மம்மூட்டி, மோகன்லாலுக்குலாம் சாப்பாடு..100 கோடி வீடு போச்சு! கணவரால் பட்ட கஷ்டம்- சாந்தி வில்லியம்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாக வாழ்ந்து கெட்டவர்கள் என்று சிலர் சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அப்படி வாழ்ந்து கெட்டு மீண்டும் தன்னுடைய விடாமுயற்சியால் போராடி வெற்றி பெற்ற சாந்தி வில்லியம்ஸ் ஒரு தனியார் சேனலில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகங்கள் குறித்தும் அதில் தான் எப்படி வெற்றி பெற்றேன் என்பது குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.

அந்த வகையில் சாந்தி வில்லியம்ஸை பல சீரியல்களில் வில்லியாகவும், திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் ரசிகர்கள் பார்த்திருக்கலாம். ஆனால் அவர் திரையில் பார்ப்பது போன்று நிஜத்தில் இல்லாமல் நிஜத்தில் பல்வேறு போராட்டங்களை தாண்டி வந்திருக்கிறார். அது குறித்து சமீபத்தில் டூரிஸ்ட் டாக்கிங் youtube சேனலில் சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் நடிகர் சித்ராவோடு பேசி இருக்கிறார்.

Actress Shanthi Williams shares about her sad life story

அதில் என்னுடைய சொந்த ஊர் கேரளா தான். நான் வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான். எங்க அக்கா ஒரு சினிமா பைத்தியம் அவருக்காக நானும் வீட்டில் பொய் சொல்லிக் கொண்டு சினிமா பார்த்திருக்கிறேன். அந்த நேரத்தில் எனக்கு 12 வயசு, அப்போ டாக்குமென்டரி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து மலையாளத்தில் சில திரைப்படங்களில் ஹீரோயினியா நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதுபோல தெலுங்கு, தமிழில் கேரக்டர் ரோலில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தான் என்னுடைய கணவருக்கும் எனக்கும் அறிமுகம் ஆனது. முதல் முதலாக நான் அவரை பார்த்தபோது அவர் பரட்டை தலையோடு பழைய டிரஸ்ன்னு ரொம்ப சுமாரான தோற்றத்தில் தான் இருந்தார். அவரை பார்த்தாலே பைத்தியக்காரன் மாதிரி இருக்குன்னு நான் அவரை தப்பா நினைச்சுட்டேன்.

அதற்கு பிறகு அவருடைய பேச்சு நடவடிக்கைகளை பார்த்து அவர் பெரிய கேமரா மேன் என்று எனக்கு தெரிய வந்தது. அவர் டைரக்ட் செஞ்ச ஒரு படத்துல நான் நடிச்சேன். அந்த பழக்கத்துல அவர் எங்க வீட்டுக்கு அடிக்கடி வர தொடங்கினார். ஏற்கனவே வில்லியம்ஸ்க்கு ஒரு கல்யாணம் முடிந்து மனைவியை பிரிந்த துக்கத்தில் அவர் தற்கொலை முயற்சியும் செய்திருந்தார்.

அதற்குப் பிறகு அவருக்கு என்னை பிடித்திருக்கிறது அதனால் என்னுடைய அப்பாவிடம் அவர் பொண்ணு கேட்டு இருக்கிறார். அப்போது எனக்கு 20 வயது அவருக்கு 46 வயது இருவருக்குள் 26 வயசு வித்தியாசம் எனக்கு ஆரம்பத்தில் வில்லியம்ஸை கொஞ்சம் கூட பிடிக்காததால் நான் கல்யாணத்துக்கு முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்போ ஒரு நாள் என்னிடம் தனியாக பேச வேண்டும் என்று ஒரு கடற்கரைக்கு வர சொல்லி இருந்தார்.

நானும் என்னுடைய அம்மாவை கூட்டிக்கொண்டு விருப்பம் இல்லாமல் தான் அங்கே போனேன். அந்த நேரத்தில் அவர் தான் பட்ட கஷ்டங்கள் எல்லாவற்றையும் சொன்னார். அப்போ எனக்கு அவர் மீது ஒரு லேசான அனுதாபம் வர தொடங்கியது. ஆனாலும் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்போது அவர் தங்கி இருந்த ஹோட்டலில் மாடியில் நின்று நான் தற்கொலை பண்ணிக்கொள்ள போறேன் என்று மிரட்டினார்.

Actress Shanthi Williams shares about her sad life story

பிறகு போலீஸெல்லாம் வந்து பிரச்சனை ஆயிடுச்சு. அதற்கு பிறகு நான் திருமணத்திற்கு சம்மதம் சொன்னேன். கல்யாணம் ஆகி எனக்கு நாலு குழந்தைகள் பிறந்தது. அப்போ எங்க வீட்டில் இருந்து மலையாள நடிகர்கள் எல்லாருக்குமே சாப்பாடு போகும். மோகன்லால், மம்முட்டி, கோபி என்று எல்லா பிரபலங்களுக்கும் எங்கள் வீட்டில் இருந்து கேரியர் கேரியர் ஆக சாப்பாடு போயிருக்கிறது.

அந்த நேரத்தில் என்னுடைய கணவர் ஒளிபதிவு திறமையை பல முன்னணி நடிகர்கள் கூட பெருமையாக பேசுவாங்க. அந்த நேரத்தில் என்னுடைய கணவர் நல்லா சம்பாதித்து கொண்டிருந்தார். அப்போ ஆடம்பரமா வாழ்ந்து கொண்டிருந்தோம். அவர் ஒரு கார் பிரியர். விலை உயர்ந்த கார்களை வைத்திருந்தார். வாராவாரம் காரோட நிறத்தை மாத்திக்கிட்டே இருப்பாரு. வில்லியம்ஸ் கார் போகுதுன்னு பலரும் பெருமையா சொல்ற அளவுக்கு அவர் புது புது கார்களாக வாங்கி குவிச்சாரு.

காருக்கு செலவு பண்ணுவதற்காகவே நிறைய சொத்தை இழந்தோம். அதற்குப் பிறகுதான் 1992ல் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போச்சு. அப்போதான் எங்களுக்கு கஷ்ட காலம் ஆரம்பிச்சு. அந்த நேரத்தில் சினிமாக்கள் எடுத்தும் எங்களுக்கு நஷ்டமாகிவிட்டது. அதனால சென்னை கேகே நகர்ல இருந்த எங்க வீட்டை வித்துட்டு கணவர் குழந்தைகளோடு நடுத்தெருவில் நின்றேன். அந்த வீட்டோட மதிப்பு இப்போ 100 கோடிக்கும் அதிகமாய் இருக்கும்.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு தெரிஞ்ச அம்மா ஒருத்தங்க வீடு பிடித்துக் கொடுத்தாங்க. நாங்க எவ்வளவோ பெரிய வசதியா வாழ்ந்திருந்தாலும் கஷ்ட நிலைக்கு தள்ளப்பட்ட பிறகு ஒருத்தர் கூட சீண்டவே மாட்டாங்க. அது அனுபவத்துல நான் உணர்ந்தேன். என் புருஷன் நல்லா இருந்தப்போ எல்லாருக்கும் உதவி செய்தார். ஆனால் அவர் கஷ்டப்பட்ட பிறகு யாருமே கண்டுக்கல. அப்போ நடிகர் ரஜினி சாரும் என் கணவரும் ஆரம்ப காலத்துல ஒரே ரூம்ல தங்கி சினிமா வாய்ப்புக்காக முயற்சி பண்ணி இருக்காங்க அந்த நட்புல அவர் மட்டும் எங்க கஷ்டத்துக்கு உதவினார்.

என் கணவருடன் சிகிச்சைக்காக சிரமங்கள் எனக்கு ஒரு பக்கம் இருந்தது. அதுபோல நாலு குழந்தைகளையும் வளர்க்க வேண்டிய பொறுப்பு இன்னொரு பக்கம் இருந்தது. எனக்கும் சினிமாவை தவிர வேறு எந்த வேலையும் தெரியாது. அதனால மீண்டும் நடிக்க வேண்டும் என்று வந்தேன். அப்போ விஜய் நடித்த உதயா படத்தில் மூலமாத்தான் ரீ என்ட்ரி கிடைத்தது. அதற்குப் பிறகு ஜோடி, பார்த்திபன் கனவு, அந்நியன் போன்ற பல படங்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருந்தேன்.

என்னுடைய கணவருக்கு லட்ச லட்சமாக செலவு செஞ்சோம் ஆனாலும் அவரை காப்பாற்ற முடியல. என்னுடைய கணவர் உடன் எனக்கு அவர் இறப்பதற்கு சிவ வருடங்களுக்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டு நாங்கள் ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தோம். ஒருமுறை என்னுடைய கணவர் தப்பான ஒரு செயலை செய்தார் அதை நான் கையோடு பிடித்துக் கொண்டேன்.

Actress Shanthi Williams shares about her sad life story

அப்போ எங்க அப்பா போட்டோவை எடுத்து அதில் சத்தியம் செய்து இனி என்னை நீங்க தொடக்கூடாது.. நீங்க எனக்கு வெளியில மட்டும் தான் புருஷன். வீட்டுக்குள்ள கிடையாது என் பிள்ளைகளுக்காக நான் இந்த வீட்டில் தான் இருப்பேன். இங்கிருந்து போக மாட்டேன் ஊருக்கு உங்களுக்கு பொண்டாட்டியா இருக்கிறேன் என்று சொன்னேன். அதுப்படித்தான் நான் வாழ்ந்து வந்தேன். ஆனால் என் புருஷன் இடத்தில் என்னால் வேறு யாரையும் நினைச்சு கூட பார்க்க முடியாது நான் அவருக்கு உண்மையாகத்தான் இருந்தேன்.

அவர்தான் எனக்கு உண்மையாக இல்லை. அப்படி நாங்கள் 18 வருடங்கள் வாழ்ந்திருந்தோம். அதற்குப் பிறகு அவருக்கு ரொம்பவும் உடம்பு முடியாமல் போன பிறகுதான் அவர் என்னிடம் கண் கலங்கி அழுதார். நான் உன்னை பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் துரோகம் செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு என்று சொன்னார். அதற்கு பிறகு அவருடைய கடைசி காலத்தில் நான் அவரை நல்லபடியாக பார்த்தேன்.

அவருக்கு பிடித்த சமையல் எல்லாம் செய்து கொடுத்தேன். எனக்கு வேலை கஷ்டம் இருந்தாலும் அவருக்கு எந்த கஷ்டமும் வைத்து விடக்கூடாது என்று நான் பார்த்து பார்த்து செய்தேன். இப்போ அவர் இருந்து 20 வருடம் ஆகிவிட்டது. நான் தான் உழைத்து என்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் என்னுடைய பிள்ளைகளுக்காக நான் ஓடி ஓடி வேலை செய்தேன். இப்போது என்னுடைய பேரப்பிள்ளைகளுக்காக வேலை செய்கிறேன் அவ்வளவுதான் வித்தியாசம் என்று அந்த பேட்டியில் சாந்தி வில்லியம்ஸ் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+