறத்தில் இருந்து தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் பல கஷ்டங்களையும் துன்பங்களையும் தாண்டி சினிமா உலகத்தில் வருகிறார்கள். ஆனால் அதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் சிலர் தவறாக அவர்களை அட்ஜஸ்மெண்டுக்கு கூப்பிடுறாங்க. அதுபோல சிலர் அட்ஜஸ்மெண்டுக்கு ஒருதங்க கூப்பிடுறாங்கன்னா அதை அந்த இடத்திலேயே பேசி முடிச்சு இருக்க வேண்டும்.

அதை பற்றி சில வருடங்கள் கழித்து பேசுவதால் ஒரு ப்ரோஜனமும் இல்ல. பல வருடம் கழித்து அந்த ஆர்ட்டிஸ்ட் இந்த இண்டஸ்ட்ரியில் இல்லாமல் போய்விடுகிறார்கள். அதுபோல ஒரு சிலர் பல வருடங்கள் கழித்து அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை பற்றி அவர்களுடைய பப்ளிசிட்டிக்காக கூட பேசுகிறார்கள். சில டைரைக்டர் சரியில்ல, அவர் எட்டி மிதிப்பாரு துப்புவாரு என்கிறார்கள். ஆனால் அவர் உண்மையில் அப்படி பண்ணுனாரான்னு தெரியுமா?
இப்பதான் கம்ப்யூட்டரில் போட்டு எல்லாத்தையும் மாத்துறாங்களே அது உண்மையா? பொய்யா? அதைப்பற்றி தெரியாமல் நாமும் எதுவும் பேசக்கூடாது. எனக்கு அட்ஜஸ்டமென்ட் பிரச்சனை இல்லை என்பதற்காக சினிமா உலகில் அப்படி பிரச்சனை இல்லை என்று என்னால் சொல்லவும் முடியாது. என்னை பற்றியும் என்னுடைய குடும்பத்தை பற்றியும் சினிமா உலகில் பலருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் எந்த பின்புலமும் இல்லாமல் வரும் ஒரு சில நடிகைகள் பல பிரச்சனைகளை அனுபவிக்க தான் செய்கிறார்கள், என்று அந்த பேட்டியில் சாந்தி வில்லியம்ஸ் பேசியிருக்கிறார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications