ராதிகா சூட்டிங் ஸ்பாட்டில் இப்படித்தான்! அவங்கள பற்றி பலருக்கு தெரியாது! சாந்தி வில்லியம்ஸ் உருக்கம்
சென்னை: நடிகை சாந்தி வில்லியம்ஸ் பேட்டி ஒன்றில் நடிகை ராதிகா குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். தன்னுடைய வாழ்க்கையில் ராதிகா தெய்வம் மாதிரி அவங்க மட்டும் இல்லன்னா என் வாழ்க்கை எப்படி மாறி இருக்கும் என்று எனக்கே தெரியாது என்று எமோஷனலாக பேசியிருக்கிறார். அதோடு சூட்டிங் ஸ்பாட்டில் ராதிகா எப்படி நடந்து கொள்வார் என்றும் சாந்தி வில்லியம்ஸ் பேசியிருக்கிறார்.
தற்போது சமூக வலைதளத்தில் சில நடிகைகளின் பேட்டிகள் பெரும் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மலையாள சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பல நடிகைகளும் வெளிப்படையாக பேசி வருகின்றனர். அந்த வகையில் நடிகை சாந்தி வில்லியம்ஸ் மலையாள நடிகையாக இருந்தாலும் தான் சின்ன வயதிலேயே மலையாளத்தை விட்டு தமிழில் நடிக்க வந்துவிட்ட காரணத்தை கண்கலங்க கூறியிருந்தார்.

அதாவது 16 வயதில் இருக்கும்போது மலையாள சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது சிலர் ரூமிற்கே வந்து கதவு தட்டியதால் எனக்கு அந்த சினிமா வாழ்க்கையை பிடிக்கவில்லை அதனாலேயே சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்தேன். அதற்குப் பிறகு தமிழில் வாய்ப்பு வந்ததும் தமிழ் சினிமாவில் இருக்கும் பாதுகாப்பால் நான் இங்கேயே நடிக்க தொடங்கி விட்டேன் என்று பேசி இருக்கிறார். அதோடு தான் ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸை திருமணம் செய்து கொண்டேன்.
ஆனால் அவருடைய மறைவிற்குப் பிறகு என்னுடைய வாழ்க்கையில் பெரும் கஷ்டம் இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு வாழ்க்கை கொடுத்தது நடிகை ராதிகா தான். ராதிகா எனக்கு கடவுள் போல என்று பேட்டி ஒன்றில் சாந்தி வில்லியம்ஸ் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் என்னுடைய கணவர் இறப்பிற்கு பிறகு நான் அடுத்து என்ன செய்வது என்று குழப்பத்தில் இருந்தேன். எனக்கு நடிப்பை தவிர வேறு எதுவும் தெரியாததால் நடிக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது ராதிகா எனக்கு போன் பண்ணி சீரியலில் நடிக்க கூப்பிட்டாங்க.

அவங்க மட்டும் அன்னைக்கு என்னை சீரியலில் கொண்டு வரவில்லை என்றால் நான் என்னவாக இருப்பேன் என்று எனக்கே தெரியாது. அதுபோல ராதிகாவோடு பல சீரியல்களில் நானும் நடித்திருக்கிறேன் சூட்டிங் ஸ்பாட்டில் ராதிகா இருந்தால் அந்த இடம் கலகலப்பாக இருக்கும். ஆனால் அவங்க நடிகையாக இருந்தாலும் அவர்களுக்கும் பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். சிலர் அவர்களுக்கு தொந்தரவுகள் கொடுக்கும்போது அவருடைய முகம் அப்படியே மாறி இருக்கும்.
சூட்டிங் ஸ்பாட்டிற்கு ராதிகா கார் வந்து விட்டால் அவர் காரில் இருந்து கீழே கால் எடுத்து வைக்கும் ஸ்பீடை பார்த்தே நாங்கள் அவர் கோபத்தில் இருக்கிறாரா? இல்லை நார்மலாக இருக்கிறாரா? ஜாலியாக இருக்கிறாரா? என்று புரிந்து கொள்வோம். அதுபோல ஒரு நாள் ராதிகாவிற்கு ஏதோ ஒரு பெரிய கஷ்டம் என்று நினைக்கிறேன், அவருக்கு சினிமா துறையில் இருந்து ஏதோ ஒரு பிரச்சனை வந்திருக்கிறது.
அந்த நேரத்தில் நான் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தேன். அப்போது நான் என்னுடைய காட்சிகளை நடித்துவிட்டு நின்று கொண்டிருந்த போது ராதிகா வந்து பின்பக்கமா என்னுடைய தோளில் சாய்ந்து கை வைத்தபடி நின்று கொண்டிருந்தார். எனக்கு அவர் ஏதோ ஒரு குழப்பத்தில் இருக்கிறார் என்று புரிந்தது. ராதிகா படப்படன்னு பேசுவாங்க ஆனா மனதிற்குள் எதுவும் வச்சிக்க மாட்டாங்க. அவங்களோட வேலை பாக்குறவங்களுக்கு ரொம்ப தைரியம் கொடுப்பாங்க. அவங்களால என்ன ஹெல்ப் பண்ண முடியுமோ அதை செய்வாங்க என்று அந்த பேட்டியில் சாந்தி வில்லியம்ஸ் பேசியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications